என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய விற்பனையில் இதுவரை இல்லாத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.


    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 5 ஆயிரம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை வினியோகம் செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 100 சதவீதம் அதிகம் ஆகும். 

    விற்பனையில் மேட் இன் இந்தியா மாடல்களான பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜி.எஸ். அதிக பங்கு வகித்துள்ளன. பி.எம்.டபிள்யூ. மோட்டராட் வருடாந்திர விற்பனையில் 90 சதவீதம் பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஜி.எஸ். மாடல் ஆகும். 

     பி.எம்.டபிள்யூ. மோட்டார்சைக்கிள்

    இதைத் தொடர்ந்து பி.எம்.டபிள்யூ. சி 400 ஜி.டி., ஆர் 1250 ஜி.எஸ்./ஜி.எஸ்.ஏ, பி.எம்.டபிள்யூ. ஆர்18 கிளாசிக், பி.எம்.டபிள்யூ. எஸ் 1000 ஆர் மற்றும் பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர்.ஆர். உள்ளிட்ட மாடல்களை பி.எம்.டபிள்யூ. மோட்டராட் விற்பனை செய்து வருகிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சி400 ஜி.டி., பி.எம்.டபிள்யூ. ஆர் 1250 ஜி.எஸ்., பி.எம்.டபிள்யூ. ஆர் 1250 ஜி.எஸ். அட்வென்ச்சர், பி.எம்.டபிள்யூ. ஆர் நைன் டி, பி.எம்.டபிள்யூ. ஆர் நைன் டி ஸ்கிராம்ப்ளர், பி.எம்.டபிள்யூ. எஸ் 1000 ஆர், புதிய பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர்.ஆர். மற்றும் பி.எம்.டபிள்யூ. ஆர் 18 கிளாசிக் போன்ற மாடல்களை புதிதாக அறிமுகம் செய்தது.
    கியா இந்தியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய கேரன்ஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது.


    கியா இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய கேரன்ஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் கியா நிறுவனத்தின் நான்காவது மாடல் ஆகும். புதிய எஸ்.யு.வி. மாடல் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    புதிய கேரன்ஸ் மாடல் கியா செல்டோஸ் மாடலில் பயன்படுத்தப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்ப்லிட் ரக லைட்டிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்., மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளன.

     கியா கேரன்ஸ்

    கியா கேரன்ஸ் மாடலில் 1.4 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனும் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், யு.வி.ஓ. கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், ஸ்பாட் லைட்கள், ஆம்பியண்ட் மூட் லைட்டிங் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    டொயோட்டா நிறுவனமும் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலை ஜனவரி 1, 2022 முதல் உயர்த்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது. மற்ற நிறுவனங்களை போன்றே டொயோட்டாவும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதையே விலை உயர்வுக்கு காரணமாக தெரிவித்துள்ளன.

    சமீப மாதங்களில் டொயோட்டா நிறுவனம் சில புது மாடல்கள் மற்றும் பேஸ்லிப்ட் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதுதவிர சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் தட்டுப்பாடு காரணமாக வாகனங்களுக்கான காத்திருப்பு காலம் அதிகரித்து இருக்கிறது. அதன்படி சிறிய மற்றும் எஸ்.யு.வி. மாடல்களை பெற பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

     டொயோட்டா கார்

    வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தி மற்றும் வினியோக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதே நிலை அடுத்த ஆண்டும் தொடரும் என கூறப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு சமீபத்திய பண்டிகை கால விற்பனை மோசமாக நடைபெற்றது என ஆட்டோமொபைல் டீலர் அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்களை வினியோகம் செய்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை வினியோகம் செய்ய துவங்கி இருக்கிறது. முன்னதாக அக்டோபர் 25 இல் துவங்கி டிசம்பர் 25 ஆம் தேதிக்குள் வினியோகம் செய்ய ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டது.

    உற்பத்தி பணிகளை முடுக்கிவிட்டு வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஸ்கூட்டர்களை வினியோகம் செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மூத்த விளம்பர அதிகாரி வருன் தூபே தெரிவித்தார்.

     ஓலா எஸ்1 சீரிஸ் வினியோகம்

    'ஓலா வளாகத்தில் முதற்கட்ட எஸ்1 வாடிக்கையாளர்களை அழைத்து வந்துள்ளது சிலிர்க்க வைக்கிறது. எலெக்ட்ரிக் வாகன புரட்சிக்கு உண்மையான காரணமான எங்களின் வாடிக்கையாளர்களுக்கு நன்றி,' என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.
    டேட்சன் நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.


    டேட்சன் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஆண்டு இறுதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய விவரங்கள் டேட்சன் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. டேட்சன் நிறுவனத்தின் ரெடி-கோ, கோ மற்றும் கோ பிளஸ் எம்.பி.வி. போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் டிசம்பர் 31 ஆம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகை பலன்கள் கார் மாடல்களின் வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும்.

     டேட்சன் சலுகை

    டேட்சன் ரெடி-கோ மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் விலை ரூ. 3.98 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 4.96 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோ ஹேட்ச்பேக் மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களுக்கும் ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. டேட்சன் கோ விலை ரூ. 4.02 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 6.51 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டேட்சன் கோ பிளஸ் மாடல் விலை ரூ. 4.26 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது கோல்டு ஸ்டார் 650 மோட்டார்சைக்கிள் மாடலுக்கான விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது.


    பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது முதல் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் கோல்டு ஸ்டார் என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த மாடலுக்கான முதல் விளம்பரப்படம் அந்நிநிறுவன யூடியூப் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

    புதிய டீசரில் கோல்டு ஸ்டார் மாடலில் உள்ள தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. வீடியோவின் பின்னணியில் என்ஜின் சத்தம் மட்டும் கேட்கிறது. முன்னதாக 1938 முதல் 1963 வரையிலான காலக்கட்டத்தில் இதே பெயரில் மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

     பி.எஸ்.ஏ. கோல்டு ஸ்டார் 650

    தற்போது பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை கிளாசிக் லெஜண்ட்ஸ் எனும் நிறுவனம் வைத்திருக்கிறது. ரூ. 28 கோடி கொடுத்து பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை வாங்கி இருக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தை ஆனந்த் மஹிந்திரா பின்புலமாக இருக்கிறார்.

    கோல்டு ஸ்டார் மாடலில் 652சிசி, சிங்கில் சிலிண்டர், 4 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 45 பி.ஹெச்.பி. திறன், 55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    கே.டி.எம். நிறுவனத்தின் புதிய ஆர்.சி. 125 மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    புதிய 2022 கே.டி.எம். ஆர்.சி. 125 மாடல் அக்டோபர் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சில மாதங்கள் தாமதமாகி புதிய ஆர்.சி. 125 தற்போது விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இந்தியாவில் 2022 கே.டி.எம். ஆர்.சி. 125 விலை ரூ. 1.82 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய மாடலின் எடை முந்தைய மாடலை விட 3.4 கிலோ வரை குறைவாக இருக்கிறது. இதில் 13.7 லிட்டர் பியூவல் டேன்க் உள்ளது. இந்த மாடலில் 124சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பெரிய ஏர்பாக்ஸ் உள்ளது. 

     2022 கே.டி.எம். ஆர்.சி. 125

    மற்ற அம்சங்களை பொருத்தவரை 2022 கே.டி.எம். ஆர்.சி. 125 மாடலில் புதிய எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், முன்புறம் 320 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய கே.டி.எம். ஆர்.சி. 125 மாடல் யமஹா ஆர்.15 எஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விற்றுத்தீர்ந்தது.


    பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை இந்த வாரம் தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதற்குள் இந்த கார் விற்றுத்தீர்ந்தது என பி.எம்.டபிள்யூ. அறிவித்து இருக்கிறது. ஆன்லைனில் நடைபெற்ற முன்பதிவில் முதற்கட்ட யூனிட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தது என பி.எம்.டபிள்யூ. இந்தியா தெரிவித்தது.

    இந்தியாவில் புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்குகிறது. இரண்டாம் கட்ட முன்பதிவுகள் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் துவங்குகிறது.

     பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ்.

    "இத்தகைய வரவேற்பை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதல் நாளிலேயே அனைத்து யூனிட்களும் விற்றுத்தீர்ந்துள்ளன. இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-யை வாங்க நினைக்கும் அனைத்து வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய ஆயத்தமாகி வருகிறோம்," என பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பவா தெரிவித்தார். 
    மஹிந்திரா நிறுவனத்தின் 2022 ஸ்கார்பியோ மாடலில் வழங்கப்பட இருக்கும் என்ஜின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடலை உருவாக்கும் பணிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஸ்கார்பியோ தற்போதைய மாடலை விட அசத்தலான வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்கார்பியோ சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்.யு.வி.700 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த கார் முந்தைய மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும் என்றும், அதிக இடவசதி கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் உள்புறம் அதிநவீன வசதியுடன் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

     மஹிந்திரா ஸ்கார்பியோ

    2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் இருவித டியூனிங்கில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின், 2 லிட்டர் எம்-ஸ்டேலியன் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 7 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 2022 சி.இ.எஸ். நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கார் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது.


    ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் 2022 சர்வதேச மின்சாதன விழாவில் (சி.இ.எஸ்.) முக்கிய அறிவிப்புகள் மட்டுமின்றி சுவாரஸ்யமான தகவல்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். எம்60 மாடலை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் நிறம் மாறும் தொழில்நுட்பத்தை பி.எம்.டபிள்யூ. அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய கார் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி காரின் வெளிப்புற நிறத்தை ஒரு பட்டனை தட்டினால் மாற்றிக் கொள்ளலாம். இந்த தொளழில்நுட்பத்தில் எத்தனை நிறங்களை மாற்றிக் கொள்ள முடியும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய தொழில்நுட்பம் எந்த காரில் அறிமுகமாகும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

     பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். டிரைவ் 50

    எனினும், இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய தொழில்நுட்பம் ஐ.எக்ஸ். எம்60 மாடலில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். எம்60 மாடலில் 111.5 கிலோவாட் ஹவர் பேட்டரி, இரட்டை மோட்டார்கள் வழங்கப்படுகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடல் இந்திய உற்பத்தி விவரங்களை பார்ப்போம்.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது மேம்பட்ட கோடியக் மாடலின் உற்பத்தியை மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் ஆலையில் துவங்கியது. இந்தியாவில் புதிய ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர் 4 சிலிண்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     ஸ்கோடா கோடியக்

    தோற்றத்தில் ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் பிளாக்டு-அவுட் பட்டர்ஃபிளை கிரில், புதிய ஹெட்லேம்ப்கள், பக்கவாட்டில் மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள், பிளாக் ஒ.ஆர்.வி.எம்.கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில்-லைட்கள் உள்ளன.
    கே.டி.எம். நிறுவனம் தனது புதிய 390 அட்வென்ச்சர் ரேலி மோட்டார்சைக்கிளை இந்தியாவின் வட மாநிலங்களில் சோதனை செய்து வருகிறது.


    கே.டி.எம். நிறுவனத்தின் புதிய 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதோனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. கே.டி.எம். 390 அட்வென்ச்சர் ரேலி பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் மேம்பட்ட மாடல் ஆகும்.

    தற்போது விற்பனை செய்யப்படும் 390 அட்வென்ச்சர் மாடலை விட புதிய அட்வென்ச்சர் ரேலி மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் முன்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு, ஹெட்லேம்ப் சற்றே உயரமாக பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் முன்புற கவுல் அளவில் பெரியதாகவும், உயரமான விண்ட்ஸ்கிரீன், டி.எப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

     கே.டி.எம். 390

    புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் ரேலி மாடலிலும் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. திறன், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ×