search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பிளாக் பேட்ஜ்
    X
    ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பிளாக் பேட்ஜ்

    இந்தியாவில் புது ரோல்ஸ் ராய்ஸ் கார் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
     

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கோஸ்ட் பிளாக் பேட்ஜ் மாடலை அறிமுகம் செய்தது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. எனினும், இதன் விலை பற்றி இதுவரை எந்த தகவலையும் ரோல்ஸ் ராய்ஸ் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு யூனிட்டின் விலையும் வாடிக்கையாளர் முன்பதிவு செய்யும் போது, தேர்வு செய்யும் ஆப்ஷ்களுக்கு ஏற்ப அவர்களிடமே தெரிவிக்கப்படும் என ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்து இருக்கிறது.

    ஸ்டாண்டர்டு மாடலை விட புதிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பிளாக் பேட்ஜ் மாடல் ஓட்டுவோருக்கு முற்றிலும் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும். மேலும் இதில் உள்ள டார்க் காஸ்மெடிக் அம்சங்கள் இளையோருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. பிளாக் பேட்ஜ் மாடலில் ஏராளமான டார்கென்டு ஸ்டைலிங் செய்யப்பட்டு இருக்கிறது.

     ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பிளாக் பேட்ஜ்

    பிளாக் பேட்ஜ் மாடலில் பி-ஸ்போக் 21 இன்ச் கார்பன் பைபர் கம்போசிட் வீல்கள், ஃபுளோட்டிங் ஹப் கேப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் இந்த காரின் வெளிப்புற நிறத்தை வாடிக்கையாளர்கள் 44 ஆயிரம் நிற ஆப்ஷ்களில் இருந்து தேர்வு செய்து கொள்ள முடியும். தற்போது காட்சிக்கு வைக்கப்பட்ட மாடலின் வெளிப்புறம் பிளாக் நிறத்திலும், உள்புறம் மண்டரின் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மாடலில் 6.75 லிட்டர், டுவின் டர்போ V12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 592 ஹெச்.பி. திறன், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது கோஸ்ட் ஸ்டாண்டர்டு மாடலை விட 29 ஹெச்.பி. மற்றும் 50 நியீட்டன் மீட்டர்கள் அதிகம் ஆகும். இத்துடன் 4 வீல் ஸ்டீரிங், ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×