search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold Star 650"

    • பழைய கோல்டு ஸ்டார் 650 என்ற ரெட்ரோ பைக் மாடலை இந்த பைக் ஒத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
    • ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கிற்க்கு போட்டியாக இந்த பைக் களமிறங்குகிறது.

    பிஎஸ்ஏ என்ற நிறுவனம் தனது கோல்டு ஸ்டார் 650 என்ற பைக்கை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

    பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஆம் ஆண்டு தனது கோல்டு ஸ்டார் 650 மோட்டார்சைக்கிள் மாடலை காட்சிப்படுத்தியது. தற்போது இந்த மாடல் வரும் சுதந்திர தினத்தன்று அறிமுகமாகவுள்ளது.

    1950 - 1960 வரை விற்பனையான கோல்டு ஸ்டார் 650 என்ற பழைய ரெட்ரோ பைக் மாடலை இந்த பைக் ஒத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    இந்த பி.எஸ்.ஏ. கோல்டு ஸ்டார் 650 பைக்கின் ஆரம்ப விலை 4.5 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் பிளாட் சீட்டு மற்றும் வயர்டு ஸ்போக் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த பைக்கில் முன் பக்கம் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் 255 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன இந்த புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் 12 லிட்டர் டேங்க் கொள்ளளவு கொண்டதாகவும், 213 கிலோ எடை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

    கோல்டு ஸ்டார் மாடலில் 652சிசி, சிங்கில் சிலிண்டர், 4 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 45 பி.ஹெச்.பி. திறன், 55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையாகி வரும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கிற்க்கு போட்டியாக இந்த பைக் களமிறங்குகிறது.

    தற்போது பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை கிளாசிக் லெஜண்ட்ஸ் எனும் நிறுவனம் வைத்திருக்கிறது. பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை வாங்கி இருக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆனந்த் மஹிந்திரா பின்புலமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×