என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    வால்வோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.


    எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக கவனம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக வால்வோ இருக்கிறது. வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்.சி.90 மாடலின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய பிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலின் பெயரை மாற்ற வால்வோ திட்டமிட்டுள்ளதாக வால்வோ கார்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹக்கன் சாமுவேல்சன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். முன்னதாக வால்வோ நிறுவனம் எம்ப்ளா எனும் பெயரை தனது கார் மாடலுக்கு பயன்படுத்த காப்புரிமை கோரி விண்ணப்பத்து இருந்தது. 

     வால்வோ எக்ஸ்.சி.90

    அந்த வகையில் வால்வோ நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் மாடல் எம்ப்ளா என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடலின் இருக்கை உயரமாக இருக்கும். இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும். மேலும் இந்த காரின் பவர்டிரெயின் போல்ஸ்டார் 3 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஆடம்பர எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபிள்யூ. மாடல் ஐ.எக்ஸ். என அழைக்கப்படுகிறது. இது எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் ஆகும். இந்தியாவில் புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். விலை ரூ. 1.16 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    இந்த மாடல் ஏற்கனவே அறிமுகமான மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் ஜாகுவார் எலெக்ட்ரிக் கார் மாடல்களுடன் இணைகிறது. புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி., ஆடி இ-டிரான் மற்றும் ஜாகுவார் ஐ பேஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ்.

    இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். மாடல் எக்ஸ்-டிரைவ்40 எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலின் வினியோகம் ஏப்ரல் 2022 வாக்கில் துவங்குகிறது. இந்த கார் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டுள்ளது. இது அலுமினியம் ஸ்பேஸ் பிரேம் பயன்படுத்துகிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். மாடலில் 76.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காருக்கு 322 பி.ஹெச்.பி. திறன், 630 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்த செய்கின்றன. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 425 கிலோமீட்டர் வரை செல்லும்.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய குஷக் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் குஷக் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமான சில மாதங்களிலேயே குஷக் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவில் 20 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. 

    ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமான முதல் மாடல் குஷக் ஆகும். ஸ்கோடா குஷக் கேண்டி வைட், பிரிலியண்ட் சில்வர், ஹனி ஆரஞ்சு, கார்பன் ஸ்டீல் மற்றும் டொர்னாடோ ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி 1 லிட்டர் டி.எஸ்.ஐ. மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     ஸ்கோடா கார்

    இதன் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் ஸ்கிராம் மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் ஸ்கிராம் மோட்டார்சைக்கிள் விளம்பர படப்பிடிப்பு தளத்தில் இருப்பதாக கூறி புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படப்பிடிப்பு கோவா-வில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

    சமீபத்திய தகவல்களின்படி ஸ்கிராம் 411 மாடலின் ஹெட்லைட் மாஸ்க், ஹேண்ட்கார்டுகள், மெட்டல் ஆயில் கூலர் ஷிரவுட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் நிறமும் தற்போதைய ஹிமாலயன் மாடல்களில் இருப்பதை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

     ராயல் என்பீல்டு ஹிமாலன்

    புதிய ஸ்கிராம் 411 மாடலிலும் 411சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 24.31 பி.எஸ். பவர், 32 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ராயல் என்பீல்டு ஸ்கிராம் 411 விலை ஹிமாலயன் மாடலை விட ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை குறைவாக இருக்கும் என தெரிகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய செலரியோ மாடல் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    மாருதி சுசுகி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை செலரியோ மாடலின் விற்பனை கடந்த மாதம் துவங்கியது. இதுவரை புதிய செலரியோ மாடலை வாங்க சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் புதிய செலரியோ மாடலுக்கான முன்பதிவு நவம்பர் 2 ஆம் தேதி துவங்கியது.

    இதுவரை 15 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு துவங்கிய முதல் இரு மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த காரை வாங்க முன்பதிவு செய்பவர்கள் குறைந்தபட்சம் 12 வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

     மாருதி சுசுகி செலரியோ

    உதிரிபாகங்கள் குறைபாடு காரணமாக மாருதி சுசுகி நிறுவனத்தின் மாதாந்திர உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2021-இல் மட்டும் மாருதி சுசுகியின் உற்பத்தி 60 சதவீதம் சரிவடைந்துள்ளது. தற்போது மாருதி சுசுகி கார்களுக்கான காத்திருப்பு காலம் 9 முதல் 12 வாரங்கள் வரை இருக்கிறது. சி.என்.ஜி. மாடல்களுக்கான காத்திருப்பு காலம் 17 முதல் 18 வாரங்கள் வரை இருக்கிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன மாடல்களின் விலையை அடுத்த மாதம் மாற்றியமைக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களின் விலை உயர்த்தப்பட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜனவரி 2022 முதல் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து செலவீனங்கள் அதிகரித்து வருவதை காரணம் காட்டி டாடா மோட்டார்ஸ் கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது.

    பயணிகள் வாகனங்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் தற்போது நெக்சான், ஹேரியர், சபாரி, அல்ட்ரோஸ், டிகோர் மற்றும் டியாகோ போன்ற மாடல்களும், எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் நெக்சான் இ.வி. மற்றும் டிகோர் இ.வி. போன்ற மாடல்களும் விற்பனை செய்யப்படுகிறது.

     டாடா கார்

    'உதிரி பாகங்கள், இதர பொருட்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜனவரி 2022 முதல் கார்களின் விலையை உயர்த்தும் நிலைக்கு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது,' என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வியாபார பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார்.
    மினி இந்தியா நிறுவனம் தனது கூப்பர் எஸ்.இ. எலெக்ட்ரிக் காரின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


    மினி இந்தியா நிறுவனம் புதிய கூப்பர் எலெக்ட்ரிக் எஸ்.இ. மாடலுக்கான டீசரை அக்டோபர் மாத வாக்கில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தற்போது இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. எனினும், முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களில் 30 யூனிட்களும் விற்றுத்தீர்ந்தது.

    இந்த நிலையில், புதிய மினி கூப்பர் எஸ்.இ. மாடல் மார்ச் 22 ஆம் தேதி அறிமுகமாகும் என மினி இந்தியா அறிவித்து இருக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய கூப்பர் எஸ்.இ. மாடல் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கிறது. இதில் 32.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.

     மினி கூப்பர் எஸ்.இ.

    மேலும் இதில் உள்ள மோட்டார் 181 பி.ஹெச்.பி. திறன், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதில் வழங்கப்படும் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. மேலும் இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும்.
    ஆடி நிறுவனத்தின் புதிய 2022 கியூ7 மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆடி இந்தியா நிறுவனம் 2022 ஆடி கியூ7 எஸ்.யு.வி. மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புதிய ஆடி கார் உற்பத்தி ஔரங்காபாத் ஆலையில் துவங்கியுள்ளது. இந்த கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஆடி நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 45 சதவீதம் கியூ சீரிஸ் மாடல்கள் ஆகும். புதிய கியூ7 முன்புறம் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லைட் யூனிட்கள், பெரிய ஏர் இன்டேக், குரோம் கார்னிஷ், பின்புறமும் எல்.இ.டி. லைட்டிங் உள்ளது.

     2022 ஆடி கியூ7

    ஆடி கியூ7 பல்வேறு ஆடம்பர வசதிகள் நிறைந்த பிரீமியம் மாடல் ஆகும். அம்சங்களை பொருத்தவரை புதிய கியூ7 மாடலில் ரியர்-சைடு ஏர்பேக், ஹீடெட் ஓ.ஆர்.வி.எம்.-கள், மேம்பட்ட டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளது.

    2022 ஆடி கியூ 7 மாடலில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லைட், டெயில்-லைட்கள், பெரிய ஏர் இன்டேக், வட்ட வடிவ வீல் ஆர்ச்கள் உள்ளன. சர்வதேச சந்தையில் புதிய ஆடி கியூ7 மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மாடல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஜூப்பிட்டர் 110 ஸ்கூட்டர் விலையை திடீரென மாற்றியது.


    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் ஜூப்பிட்டர் 110 சிசி ஸ்கூட்டர் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வின் படி ஸ்கூட்டர் விலை தற்போது ரூ. 600 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 

    ஜூப்பிட்டர் 110 புதிய விலை பட்டியல்

    ஷீட் மெட்டல் ரூ. 66,273
    ஸ்டாண்டர்டு 69,298
    இசட்.எக்ஸ். டிரம் பிரேக் ரூ. 72,773
    இசட்.எக்ஸ். டிஸ்க் பிரேக் ரூ. 76,573
    கிளாசிக் ரூ. 76,543

     டி.வி.எஸ். ஜூப்பிட்டர் 110

    டி.வி.எஸ். ஜூப்பிட்டர் 110 மாடல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் வெளிப்புறம் பியூவல் பில்லர் கேப், பெரிய பூட்போர்டு, 21 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ், யு.எஸ்.பி. சார்ஜர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்கூட்டரில் 109.7 சிசி, ஏர்-கூல்டு என்ஜின், சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.37 பி.ஹெச்.பி. திறன், 8.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டி.வி.எஸ். ஜூப்பிட்டர் 110 மாடல் 13 நிறங்களில் கிடைக்கிறது. 
    ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வரும் பறக்கும் கார் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


    பறக்கும் கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் உலகின் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. சில நிறுவனங்கள் தங்களின் ப்ரோடோடைப் மாடல்களையும் ஏற்கனவே அறிமுகம் செய்து, சில விவரங்களையும் வெளியிட்டுள்ளன.

    அந்த வரிசையில் ஹூண்டாய் தனது பறக்கும் கார் கான்செப்ட் மாடலை கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் 2028 வாக்கில் வர்த்தக ரீதியில் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது. 

     ஹூண்டாய் பறக்கும் கார் கான்செப்ட்

    ஐரோப்பாவுக்கான ஹூண்டாய் மூத்த அதிகாரி மைக்கேல் கோல் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பறக்கும் கார்கள் தான் எதிர்காலம் என நம்புகிறோம். இந்த தசாப்தம் முடிவதற்குள் ஹூண்டாய் பறக்கும் கார் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.
    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் குறைந்த விலையில் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றும் இது குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    தற்போது எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இசட்.எஸ். எலெக்ட்ரிக் காரை மட்டும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதன் விலை ரூ. 21 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 24.68 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     எம்.ஜி. எலெக்ட்ரிக் கார்

    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    'அடுத்த நிதியாண்டு இறுதியில் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளோம். இது சர்வதேச பிளாட்பார்மை சார்ந்து உருவாகும் கிராஸ்-ஓவர் மாடல் ஆகும். இந்த பிளாட்பார்மில் தொடர்ந்து புதிய மாடல்கள் உருவாக்கப்பட இருக்கிறது,' என எம்.ஜி. மோட்டார் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா தெரிவித்தார்.
    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.


    ஜீப் இந்தியா நிறுவனத்தின் காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது. முன்னதாக அக்டோபர் மாதம் ஜீப் காம்பஸ் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இதன் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இம்முறை காம்பஸ் மாடல் விலை ரூ. 58 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. 

    1.4 லிட்டர் பெட்ரோல் டி.சி.டி. என்ஜின் கொண்ட காம்பஸ் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 58 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் தவிர அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

     ஜீப் காம்பஸ்

    ஜீப் காம்பஸ் மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 161 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் என்ஜின் 168 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    ×