என் மலர்tooltip icon

    இது புதுசு

    டி.வி.எஸ். ஆர்.பி.
    X
    டி.வி.எஸ். ஆர்.பி.

    புது மோட்டார்சைக்கிள் டீசர் வெளியிட்ட டி.வி.எஸ்.

    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. டீசர் வீடியோவில் புதிய பைக் ஆர்.பி., ரேஸ் பெர்பார்மன்ஸ் எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. தற்போதைய தகவல்களின்படி இந்த மோட்டார்சைக்கிள் அபாச்சி 165 ஆர்.பி. மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய அபாச்சி 165 ஆர்.பி. மாடலில் பந்தய களம் சார்ந்த உதிரிபாகங்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிய டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் பஜாஜ் பல்சர் 150 மற்றும் யமஹா எப்.இசட்.16 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     டி.வி.எஸ். ஆர்.பி.

    இந்த மோட்டார்சைக்கிளில் 160சிசி என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 17.6 பி.ஹெச்.பி. திறன், 14.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    முன்னதாக டி.வி.எஸ். நிறுவனம் தனது டி.வி.எஸ். கனெக்ட் செயலியை அப்டேட் செய்தது. அதன்படி டி.வி.எஸ். கனெக்ட் செயலியில் வாட்3வொர்ட்ஸ் (what3words) சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த விதமான பகுதிக்கும் சரியாக சென்றுவிட முடியும்.
    Next Story
    ×