search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    2022 மாருதி சுசுகி XL6
    X
    2022 மாருதி சுசுகி XL6

    அசத்தல் அம்சங்களுடன் புதிய XL6 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்த மாருதி சுசுகி

    மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 XL6 பேஸ்லிப்ட் மாடல் ஏராளமான புது அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் 2022 மாருசி சுசுகி XL6 பேஸ்லிப்ட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சுசுகி XL6 பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 29 ஆயிரத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 55 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2022 மாருதி சுசுகி XL6 பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் அதிகளவு காஸ்மெடிக் மாற்றங்கள், உள்புறம் மற்றும் என்ஜின் என அனைத்து அம்சங்களும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. 2022 மாருதி சுசுகி XL6 காரில் உள்ள என்ஜினுடன் புது கியர்பாக்ஸ் மற்றும் பேடில் ஷிப்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     2022 மாருதி சுசுகி XL6

    புதிய மாருதி சுசுகி XL6 பேஸ்லிப்ட் மாடலில் 4 ஏர்பேக், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

    2022 XL6 பேஸ்லிப்ட் கார் புதிய 1.5 லிட்டர் K15C சீரிஸ், டூயல் ஜெட் டூயல் VVT பெட்ரோல் என்ஜின் மற்றும் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்திறது. 

    இத்துடன் புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. 2022 மாருதி சுசுகி XL6 மேனுவல் மாடல் லிட்டருக்கு 20.97 கிலோமீட்டர் மைலேஜ், ஆட்டோமேடிக் வெர்ஷன் லிட்டருக்கு 20.27 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது. 
    Next Story
    ×