என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
- ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
- நவம்பர் மாதத்தில் ஹண்டர் மற்றும் கிளாசிக் மாடல்கள் ராயல் என்பீல்டு ஒட்டுமொத்த விற்பனையில் கணிச வரவேற்பை பெற்று கொடுத்துள்ளன.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த ஆண்டு முற்றிலும் புதிய கிளாசிக் 350 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது மீடியோர் 350 மாடல் உருவாக்கப்பட்ட ஜெ பிளாட்ஃபார்மில் உருவாகிய இரண்டாவது மோட்டார்சைக்கிள் ஆகும். கிளாசிக் 350 மாடல் மிடில்வெயிட் மோட்டார்சைக்கிள் பிரிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சில மாதங்களுக்கு முன் விற்பனையகம் வந்த ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளும் இந்திய சந்தையில் அமோக விற்பனையை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு வாகனங்களில் இரண்டாவது குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக ஹண்டர் 350 இருக்கிறது.

கடந்த மாதம் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் 26 ஆயிரத்து 072 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதே மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 19 ஆயிரத்து 601 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இது வருடாந்திர விற்பனையில் 36.23 சதவீத வளர்ச்சி ஆகும். இந்திய சந்தையில் 2022 நவம்பர் மாத விற்பனையில் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்பாவது இடத்தை பிடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹண்டர் 350 மாடல் பத்தாவது இடத்தை பிடித்து இருக்கிறது. 2022 நவம்பர் மாதத்தில் மட்டும் ஹண்டர் 350 மாடல் 15 ஆயிரத்து 588 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 மாடல்கள் சேர்த்து மொத்தத்தில் 42 ஆயிரத்து 290 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
- லெக்சஸ் நிறுவனத்தின் புதிய LX மாடலின் இந்திய வினியோகம் வரும் மாதங்களில் துவங்க இருக்கிறது.
- புது லெக்சஸ் காரில் ADAS அம்சங்கள், நான்கு வித இண்டீரியர் தீம்களை ஆப்ஷனாக கொண்டிருக்கிறது.
லெக்சஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய லெக்சஸ் LX மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய லெக்சஸ் LX மாடலின் விலை ரூ. 2 கோடியே 82 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. லெக்சஸ் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி-இன் மேம்பட்ட வெர்ஷன் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதன் வினியோகம் வரும் மாதங்களில் துவங்குகிறது.
புதிய லெக்சஸ் LX மாடலின் வெளிப்புறம் "Dignified Sophistication" கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஃபிரேம்லெஸ் ஸ்பிண்டில் வடிவ முன்புற கிரில் மற்றும் கிடைமட்ட ஸ்லாட்கள் உள்ளன. இத்துடன் கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், நான்கு ப்ரோஜெக்டர் எல்இடி-க்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பக்கவாட்டில் சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், கின்க்டு விண்டோ லைன், 22 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

காரின் கேபின் ரிவேம்ப் செய்யப்பட்டு டூயல் ஸ்கிரீன் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 12.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு முன்புற இருக்கைகள், ரியர் எண்டர்டெயின்மெண்ட் ஸ்கிரீன்கள், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.
பாதுகாப்பிற்கு லெக்சஸ் LX மாடலில் ADAS அம்சங்களான ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், முன்புறம் மற்றும் பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், டிஜிட்டல் ரியர் வியூ மிரர், 360-டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 3.3 லிட்டர் வி6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 304 ஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக விளங்குகிறது.
- டாடா டியாகோ EV மாடலின் பெரும்பாலான அம்சங்கள் அதன் ICE மாடலில் உள்ளதை போன்றஏ வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இம்முறை விலை உயர்வு நான்கு சதவீதம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காரின் விலை எவ்வளவு அதிகரிக்கும் என்ற விவரங்கள் அடுத்த மாதம் தான் வெளியாகும். விலை உயர்வை அடுத்து டாடா டியாகோ EV மாடல் விலை அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரம் வரை அதிகரிக்கப்படலாம்.
புதிய டியாகோ EV மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் போதே, அதன் விலை அறிமுக சலுகையாக குறைத்து அறிவிக்கப்படுவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருந்தது. மேலும் அறிமுக விலை காரை முதலில் வாங்கும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்தது. எனினும், காருக்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து சலுகை முதல் 20 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

"அறிமுக சலுகை மட்டுமின்றி பேட்டரி விலைகள் 30 முதல் 35 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதும் கார் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்," என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவுக்கான நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார். டியாகோ EV மாடலின் பெரும்பாலான பாகங்கள் அதன் ICE மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
தற்போது இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 49 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக உள்ளது.
- டாடா நெக்சான் EV சீரிஸ் எலெக்ட்ரிக் கார்கள் இந்திய விற்பனையில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் டியாகோ EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக இருக்கும் டாடா மோட்டார்ஸ், தனது வாகன உற்பத்தியை இருமடங்கு அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் 50 ஆயிரம் யூனிட்களை கடக்க இருக்கிறது.
அந்த வகையில், அடுத்த சில மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வியாபரத்தின் மூலம் பில்லியன் டாலர் வருவாய் எட்டி விடும். நெக்சான் மற்றும் டிகோர் EV மாடல்களின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆண்டிற்கு 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் யூனிட்கள் வரை எட்டியிருக்கிறது. தற்போது 2024 நிதியாண்டு வாக்கில் இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக அதிகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

அடுத்த 12-இல் இருந்து 18 மாதங்களுக்குள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஒரு லட்சமாக அதிகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருவகதாக தகவல் வெளியாகி உள்ளது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையை சீராக வைத்திருக்கும் பட்சத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் கோடிகளை வருவாயாக ஈட்ட முடியும்.
இது மூன்று ஆண்டுகளுக்கு முன் கார் வியாபாரத்தில் இருந்து கிடைத்த வருவாய்க்கு இணையானது ஆகும். டியாகோ EV மாடலின் விலை அறிவிக்கப்பட்ட பத்தே நாட்களில், இந்த காரை வாங்க சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர். இதுதவிர 50 ஆயிரம் பேர் டியாகோ EV மீது விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 23 சதவீதம் பேர் முதல் முறை கார் வாங்குவோர் ஆவர்.
- ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புது கோனா மாடல் பாலைவன பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
- புதிய ஹூண்டாய் கோனா நான்கு வேரியண்ட்களிலும் தனித்துவம் மிக்க ஸ்டைலிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் 2023 கோனா மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் கோனா மாடல் நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மாடலில் ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய டிசைன் மொழி பின்பற்றப்பட்டு இருக்கிறது. நான்கு வேரியண்ட்களில் ஒரே மாதிரியான யுனிவர்சல் ஆர்கிடெக்ச்சர் பின்பற்றப்பட்டு இருக்கும் போதிலும், இவற்றை தனித்துவப்படுத்தும் ஸ்டைலிங் வழங்கப்பட்டுள்ளது.
புதிய கோனா மாடல் வழக்கமான ICE ரக என்ஜின், கோனா ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம், கோனா N லைன் மற்றும் கோனா எலெக்ட்ரிக் என நான்கு வெர்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் கோனா எலெக்ட்ரிக் மாடல் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை அடுத்த பாலைவன பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வந்த ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. கோனா EV மாடலில் பிக்சலெட் செய்யப்பட்ட சீம்லெஸ் ஹாரிசான் லேம்ப், பாராமெட்ரிக் கிரில் டிசைன் வழங்கப்பட்டுள்ளது.
காரின் உள்புறம் 12.3 இன்ச் ஹாரிசாண்டல் டிஸ்ப்ளேக்கள், ஒன்று இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆக உள்ளது. இத்துடன் சிங்கில் பேன் சன்ரூஃப், ஆட்டோ டிம்மிங் IRVM, ADAS மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. கோனா EV மாடலின் பவர்டிரெயின் அம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
- நிசான் நிறுவன கார் மாடல்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை அதிரடியான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- நிசான் நிறுவனத்தின் கிக்ஸ் மாடலுக்கு அதிகபட்ச சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நிசான் இந்தியா நிறுவனம் தனது நிசான் மேக்னைட் மற்றும் நிசான் கிக்ஸ் மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரு எஸ்யுவி மாடல்களுக்கும் ரொக்க தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் சர்வீஸ் பேக்கேஜ் வடிவில் ஏராள சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு/மேற்கு, தெற்கு, வடக்கு (இரு பகுதிகள்) என நான்கு பிரிவு வாடிக்கையாளர்களுக்கு நிசான் கிக்ஸ் மாடலுக்கு அசத்தலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
நிசான் கிக்ஸ் கிழக்கு / மேற்கு பகுதிக்கான சலுகைகள்:
டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 30 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ்
டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 18 ஆயிரம் வரை தள்ளுபடி
டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 19 ஆயிரம் வரையிலான தள்ளுபடி

தெற்கு பகுதிக்கான சலுகைகள்:
டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 30 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ்
டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 18 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ்
டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி
டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 19 ஆயிரம் வரையிலான தள்ளுபடி
வடக்கு பகுதிக்கான ஆப்ஷன் 1
டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ்
டர்போ வேரியண்ட்களுக்கு இரண்டு ஆண்டுகள் பராமரிப்பு சர்வீஸ் பேக்கேஜ்
டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு மூன்று ஆண்டுகள் பராமரிப்பு சர்வீஸ் பேக்கேஜ்
வடக்கு பகுதிக்கான ஆப்ஷன் 2
டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ்
டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 18 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ்
டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி
டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 19 ஆயிரம் வரை தள்ளுபடி
அனைத்து பகுதிகளுக்கும் ரூ. 10 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 2 ஆயிரம் வரை ஆன்லைன் புக்கிங் போனஸ் வழங்கப்படுகிறது.
நிசான் மேக்னைட் சலுகை விவரங்கள்:
நிசான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரையிலான இலவச அக்சஸரீக்கள் / ரொக்க தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- கியா நிறுவனம் இந்திய சந்தையில் EV6 ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனை செய்து வருகிறது.
- சர்வதேச சந்தையில் கியா EV6 மாடல் ஏராளமான விருதுகளை வாங்கி குவித்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
கியா இந்தியா நிறுவனம் தனது EV6 எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடலை இந்த ஆண்டு மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5, ஃபோர்டு மஸ்டங் மேக்-இ, ஸ்கோடா என்யாக் iV, ரெனால்ட் மெகன் இ டெக் மற்றும் பியுஜியோட் 308 போன்ற மாடல்களை பின்னுக்குத் தள்ளி சர்வதேச விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறது.
புதிய கியா EV6 மாடல் WLTP சைக்கிள் சோதனையில் முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், ARAI சோதனையில் கியா EV6 மாடல் அதிக ரேன்ஜ் வழங்குவது அம்பலமாகி இருக்கிறது. இந்த காரின் GT லைன் வேரியண்ட் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொண்டிருக்கிறது. இந்த கார் 321 ஹெச்பி பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் ஆல்-வீல் டிரைவ் வேரியண்ட் 77.4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 708 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI சான்று பெற்று இருக்கஇறது. தற்போது கியா EV6 மாடல் இந்தியாவுக்கு CBU முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது. கியா EV6 RWD வேரியண்ட் விலை ரூ. 60 லட்சம் என துவங்குகிறது. இதன் AWD வேரியண்ட் விலை ரூ. 64 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
இந்திய சந்தையில் கியா EV6 எலெக்ட்ரிக் கார் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுவரை கியா நிறுவனம் 200 EV6 யூனிட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் 150 யூனிட்களை வினியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த காரை 350 கிலோவாட் DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது 18 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.
- ஹோண்டா CB300F மோட்டார்சைக்கிளின் இந்திய விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
- இந்த மோட்டார்சைக்கிளில் உள்ள 293சிசி என்ஜின் 24.1 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் தனது CB300F மோட்டார்சைக்கிளுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. ஹோண்டா பிக் விங் விற்பனை மையங்கள் CB300F மாடலின் விலையில் ரூ. 50 ஆயிரம் குறைத்துள்ளன. ஆகஸ்ட் மாத அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா CB300F மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 26 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம் என நிர்ணம் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தற்போதைய விலை குறைப்பை அடுத்து ஹோண்டா CB300F மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. விலை அடிப்படையில் புதிய ஹோண்டா 300 சிசி மோட்டார்சைக்கிள் கேடிஎம் 125 டியூக் மாடலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்பட இருக்கிறது.

ஹோண்டா CB300F மாடலில் 293சிசி, நான்கு வால்வுகள் கொண்ட ஆயில் கூல்டு, SOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.1 ஹெச்பி பவர், 25.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் 5-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் 276mm டிஸ்க், பின்புறம் 220mm டிஸ்க் வழஙஅகப்பட்டு இருக்கிறது. ஹோண்டா CB300F மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல், அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
- மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்கள் இந்திய விற்பனையில் பெருமளவு வரவேற்பை பெற்று வருகிறது.
- அடுத்த மாதம் முதல் மாருதி சுசுகி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல்களை வாங்க முன்பதிவு செய்தவர்கள், அவற்றை டெலிவரி எடுக்க மேலும் சில காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாருதி சுசுகி கார்களின் வினியோகம் அதிகபட்சம் ஒன்பது மாதங்கள் வரை தாமதமாகிறது. கார்களின் காத்திருப்பு காலம், ஒவ்வொரு பகுதி மற்றும் மாடலுக்கு ஏற்ப வேறுபடும்.
அரினா பிரிவில் மாருதி சுசுகி எர்டிகா மாடலை டெலிவரி எடுக்க வாடிக்கையாளர்கள் ஒன்பது மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து பிரெஸ்ஸா மற்றும் ஸ்விஃப்ட் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் முறையே மூன்று மற்றும் 2.5 மாதங்கள் ஆகும். டிசையர் மாடலுக்கு ஒரு மாதமும், ஆல்டோ மாடல் ஒரே வாரத்திலும் டெலிவரி செய்யப்படுகிறது.

இதுதவிர வேகன்ஆர், எஸ் பிரெஸ்ஸோ மற்றும் செலரியோ போன்ற அரினா பிரிவு மாடல்களின் காத்திருப்பு காலம் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ளது. நெக்சா பிரிவில் மாருதி கிராண்ட் விட்டாரா, XL6 மற்றும் பலேனோ மாடல்களின் காத்திருப்பு காலம் மூன்று மாதங்கள் வரை உள்ளது.
மாருதி சியாஸ் மாடலை டெலிவரி எடுக்க வாடிக்கையாளர்கள் 1.5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இக்னிஸ் மாடல் ஒரு மாதத்திற்குள் வினியோகம் செய்யப்படுகிறது. காத்திருப்பு காலம் தவிர மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
- யமஹா நிறுவனத்தின் RX100 மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று விற்பனையில் அசத்தியது.
- இன்றும் பயன்படுத்திய வாகனங்கள் சந்தையில் யமஹா RX100 மாடலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
யமஹா RX100 மோட்டார்சைக்கிள் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என யமஹா மோட்டார் இந்தியா நிறுவன தலைவர் எய்ஷின் சிஹானா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். எனினும், புதிய மாடல் பழைய 2-ஸ்டிரோக் வெர்ஷன் போன்று இல்லாமல் அதிநவீன ரெட்ரோ தோற்றம் கொண்டிருக்கும்.

யமஹா இந்தியா நிறுவனத்தின் பிரபல பிளாட்ஃபார்மாக யமஹா FZ பிளாட்ஃபார்ம் உள்ளது. அந்த வகையில் இதே பிளாட்ஃபார்மில் புது மாடலை உருவாக்கி அதில் இருந்து லாபம் பார்க்க யமஹா இந்தியா முடிவு செய்து இருக்கலாம். இவ்வாறு செய்யும் பட்சத்தில் மாடலின் உற்பத்தி செலவீனங்கள் குறையும். ஆனால், யமஹா நிறுவனம் இவ்வாறு செய்யாது என்றும் புது மாடலில் 149சிசி அல்லது FZ 25 மாடலில் உள்ள என்ஜின் எதுவும் புது மாடலுக்கு பொருந்த்தமாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில் புது மாடலுக்காக யமஹா நிறுவனம் முற்றிலும் புது பிளாட்ஃபார்மை உருவாக்கும் என்றே தெரிகிறது. தற்போதைய 155சிசி, லிக்விட் கூல்டு மோட்டார் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2008 ஆம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே இந்த மோட்டார் அதிக விற்பனையை பெற்று கொடுக்கிறது. அந்த வகையில் இந்த என்ஜின் புதிய RX100 மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். 2026 வரை புதிய யமஹா RX100 மாடல் அறிமுகம் பற்றி எந்த தகவலும் வெளியாகாது என்றே தெரிகிறது.
- மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் கிராஷ் டெஸ்டில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.
- மஹிந்திரா மட்டுமின்றி மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களும் இந்த கிராஷ் டெஸ்டில் கலந்து கொண்டிருந்தன.
குளோபல் NCAP கிராஷ் டெஸ்டிஸ் மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்கார்பியோ N மாடல் சோதனை செய்யப்பட்டது. இதில் அந்த கார் பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கியது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. கார் நேரடியாக மோதியது மட்டுமின்றி, பக்காவாட்டு பகுதியில் இடிக்கும் போதும் சோதனை செய்யப்பட்டது. அதிலும் புதிய ஸ்கார்பியோ நல்ல புள்ளிகளை பெற்று இருக்கிறது.

பக்கவாட்டு பரிசோதனையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N எஸ்யுவி மாடல் 17-க்கு 16 புள்ளிகளை பெற்றது. சைடு போல் டெஸ்டில் "OK" என்ற மதிப்பெண் பெற்றது. இந்த டெஸ்டில் பாடிஷெல் மற்றும் ஃபூட்வெல் பகுதிகள் மிகவும் திடமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பெரியவர்கள் பயணிக்கும் போது நடத்தப்பட்ட பரிசோதனையில் ஸ்கார்பியோ N மாடல் 34-க்கு 29.25 புள்ளிகளை பெற்று இருக்கிறது.
குழந்தைகள் பயணிக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் 49-க்கு 28.93 புள்ளிகளை பெற்றது. இதில் மூன்று ஸ்டார்களையும், பெரியவர்கள் பயணம் செய்யும் போது நடத்திய சோதனையில் ஐந்து ஸ்டார்களை பெற்றது. குளோபல் NCAP வழிமுறைகளின் படி குறிப்பிட்ட புள்ளிகளை பெற்றால் மட்டுமே காருக்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும்.
Photo Courtesy: Global NCAP
- குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் மாருதி சுசுகி, மஹிந்திரா என பல்வேறு முன்னணி நிறுவன கார் மாடல்கள் பரிசோதனை செய்யப்பட்டன.
- கிராஷ் டெஸ்டில் கலந்து கொண்ட கார்கள் பெற்ற முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளன.
குளோபல் NCAP 2022 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலை மீண்டும் ஒரு முறை டெஸ்ட் செய்தது. இதில் புதிய ஸ்விஃப்ட் கார் வெறும் 1 ஸ்டார் பெற்று அதிர்ச்சி அளித்து இருக்கிறது. ஸ்விஃப்ட் மாடலுடன் இக்னிஸ், எஸ் பிரெஸ்ஸோ மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ N போன்ற மாடல்களும் டெஸ்ட் செய்யப்பட்டன. இந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்த புது விதிமுறைகளின் கீழ் இந்த கார்கள் டெஸ்ட் செய்யப்பட்டன.
இதில் டெஸ்ட் செய்யப்பட்ட மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் முன்புறம் இரட்டை ஏர்பேக், சீட் பெல்ட் பிரிடென்ஷனர்கள், ரியர் ISOFIX ஆன்கர்கள், சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய ஸ்விஃப்ட் மாடலை முன்னதாக 2018 வாக்கில் குளோபல் NCAP டெஸ்ட் செய்து இருந்தது. அப்போது இந்த கார் இரண்டு ஸ்டார்களை பெற்று இருந்தது.

2022 ஸ்விஃப்ட் மாடல் பெரியவர்கள் பயணிக்கும் போது மேற்கொள்ளப்பட்ட டெஸ்டில் 34-க்கு வெறும் 19.19 புள்ளிகளையே பெற்று இருந்தது. முன்புறமாக இடிக்கும் போது ஸ்விஃப்ட் கார் ஓட்டுனர் மற்றும் முன்புற இருக்கையில் அமர்ந்து இருந்த பயணிக்கு சிறந்த பாதுகாப்பை அளித்து இருக்கிறது. பக்கவாட்டில் நடத்தப்பட்ட டெஸ்டில் ஸ்விஃப்ட் கார் பயணிகளின் மார்பு பகுதியை சரியாக பாதுகாக்கவில்லை.
குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட டெஸ்டில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடல் 49-க்கு 16.68 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதில் டைனமிக் ஸ்கோர் 12.82 புள்ளிகளும், CRS (சைல்டு ரெஸ்ட்ரைன் சிஸ்டம்) இன்ஸ்டாலேஷன் ஸ்கோர் 3.86 புள்ளிகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.






