search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    நவம்பர் விற்பனையில் மாஸ் காட்டிய ஹண்டர் - ராயல் என்பீல்டு அதிரடி!
    X

    நவம்பர் விற்பனையில் மாஸ் காட்டிய ஹண்டர் - ராயல் என்பீல்டு அதிரடி!

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
    • நவம்பர் மாதத்தில் ஹண்டர் மற்றும் கிளாசிக் மாடல்கள் ராயல் என்பீல்டு ஒட்டுமொத்த விற்பனையில் கணிச வரவேற்பை பெற்று கொடுத்துள்ளன.

    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த ஆண்டு முற்றிலும் புதிய கிளாசிக் 350 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது மீடியோர் 350 மாடல் உருவாக்கப்பட்ட ஜெ பிளாட்ஃபார்மில் உருவாகிய இரண்டாவது மோட்டார்சைக்கிள் ஆகும். கிளாசிக் 350 மாடல் மிடில்வெயிட் மோட்டார்சைக்கிள் பிரிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    சில மாதங்களுக்கு முன் விற்பனையகம் வந்த ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளும் இந்திய சந்தையில் அமோக விற்பனையை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு வாகனங்களில் இரண்டாவது குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக ஹண்டர் 350 இருக்கிறது.

    கடந்த மாதம் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் 26 ஆயிரத்து 072 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதே மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 19 ஆயிரத்து 601 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இது வருடாந்திர விற்பனையில் 36.23 சதவீத வளர்ச்சி ஆகும். இந்திய சந்தையில் 2022 நவம்பர் மாத விற்பனையில் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்பாவது இடத்தை பிடித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து கடந்த மாதம் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹண்டர் 350 மாடல் பத்தாவது இடத்தை பிடித்து இருக்கிறது. 2022 நவம்பர் மாதத்தில் மட்டும் ஹண்டர் 350 மாடல் 15 ஆயிரத்து 588 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 மாடல்கள் சேர்த்து மொத்தத்தில் 42 ஆயிரத்து 290 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    Next Story
    ×