search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஸ்கோடா குஷக்
    X
    ஸ்கோடா குஷக்

    ஸ்கோடா குஷக் புது வேரியண்ட் அறிமுகம் - விலை இவ்வளவு தானா?

    ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் குஷக் மாடலின் புது வேரியண்டை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய குஷக் ஆம்பிஷன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கோடா குஷக் ஆம்பிஷன் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் பேஸ் ஆக்டிவ் வேரியண்ட் மற்றும் ஆம்பிஷன் வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. 

    ஆம்பிஷன் கிளாசிக் MT விலை ரூ. 12 லட்சத்து 69 ஆயரம் என விலை நிர்ணம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆம்பிஷன் கிளாசிக் 1.0 AT மாடல் விலை ரூ. 14 லட்சத்து 09 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய குஷக் ஆம்பிஷன் மாடலில் பின்புற வைப்பர் மற்றும் டி-ஃபாகர், முன்புற பம்ப்பர் ஏர் இன் டேக், சில்வர் முன்புற மற்றும் பின்புற டிப்யூசர்களில் குரோம் ஹைலைட்கள் உள்ளன. இத்துடன் எலெக்ட்ரிக் திறன் கொண்ட ORVM-கள், 16 இன்ச் அலாய் வீல்கள், சில்வர் ரூப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, எல்.இ.டி. ஹெட்லேம்ப், டி.ஆர்.எல்.கள் மற்றும் முன்புற ஃபாக் லைட்கள் உள்ளன.

    இந்த காரின் கேபினில் 10 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் லெதர் கொண்டு ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், ரியர் பார்க்கிங் கேமரா, கூல்டு கிளவ் பாக்ஸ், பின்புறம் பார்சல் டிரே, பேடில் ஷிப்டர்கள், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளது.

    புதிய ஸ்கோடா குஷக் ஆம்பிஷன் மாடலில் 1 லிட்டர், 3 சிலிண்டர், TSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 114 பி.ஹெச்.பி. பவர், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஸ்கோடா நிறுவனம் மே 9 ஆம் தேதி புதிய குஷக் மாண்ட் கர்லோ எடிஷனையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    Next Story
    ×