என் மலர்tooltip icon

    இது புதுசு

    கியா இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேரன்ஸ் எம்.பி.வி. மாடலின் முன்பதிவு தேதியை அறிவித்து இருக்கிறது.


    கியா இந்தியா நிறுவனம் கேரன்ஸ் எம்.பி.வி. மாடலுக்கான முன்பதிவு ஜனவரி 14, 2022 அன்று துவங்கும் என அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு கியா இந்தியாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் வெளியிடப்பட்டது. 

    இந்திய சந்தையில் புதிய கேரன்ஸ் எம்.பி.வி. மாடல் ஹூண்டாய் அல்கசார், மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6, டாடா சபாரி, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மஹிந்திரா மராசோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய கேரன்ஸ் எம்.பி.வி. இந்தியாவில் கியா நிறுவனத்தின் நான்காவது மாடல் ஆகும்.

     கியா கேரன்ஸ்

    புதிய கேரன்ஸ் மாடல் கியா செல்டோஸ் மாடலில் பயன்படுத்தப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்ப்லிட் ரக லைட்டிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்., மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளன.

    கியா கேரன்ஸ் மாடலில் 1.4 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனும் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் 2022 கோடியக் பேஸ்லிப்ட் மாடலின் உற்பத்தியை துவங்கி இருக்கிறது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2022 கோடியக் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    இந்தியாவில் புதிய ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் சி.பி.யு. (completely knocked down) யூனிட் வடிவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அவுரங்காபாத் ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது. இந்த காரில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

     ஸ்கோடா கோடியக்

    சர்வதேச சந்தையில் இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இதன் விற்பனை சில நாடுகளில் நடைபெற்று வருகிறது. எனினும், தற்போது இந்தியா வரும் பேஸ்லிப்ட் மாடலில் சிறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 

    புதிய ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் ஸ்கோடா நிறுவனத்தின் சூப்பர்ப் மற்றும் ஆக்டேவியா போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 
    ஹூவாய் நிறுவனம் அசத்தல் அம்சங்கள் நிறைந்த புதிய கார் மாடலை சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஹூவாய் தனது இரண்டாவது கார் மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக ஐடோ எம்5 பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்.யு.வி. மாடலை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் முன்பதிவில் ஐந்தே நாட்களில் 6 ஆயிரம் யூனிட்களை கடந்தது.

    புதிய ஹூவாய் ஐடோ எம்5 மாடல் ஒன்று அல்லது இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வழங்கப்படுகிறது. இதன் ரியர்-வீல் டிரைவ் வெர்ஷன் 204 பி.ஹெச்.பி. திறன், 4-வீல் டிரைவ் வெர்ஷன் 224 ஹெச்.பி. திறன் வழங்குகிறது. இதன் 4-வீல் டிரைவ் ஒட்டுமொத்தமாக 428 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்தும். 

     ஹூவாய் ஐடோ எம்5

    இந்த மாடலில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட, 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 125 பி.ஹெச்.பி. திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 40 கிலோவாட் ஹவர் பேட்டரியை சார்ஜ் செய்ய மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும்.
    ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்ட பேட்டரியுடன் நெக்சான் இ.வி. அப்டேட் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டாடா நெக்சான் இ.வி. மாடல் விரைவில் 40 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வேரியண்ட் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இது தற்போது விற்பனை செய்யப்படும் மாடலுடன் சேர்த்து விற்பனையாகும். 

    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றாக நெக்சான் இ.வி. இருக்கிறது. இந்திய சந்தையில் நெக்சான் இ.வி. மாடல் 70 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. தற்போதைய நெக்சான் இ.வி. மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3 பேஸ் மேகனட் சின்க்ரோனஸ் மோட்டார் உள்ளது. 

     டாடா நெக்சான் இ.வி.

    இவை இந்த காருக்கு 127.23 பி.ஹெச்.பி. திறன், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை செல்லும். புதிய பேட்டரி பேக் நெக்சான் இ.வி. மாடலை முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் வழங்கும். கூடுதல் ரேன்ஜ் மட்டுமின்றி காரில் 100 கிலோ எடையை கூடுதலாக எடுத்து செல்ல முடியும்.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஸ்லேவியா செடான் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஸ்கோடா நிறுவனம் தனது புதிய செடான் ஸ்லேவியா மாடல் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. புதிய ஸ்லேவியா ஸ்கோடா ரேபிட் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகிறது. இந்த மாடல் இந்தியாவில் பேஸ்லிப்ட் வடிவில் அறிமுகமாகிறது. 

    இந்த மாடல் ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் வரிசையில் ஸ்கோடாவின் பிரீமியம் செடான் மாடல்களுடன் இணைகிறது. இந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஸ்லேவியா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அறிமுகமானதும் புதிய ஸ்லேவியா மாடல் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

     ஸ்கோடா ஸ்லேவியா

    இந்தியாவில் புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடலின் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. டீசர் வீடியோவில் புதிய பைக் ஆர்.பி., ரேஸ் பெர்பார்மன்ஸ் எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. தற்போதைய தகவல்களின்படி இந்த மோட்டார்சைக்கிள் அபாச்சி 165 ஆர்.பி. மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய அபாச்சி 165 ஆர்.பி. மாடலில் பந்தய களம் சார்ந்த உதிரிபாகங்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிய டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் பஜாஜ் பல்சர் 150 மற்றும் யமஹா எப்.இசட்.16 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     டி.வி.எஸ். ஆர்.பி.

    இந்த மோட்டார்சைக்கிளில் 160சிசி என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 17.6 பி.ஹெச்.பி. திறன், 14.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    முன்னதாக டி.வி.எஸ். நிறுவனம் தனது டி.வி.எஸ். கனெக்ட் செயலியை அப்டேட் செய்தது. அதன்படி டி.வி.எஸ். கனெக்ட் செயலியில் வாட்3வொர்ட்ஸ் (what3words) சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த விதமான பகுதிக்கும் சரியாக சென்றுவிட முடியும்.
    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆப்டிமா ஹெச்.எக்ஸ். ஸ்கூட்டர் புதிய அம்சத்தை பெற்று இருக்கிறது.


    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆப்டிமா ஹெச்.எக்ஸ். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி பெற்று இருக்கிறது. ஹீரோ ஆப்டிமா ஹெச்.எக்ஸ். மாடலின் விலை ரூ. 55,850 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

    சவுகரிய பயணத்திற்கு சீரான வேகத்தில் பயணிக்க இந்த புதிய அம்சம் வழி செய்கிறது. ஸ்கூட்டரில் உள்ள குரூயிஸ் கண்ட்ரோல் பட்டனை கிளிக் செய்து இந்த அம்சத்தை இயக்க முடியும். செயல்படுத்தப்பட்டதும் ஸ்பீடோமீட்டரில் குரூயிஸ் கண்ட்ரோல் சின்னம் காட்சியளிக்கும். மற்ற வாகனங்களில் உள்ளதை போன்றே பிரேக் அல்லது திராட்டிலை டுவிஸ்ட் செய்து குரூயிஸ் கண்ட்ரோல் வசதியை செயலிழக்க செய்யலாம்.

     ஹீரோ ஆப்டிமா ஹெச்.எக்ஸ்.

    'தற்போது குரூயிஸ் கண்ட்ரோல் அம்சம் அனைத்து வாகனங்களிலும் இன்றியமையாத அம்சமாகி விட்டது. மற்ற அம்சங்களான ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது,' என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சொஹிந்தர் கில் தெரிவித்தார்.
    டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் இந்திய சாலைகளில் வலம்வந்த போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் 2021 ஹிலக்ஸ் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது.

    வெளியீட்டுக்கு முன் இந்த மாடல் இந்தியாவில் காணப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் ஹிலக்ஸ் விளம்பர படப்படிப்பின் போது எடுக்கப்பட்டவை போன்று காட்சியளிக்கின்றன. தற்போதைய தகவல்களின் படி ஹிலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

     டொயோட்டா ஹிலக்ஸ்

    ஏற்கனவே இந்த மாடல் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இந்த மாடல் சுமார் 1.8 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் ஐ.எம்.வி.-2 பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டாவின் பார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா போன்ற மாடல்கள் இதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் புதிய டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் விலை ரூ. 30 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இங்கு அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் இசுசு வி-கிராஸ் மாடலுக்கு போட்டியாக அமையும்.
    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.


    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது லைவ்-வயர் இ.வி. பிராண்டின் கீழ் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, ஹார்லி  டேவிட்சன் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் எஸ்2 டெல் மார் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த மாடல் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஏரோ பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த பிளாட்பார்ம் மிடில்-வெயிட் பிரிவுக்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பார்மில் மேலும் பல்வேறு மாடல்கள் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

     ஹார்லி டேவிட்சன்

    மிடில்வெயிட் லைவ்-வயர் எஸ்2 மாடலை தொடர்ந்து குறைந்த எடையில் எஸ்3 மாடல்கள், அதன்பின் அதிக எடை கொண்ட லைவ்-வயர் எஸ்4 மாடல்கள் அறிமுகமாகும் என தெரிகிறது. ஹார்லியின் லைவ்-வயர் அந்நிறுவனத்தின் பிரீமியம் மாடலாக இருக்கும்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் கான்செப்ட் மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது விஷன் இ.கியூ.எக்ஸ்.எக்ஸ். கான்செப்ட் மாடலின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் ஜனவரி 3, 2022 அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய கார் சிறப்பான ஏரோடைனமிக் டிசைன் மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டிருக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. முந்தைய தகவல்களில் மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் இ.கியூ.எக்ஸ்.எக்ஸ். மாடலில் முந்தைய இ.கியூ.எஸ். மாடலை விட 20 சதவீதம் அதிக பேட்டரி செல்கள் இடம்பெற்று இருக்கும்.

     மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.எக்ஸ்.எக்ஸ்.

    இதனால் புதிய கார் முழு சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. முதலில் கான்செப்ட் வடிவில் இந்த காரின் அம்சங்களை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது. இதில் வழங்கப்படும் பெரும்பாலான அம்சங்கள் இதர மாடல்களிலும் வழங்கப்பட இருக்கிறது.
    கியா இந்தியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய கேரன்ஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது.


    கியா இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய கேரன்ஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் கியா நிறுவனத்தின் நான்காவது மாடல் ஆகும். புதிய எஸ்.யு.வி. மாடல் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    புதிய கேரன்ஸ் மாடல் கியா செல்டோஸ் மாடலில் பயன்படுத்தப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்ப்லிட் ரக லைட்டிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்., மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளன.

     கியா கேரன்ஸ்

    கியா கேரன்ஸ் மாடலில் 1.4 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனும் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், யு.வி.ஓ. கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், ஸ்பாட் லைட்கள், ஆம்பியண்ட் மூட் லைட்டிங் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது கோல்டு ஸ்டார் 650 மோட்டார்சைக்கிள் மாடலுக்கான விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது.


    பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது முதல் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் கோல்டு ஸ்டார் என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த மாடலுக்கான முதல் விளம்பரப்படம் அந்நிநிறுவன யூடியூப் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

    புதிய டீசரில் கோல்டு ஸ்டார் மாடலில் உள்ள தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. வீடியோவின் பின்னணியில் என்ஜின் சத்தம் மட்டும் கேட்கிறது. முன்னதாக 1938 முதல் 1963 வரையிலான காலக்கட்டத்தில் இதே பெயரில் மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

     பி.எஸ்.ஏ. கோல்டு ஸ்டார் 650

    தற்போது பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை கிளாசிக் லெஜண்ட்ஸ் எனும் நிறுவனம் வைத்திருக்கிறது. ரூ. 28 கோடி கொடுத்து பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை வாங்கி இருக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தை ஆனந்த் மஹிந்திரா பின்புலமாக இருக்கிறார்.

    கோல்டு ஸ்டார் மாடலில் 652சிசி, சிங்கில் சிலிண்டர், 4 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 45 பி.ஹெச்.பி. திறன், 55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    ×