search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொயோட்டா பார்ச்சூனர்"

    • வரும் மாதங்களில் மற்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
    • இந்த வேரியண்ட் பல நிறங்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் தனது பார்ச்சூனர் எஸ்.யு.வி.-இன் மைல்டு ஹைப்ரிட் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த மாடல் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பார்ச்சூனர் MHEV மாடலில் உள்ள மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட ஹிலக்ஸ் MHEV மாடலில் உள்ளதை போன்றதாகும்.

    தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து பார்ச்சூனர் மைல்டு ஹைப்ரிட் மாடல் வரும் மாதங்களில் மற்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றத்தில் இந்த மாடல் பார்க்க வழக்கமான பார்ச்சூனர் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த வேரியண்ட் பல நிறங்களில் கிடைக்கிறது.

     


    ஹிலக்ஸ் மைல்டு ஹைப்ரிட் போன்றே பார்ச்சூனர் மைல்டு ஹைப்ரிட் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கூடுதலாக 16 ஹெச்.பி. பவர், 42 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள என்ஜின் 201 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. பார்ச்சூனர் ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மைல்டு ஹைப்ரிட் வெர்ஷன் 5 சதவீதம் வரை கூடுதல் மைலேஜ் வழங்கும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது. இத்துடன் இந்த என்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. மேலும் 2WD மற்றும் 4WD வசதி வழங்கப்படுகிறது.

    ×