என் மலர்
இது புதுசு
யமஹா நிறுவனத்தின் எப்.இசட்.எஸ். 25 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது எப்.இசட்.எஸ். 25 மோட்டார்சைக்கிள் மாடலை அப்டேட் செய்தது. அதன்படி இந்த மாடல் தற்போது இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. அந்த வகையில், யமஹா எப்.இசட்.எஸ். 25 மாடல் தற்போது மேட் காப்பர் மற்றும் மேட் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர இந்த மாடல் ரேசிங் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.
முன்னதாக யமஹா எப்.இசட்.எஸ். 25 மோட்டார்சைக்கிள் - படினா கிரீன், வைட்-வெர்மிலான் மற்றும் டார்க் மேட் புளூ என மூன்று நிறங்களில் மட்டுமே கிடைத்தது. தற்போது இரண்டு புதிய நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய சந்தையில் யமஹா எப்.இசட்.எஸ். 25 மோட்டார்சைக்கிள் மொத்தத்தில் ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் யமஹா எப்.இசட்.எஸ். 25 மாடலில் 249சிசி, ஏர் கூல்டு, எஸ்.ஓ.ஹெச்.சி., 4 ஸ்டிரோக், சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.8 பி.எஸ். பவர், 20.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் யமஹா எப்.இசட்.எஸ். 25 மாடலின் விலை ரூ. 1,38,800, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி டார்க் எடிஷன் மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சஃபாரி மாடலை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. தற்போது சஃபாரி மாடலின் டார்க் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் புதிய டார்க் எடிஷன் மாடல் ஜனவரி 17 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த நிலையில், புதிய சஃபாரி டார்க் எடிஷன் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
டாடா சஃபாரி டார்க் எடிஷன் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில், பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்ட ஹெட்லைட்கள், ஒ.ஆர்.வி.எம்., அலாய் வீல்களில் பிளாக் அக்செண்ட்கள் உள்ளன. முன்புற ஃபெண்டரில் டார்க் பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. உள்புறம் டூ-டோன் டேஷ்போர்டு, பிளாக்டு-அவுட் தீம் செய்யப்படுகிறது.
Reign on the throne on every ride with Ventilated Seats Airflow effect.
— Tata Motors Cars (@TataMotors_Cars) January 15, 2022
2 Days To Go, Stay Tuned!
.
.
#Safari#ComingSoon#TataMotorsPassengerVehicles#NewForever#ReclaimYourLifepic.twitter.com/vFrvpPUSp8
புதிய டார்க் எடிஷன் மாடலிலும் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 168 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் டாடா சஃபாரி மாடல் ஹூண்டாய் அல்கசார், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700, எம்.ஜி. ஹெக்டர் பிளஸ் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் கியா கேரன்ஸ் எம்.பி.வி. மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேம்ரி ஹைப்ரிட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அந்நிறுவனம் சத்தமின்றி கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேம்ரி ஹைப்ரிட் மாடல் விலை ரூ. 41.70 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
2019 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட கேம்ரி மாடல் தற்போது அதன் இரண்டாவது அப்டேட்டை பெற்று இருக்கிறது. புதிய பேஸ்லிப்ட் மாடலில் சிறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு கூடுதலாக சில புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2022 கேம்ரி ஹைப்ரிட் மாடல் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது.

புதிய டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடலில் 2.5 லிட்டர், 4 சிலிண்டர் என்ஜின் மற்றும் 160 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 215 பி.ஹெச்.பி. திறன் வழங்குகிறது. மேலும் இந்த கார் ஸ்போர்ட், இகோ மற்றும் நார்மல் என மூன்று டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.
யெஸ்டி பிராண்டு மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விவரங்களை பார்ப்போம்.
யெஸ்டி பிராண்டு இந்திய சந்தையில் மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து ரி-எண்ட்ரி கொடுத்திருக்கிறது. இவை யெஸ்டி அட்வென்ச்சர், ஸ்கிராம்ப்ளர் மற்றும் ரோட்ஸ்டர் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை ரூ. 1.95 லட்சத்தில் துவங்கி ரூ. 2.19 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
மூன்று மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய யெஸ்டி மாடல்கள் விற்பனையகம் வரத்துவங்கியுள்ளன. இந்தியாவில் யெஸ்டி மாடல்கள் ஜாவா விற்பனை மையங்களை பகிர்ந்து கொள்கிறது. இந்தியா முழுக்க 300 ஜாவா விற்பனை மையங்களில் யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

யெஸ்டி ரோட்ஸ்டர் மற்றும் ஸ்கிராம்ப்ளர் மாடல்களில் 334சிசி சிங்கில் சிலிண்டர் 4 ஸ்டிரோக் லிக்விட் கூல்டு டி.ஒ.ஹெச்.சி. என்ஜின் வழங்கப்படுகிறது. ரோட்ஸ்டர் மாடலில் இந்த என்ஜின் 29.7 பி.எஸ். திறன், 29 நியூட்டன் மீட்டர் டார்க் இழவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
யெஸ்டி அட்வென்ச்சர் மாடலில் இந்த என்ஜின் 30.2 பி.எஸ். திறன், 29.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் இந்த தேதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா நிறுவனம் தனது ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை ஜனவரி 20, 2022 அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் நாட்டின் பல்வேறு விற்பனை மையங்களை வந்தடைந்தது. ஏற்கனவே டொயோட்டா ஹிலக்ஸ் பல்வேறு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்திய சந்தையில் டொயோட்டா ஹிலக்ஸ் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் பார்ச்சூனர் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

புதிய டொயோட்டா ஹிலக்ஸ் எமோஷனல் ரெட், கிரே மெட்டாலிக், வைட் பியல் சி.எஸ்., சில்வர் மெட்டாலிக் மற்றும் சூப்பர் வைட் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த மாடல் மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் வரை வாரண்டி கொண்டிருக்கும் என தெரிகிறது.
அறிமுக நிகழ்வை தொடர்ந்து ஹிலக்ஸ் பிக்கப் டிரக் முன்பதிவு ஜனவரி 20 ஆம் தேதியே துவங்க இருக்கிறது. இதன் வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் இந்திய சந்தையில் நீண்ட காலம் சோதனை செய்யப்பட்டது.
யமஹா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்கூட்டர் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் புதிய ரெட்ரோ ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் யமஹா ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்கூட்டர் வட்ட வடிவ ஹெட்லைட், ஓவல் வடிவ டெயில் லைட், இண்டிகேட்டர், மெட்டாலிக் ரக பெயிண்ட், அலாய் வீல் மற்றும் அதிநவீன உபகரணங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
உபகரணங்களை பொருத்தவரை இந்த ஸ்கூட்டரில் செங்குத்தாக பொருத்தப்படும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன்புறம் இரட்டை ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இரு ஸ்டோரேஜில் ஒன்று யு.எஸ்.பி. சார்ஜர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் போர்க், டுவின் கியாஸ் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் ஒற்றை டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்படுகிறது.

யமஹா உருவாக்கி வரும் புதிய ஸ்கூட்டர் 125சி.சி. என்ஜின் கொண்டிருக்குமா அல்லது 110 சி.சி. என்ஜின் கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
ஸ்கோடா நிறுவனம் 2022 கோடியக் பேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 34.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் ஸ்டைல், ஸ்போர்ட்லைன் மற்றும் லாரின் அண்ட் கிலிமெண்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 37.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2022 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் பட்டர்ஃபிளை கிரில், வெர்டிக்கல் ஸ்லாட்கள், குரோம் சரவுண்ட், எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர். எல்., புதிய முன்புற பம்ப்பர், அலாய் வீல்கள், சில்வர் ரூப் ரெயில்கள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள், பூட் லிட் மீது ஸ்கோடா பெயர், எலெக்ட்ரிக் டெயில் கேட் மற்றும் விர்ச்சுவல் பெடல் உள்ளது.
காரின் உள்புறம் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பானரோமிக் சன்ரூப், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படு இருக்கிறது.
டாடா சியாரா மாடல் முழுமையான எலெக்ட்ரிக் திறன் கொண்டு உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சியாரா மாடலை மீண்டும் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இம்முறை இந்த மாடல் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக அறிமுகமாகிறது. புதிய சியாரா இ.வி. மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.
முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் சியாரா மாடல் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஐ.சி. மற்றும் இ.வி. வெர்ஷன்களில் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், புதிய மாடல் முழுமையான எலெக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'பார்ன் எலெக்ட்ரிக்' பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இந்த பிளாட்பார்ம் எதிர்கால டாடா எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்பட இருக்கிறது. தற்போதைய நெக்சான் மற்றும் டிகோர் மாடல்கள் ஐ.சி. என்ஜின் கார்களின் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
புதிய எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்ம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனத்திற்கு தேவையான அம்சங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது. இதில் பேட்டரி பேக் பிளேஸ்மெண்ட், எலெக்ட்ரிக் மோட்டார் ஹவுசிங் மற்றும் இதர பாகங்கள் இடம்பெறுகிறது.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஸ்டோகா ஆட்டோ இந்தியா நிறுவனம் கோடியக் எஸ்.யு.வி. மாடலை ஜனவரி 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்லேவியா மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பெட்ரோல் வாகனங்கள் மட்டுமின்றி ஸ்கோடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய சந்தையில் ஸ்கோடாவின் முதல் எலெக்ட்ரிக் கார் 2023 ஆண்டு எப்.பி.யு. (ஃபுல்லி பில்ட் யூனிட்) வடிவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

'என்யாக் மாடலை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இது வரிகள் சேர்த்து பிரீமியம் மாடலாக அறிமுகமாகும். இந்த எலெக்ட்ரிக் மாடல் கொண்டு இந்திய சந்தையில் முன்னோட்டம் பார்க்க முடியும்,' என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்டு இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தெரிவித்தார்.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஸ்கோடா நிறுவனம் புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், வெளியீட்டுக்கு முன் புதிய கார் அம்சங்களை ஸ்கோடா தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவித்து இருக்கிறது. மேம்பட்ட எஸ்.யு.வி. மாடலை தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் ஸ்லேவியா செடான் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
2022 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் பட்டர்ஃபிளை கிரில், வெர்டிக்கல் ஸ்லாட்கள், குரோம் சரவுண்ட், எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர். எல்., புதிய முன்புற பம்ப்பர், அலாய் வீல்கள், சில்வர் ரூப் ரெயில்கள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள், பூட் லிட் மீது ஸ்கோடா பெயர், எலெக்ட்ரிக் டெயில் கேட் மற்றும் விர்ச்சுவல் பெடல் உள்ளது.

காரின் உள்புறம் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பானரோமிக் சன்ரூப், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் யூனிட், 4x4 சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் இ.கியூ.எக்ஸ்.எக்ஸ். எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
2022 மெர்சிடிஸ் விஷன் இ.கியூ.எக்ஸ்.எக்ஸ். மாடல் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவை பூமியின் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து இருக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் கார் மொத்த எடை 1750 கிலோ ஆகும். இதில் உள்ள பேட்டரி 900 வோல்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. எனினும், இந்த பேட்டரி அளவில் 50 சதவீதமும், எடையில் 30 சதவீதமும் குறைவாக இருக்கிறது. இதன் மேற்கூரையில் மெல்லிய சோலார் பேனல்கள் உள்ளன. இவை காரை 25 கிலோமீட்டர் வரை இயக்க வழி செய்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ சி.என்.ஜி. மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ சி.என்.ஜி. மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. முன்னதாக டியாகோ சி.என்.ஜி. மற்றும் டிகோர் சி.என்.ஜி. மாடல்களின் சோதனை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்கள் சி.என்.ஜி. வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மாற்று எரிபொருள் கொண்டு இயங்கும் மாடல்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் சி.என்.ஜி. கிட் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய துவங்கின. அந்த வரிசையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.
Get ready for the game ChaNGer this 2022!
— Tata Motors Cars (@TataMotors_Cars) December 31, 2021
Coming Soon.#HappyNewYear#NewYear#Happy2022pic.twitter.com/TTaYurEhBw
புதிய டாடா டியாகோ சி.என்.ஜி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சி.என்.ஜி. கிட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் செயல்திறன் பெட்ரோல் யூனிட்டை விட குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.






