search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    இந்தியாவில் அறிமுகமான புது லெக்சஸ் கார் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
    X

    இந்தியாவில் அறிமுகமான புது லெக்சஸ் கார் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • லெக்சஸ் நிறுவனத்தின் புதிய LX மாடலின் இந்திய வினியோகம் வரும் மாதங்களில் துவங்க இருக்கிறது.
    • புது லெக்சஸ் காரில் ADAS அம்சங்கள், நான்கு வித இண்டீரியர் தீம்களை ஆப்ஷனாக கொண்டிருக்கிறது.

    லெக்சஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய லெக்சஸ் LX மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய லெக்சஸ் LX மாடலின் விலை ரூ. 2 கோடியே 82 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. லெக்சஸ் ஃபிளாக்‌ஷிப் எஸ்யுவி-இன் மேம்பட்ட வெர்ஷன் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதன் வினியோகம் வரும் மாதங்களில் துவங்குகிறது.

    புதிய லெக்சஸ் LX மாடலின் வெளிப்புறம் "Dignified Sophistication" கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஃபிரேம்லெஸ் ஸ்பிண்டில் வடிவ முன்புற கிரில் மற்றும் கிடைமட்ட ஸ்லாட்கள் உள்ளன. இத்துடன் கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், நான்கு ப்ரோஜெக்டர் எல்இடி-க்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பக்கவாட்டில் சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், கின்க்டு விண்டோ லைன், 22 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

    காரின் கேபின் ரிவேம்ப் செய்யப்பட்டு டூயல் ஸ்கிரீன் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 12.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு முன்புற இருக்கைகள், ரியர் எண்டர்டெயின்மெண்ட் ஸ்கிரீன்கள், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பாதுகாப்பிற்கு லெக்சஸ் LX மாடலில் ADAS அம்சங்களான ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், முன்புறம் மற்றும் பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், டிஜிட்டல் ரியர் வியூ மிரர், 360-டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 3.3 லிட்டர் வி6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 304 ஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×