என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புது மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இவற்றில் ஸ்கிராம் 411 மற்றும் ஹண்டர் 350 உள்ளிட்டவை முதலில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தது. 

    தற்போது ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் அடுத்த ஆண்டு மத்தியில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஒற்றை இருக்கை கொண்ட ஹண்டர் 350 கிட்டத்தட்ட அதன் ப்ரோடோடைப் மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. 

     ராயல் என்பீல்டு ஹண்டர் 350

    புதிய ஹண்டர் 350 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஜெ பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. மீடியோர் 350 மாடலில் வழங்கப்பட்ட 349சிசி என்ஜினே புதிய ஹண்டர் 350 மாடலிலும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 22 பி.ஹெச்.பி. திறன், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான பலேனோ இந்திய விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
     

    மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. நெக்சா விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பலேனோ மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

    இந்திய சந்தையில் அதிவேகமாக பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்த ஹேட்ச்பேக் மாடல் என்ற பெருமையை மாருதி சுசுகி பலேனோ பெற்று இருக்கிறது. இந்திய சந்தையின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல்கள் பிரிவில் பலேனோ மாடல் மட்டும் 25 சதவீதத்திற்கும் அதிக பங்குகளை பெற்று இருக்கிறது.

     மாருதி சுசுகி பலேனோ

    மாருதி சுசுகி பலேனோ மாடல் இந்தியாவில் ஹூண்டாய் ஐ20, டொயோட்டா கிளான்சா, டாடா அல்ட்ரோஸ் மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்தியாவில் பலேனோ மாடல் 2015 ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே வருடத்தில் இந்த கார் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது.
    லம்போர்கினி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் சூப்பர்கார் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    லம்போர்கினி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் சூப்பர்கார் மாடலை 2027 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கி வருவதை லம்போர்கினி உறுதிப்படுத்தி இருந்தது. அந்த வரிசையில் இதன் வெளியீடு பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    'முழுமையாக எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் லம்போர்கினியின் முதல் கார் 2027 அல்லது 2028 ஆண்டு வாக்கில் அறிமுகமாகும். பிளக்-இன் ஹைப்ரிட் மாடல்கள் இதற்கு முன்பே அறிமுகமாகிவிடும்,' என லம்போர்கினி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் வின்கில்மேன் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

     லம்போர்கினி சூப்பர்கார்

    எலெக்ட்ரிக் பிரிவில் கவனம் செலுத்த லம்போர்கினி நிறுவனம் 150 கோடி டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. லம்போர்கினி அறிமுகம் செய்த முதல் எஸ்.யு.வி. மாடல் சந்தையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. இது விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து சந்தைகளிலும் அசத்தலான விற்பனையை பதிவு செய்து வருகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 டீசல் மாடல்களின் வினியோக விவரங்களை பார்ப்போம்.


    மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி.700 மாடலை இந்தியாவில் ரூ. 11.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்து. பின் அக்டோபர் மாதத்தில் எக்ஸ்.யு.வி.700 பெட்ரோல் வேரியண்ட் வினியோகம் துவங்கியது. தற்போது எக்ஸ்.யு.வி.700 டீசல் வேரியண்ட் வினியோகமும் துவங்கி இருப்பதாக மஹிந்திரா அறிவித்து இருக்கிறது.

    புதிய எக்ஸ்.யு.வி.700 டீசல் வேரியண்ட் 2.2 லிட்டர், எம்-ஹாக் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் இருவித டியூனிங்கில் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    அம்சங்களை பொருத்தவரை மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், மல்டி-ஸ்லாட் கிரில், புதிய மஹிந்திரா லோகோ, ஃபாக் லைட்கள், பானரோமிக் சன்ரூஃப், ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.
    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் சிம்பில் எனர்ஜி உலகின் மிகப்பெரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருகிறது.


    சிம்பில் எனர்ஜி நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையே ரூ. 2500 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி சிம்பில் எனர்ஜி நிறுவனம் தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. 

    உற்பத்தி பணிகளை துவங்க சிம்பில் எனர்ஜி முதற்கட்டமாக ஓசூரில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் முதல் ஆலையை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆலை 2022 துவக்கத்தில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

     சிம்பில் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    தமிழ அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி சிம்பில் எனர்ஜி நிறுவனம் முதற்கட்டமாக ரூ. 1000 கோடி முதலீட்டில் தனது இரண்டாவது ஆலையை உருவாக்கும் பணிகளை துவக்க இருக்கிறது. இந்த ஆலை 600 ஏக்கர் பரப்பளவில் உருவாகிறது. இது 2023 ஆம் ஆண்டு வாக்கில் பயன்பாட்டுக்கு வரும்.
    ரெனால்ட் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு இந்தியாவில் அசத்தலான சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ஊரக தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

    ரெனால்ட் டிரைபர் pre-MY2021 மற்றும் MY2021 என இருவிதங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் pre-MY2021 மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் வரையிலான சலுகைகளும் MY2021 மாடலுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான சலுகைகளும் வழங்கப்படுகிறது.

     ரெனால்ட் கார்

    ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு ரூ. 1.30 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் விவசாயிகள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ரூ. 15 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    புதிய கைகர் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகைகள் டிசம்பர் 31 வரை வழங்கப்பட இருக்கின்றன.
    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய டைகர் 1200 மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடலை அறிமுகம் செய்துள்ளது. டிரையம்ப் டைகர் 1200 மாடல் முற்றிலும் புது மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த மாடல் டிரிபில் என்ஜின், புதிய சேசிஸ் மற்றும் குறைந்த எடை கொண்டிருக்கிறது. 

     2022 டிரையம்ப் டைகர் 1200

    டைகர் 900 மாடலை போன்றே 2022 டிரையம்ப் டைகர் 1200 மாடலும்- டைகர் 1200 ஜி.டி. மற்றும் டைகர் 1200 ரேலி ரேன்ஜ் என இரண்டு பிரிவுகளில் கிடைக்கிறது. இவற்றில் ரேலி ரேன்ஜ் ஆஃப்-ரோடு சார்ந்த மாடல் ஆகும். இதில் 21 இன்ச் மற்றும் 18 இன்ச் டியூப்லெஸ் ஸ்போக் வீல்கள் உள்ளன. ஜி.டி. ரேன்ஜ் மாடல்களில் 19 இன்ச் மற்றும் 18 இன்ச் அலுமினியிம் வீல்கள் உள்ளன. 

    புதிய டைகர் 1200 மாடலில் 1160 சிசி, டிரிபில் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. திறன், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் 30 லிட்டர் டேன்க் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஆறு புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வது மட்டுமின்றி சார்ஜிங் உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் திட்டமிடுவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

    சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையை நிர்ணயிக்க உள்நாட்டு உற்பத்தியில் ஹூண்டாய் அதிக கவனம் செலுத்துகிறது. இருச்சகர வாகனங்கள் பிரிவில் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எனினும், பயணிகள் வாகன பிரிவு அதிக வளர்ச்சியை இதுவரை பதிவு செய்யவில்லை.

     ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

    ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருக்கும் எலெக்ட்ரிக் கார்கள் பல்வேறு ஸ்டைல்களில் எஸ்.யு.வி. மற்றும் இதர பிரிவுகளில் விற்பனைக்கு வரும். இந்தியாவில் தற்போது ஹூண்டாய் நிறுவனம் ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனை செய்து வருகிறது.
    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஆக்டிவா 125 பிரீமியம் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.


    ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் புதிய ஆக்டிவா 125 பிரீமியம் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்கூட்டர் டிரம் பிரேக் மாடல் விலை ரூ. 78,725 என்றும் டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ. 82,820 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய பிரீமியம் எடிஷனில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது ஸ்டாண்டர்டு வேரியண்ட்களை விட ரூ. 2 ஆயிரம் விலை அதிகம் ஆகும். இந்த ஸ்கூட்டர் பியல் அமேசிங் வைட் மற்றும் மேட் மெக்னிஃபிசியண்ட் காப்பர் மெட்டாலிக் மற்றும் மேட் ஸ்டீல் பிளாக் மெட்டாலிக் மற்றும் மேட் இயல் சில்வர் மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கிறது.

     ஹோண்டா ஆக்டிவா 125 பிரீமியம் எடிஷன்

    ஆக்டிவா 125 பிரீமியம் எடிஷனிலும் 124சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.18 பி.ஹெச்.பி. திறன், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய 650 சீரிஸ் மோட்டார்சைக்கிள் மாடல்கள் நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன.


    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 ட்வின்ஸ் ஆனிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள் விற்பனை துவங்கிய 120 நொடிகளில் விற்றுத்தீர்ந்தது. இந்த விற்பனையில் மொத்தம் 120 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. மிலனில் நடைபெற்ற இ.ஐ.சி.எம்.ஏ. 2021 விழாவில் ராயல் என்பீல்டு 650 ட்வின் ஆனிவர்சரி எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    சர்வதேச சந்தையில் மொத்தம் 480 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக ராயல் என்பீல்டு அறிவித்தது. இவற்றில் 120 யூனிட்கள் இந்தியாவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. எனினும், விற்பனை துவங்கிய நொடிகளிலேயே 120 யூனிட்களும் விற்றுத்தீர்ந்ததாக ராயல் என்பீல்டு அறிவித்து இருக்கிறது. 

     ராயல் என்பீல்டு 650 ஆனிவர்சரி எடிஷன்

    லிமிடெட் எடிஷன் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் ஆனிவர்சரி எடிஷன் மாடல்களில் ரிச் பிளாக் குரோம் பெயிண்டிங் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 120 ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டது. ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் பிரத்யேக பிளாக்டு-அவுட் ராயல் என்பீல்டு அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. 
    வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டிகுவான் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    வோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் டிகுவான் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 31.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.

    புதிய டிகுவான் பேஸ்லிப்ட் மாடல் நைட்ஷேட் புளூ, பியூர் வைட், ஆனிக்ஸ் வைட், டீப் பிளாக், டால்பின் கிரே, ரிப்ளெக்ஸ் சில்வர் மற்றும் கிங்ஸ் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் டூயல் பாட் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட பம்ப்பர், பெரிய ஏர் இன்டேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

     வோக்ஸ்வேகன் டிகுவான் பேஸ்லிப்ட்

    வோக்ஸ்வேகன் டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பிரீமியம் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    ஆடி இந்தியா நிறுவனம் புதிய ஏ4 ஆடம்பர செடான் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏ4 பிரீமியம் என அழைக்கப்படும் புதிய ஆடி கார் விலை ரூ. 39.99 லட்சம், (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிரீமியம் பிளஸ் வேரியண்டை விட ரூ. 3.70 லட்சம் விலை குறைவு ஆகும். 

    2021 ஏ4 மாடல் தற்போது- பிரீமியம், பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. பிரீமியம் வேரியண்டில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், கிளாஸ் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. 

     ஆடி ஏ4 பிரீமியம்

    புதிய காரில் ஆடி சவுண்ட் சிஸ்டம், 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிரைவ் செலக்ட், சிங்கில் சோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், குரூயிசர் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ஆடி ஏ4 பிரீமியம் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 188 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ×