என் மலர்tooltip icon

    இது புதுசு

    லெக்சஸ் RZ 450e
    X
    லெக்சஸ் RZ 450e

    லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் - 450 கி.மீ. ரேன்ஜ் வழங்குகிறது!

    லெக்சஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது எலெக்ட்ரிக் கார் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஜப்பான் நாட்டை சேர்ந்த லெக்சஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லெக்சஸ் RZ 450e எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய RZ மாடல் டொயோட்டா bZ4X எஸ்.யு.வி. மாடலை போன்றே TNGA பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    லெக்சஸ் RZ 450e காரின் ஒட்டுமொத்த தோற்றம் அந்த நிறுவனத்தின் ஆல் எலெக்ட்ரிக் எதிர்காலத்தை பிரதிபலிக்கும் லெக்சஸ் டிசைன் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு லெக்சஸ் இந்த மாடல் விவரங்களை முண்ணோட்டமாக வெளியிட்டு இருந்தது. இந்த காரின் முன்புறம் லெக்சஸ் நிறுவனத்தின் டிரேட்மாக் ஸ்பிண்டில் கிரில் உள்ளது. இது எலெக்ட்ரிக் காரின் சக்திவாய்ந்த அம்சங்கள் மற்றும் சீறிப்பாயும் அக்செல்லரேஷனை குறிக்கும் வகையில் காட்சியளிக்கிறது.

     லெக்சஸ் RZ 450e

    தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலில் லெக்சஸ் நிறுவனம் 71.4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரியை வழங்கி இருக்கிறது. இதே பேட்டரி தான் டொயோட்டா bZ4X மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 362 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும். காம்பேக்ட் எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் இந்த காரில் புதிதாக டைரக்ட் 4 வீல் டிரைவ் பவர்-டிரைன் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இதில் ஒரு மோட்டார் காரின் முன்புறத்திற்கு 203 ஹெச்.பி. திறன், பின்புறத்திற்கு 108 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இவை இணைந்து 312 ஹெச்.பி. பவர், 435 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 159 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×