search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாருதி சுசுகி பலேனோ"

    மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பலேனோ மாடல் காரின் உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. #MarutiSuzuki #baleno
    இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான பலேனோவை அக்டோபர் 2015-இல் அறிமுகம் செய்தது.

    இந்நிலையில், மாருதி சுசுகி பலேனோ உற்பத்தி எண்ணிக்கையை அதிகப்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகமானது முதல் மாருதி சுசுகி விற்பனையில் பலேனோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இதுவரை பலேனோ மாடல் மட்டும் அறிமுகமான மூன்றே ஆண்டுகளில் சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிக கார்களை விற்பனை செய்திருப்பதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. இத்தகைய மைல்கல் சாதனையை படைக்கும் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக மாருதி பலேனோ இருக்கிறது.

    நெக்சா பிரீமியம் விற்பனையகங்களின் வெற்றிக்கு மாருதி பலேனோ முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாகவும் பலேனோ இருக்கிறது.



    உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்கா போன்ற நாடுகளில் மாருதி பலேனோ ஏற்றுமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி பலேனோ ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    ஜப்பானில் ஏப்ரல் 2018 காலக்கட்டத்தில் மட்டும் மாருதி பலேனோ சுமார் 20,000-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. சமீபத்தில் அறிமுகமான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் பலேனோவுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை எதுவும் செய்யமுடியாத சூழல் நிலவி வருகிறது.

    இந்தியாவில் பலேனோ விற்பனைக்கு முக்கிய காரணமாக இதன் விலை கவர்ச்சிகர வடிவமைப்பு உள்ளிட்டவை இருக்கின்றன. மாருதி பலேனோ மாடலின் வடிவமைப்பு இளைஞர்களை கவரும் வகையில் ஸ்போர்ட் மற்றும் கூர்மையான தோற்றம் கொண்டிருக்கிறது.

    மாருதி பலேனோ ஆரம்ப விலை ரூ.5.35 லட்சத்தில் துவங்கி, டாப் என்ட் மாடல் ரூ.8.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. #MarutiSuzuki #baleno
    ×