என் மலர்
ஆட்டோ டிப்ஸ்

டேட்சன் கார்
கார் மாடல்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகை அறிவித்த டேட்சன்
டேட்சன் நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
டேட்சன் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஆண்டு இறுதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய விவரங்கள் டேட்சன் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. டேட்சன் நிறுவனத்தின் ரெடி-கோ, கோ மற்றும் கோ பிளஸ் எம்.பி.வி. போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் டிசம்பர் 31 ஆம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகை பலன்கள் கார் மாடல்களின் வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும்.

டேட்சன் ரெடி-கோ மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் விலை ரூ. 3.98 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 4.96 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோ ஹேட்ச்பேக் மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களுக்கும் ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. டேட்சன் கோ விலை ரூ. 4.02 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 6.51 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டேட்சன் கோ பிளஸ் மாடல் விலை ரூ. 4.26 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story






