என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
இத்தாலி நாட்டில் பயன்படுத்தாத நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார் மாடல் ஒன்று சுற்றுலா தளமாகி இருக்கிறது.
ஒரு கார் பயன்படுத்தாத நிலையில் இருந்தால், அது பாழாகி தான் போகும். எல்லோருக்கும் இது நன்றாகவே தெரியும். ஆனால், இங்கு மட்டும் பயன்படுத்தாத கார் ஒன்று மக்கள் பொழுதுபோக்கிற்காக வந்து காரை பார்த்து செல்லும் வகையில் சுற்றுலா தளமாகி இருக்கிறது.
1970-களில் உருவாக்கப்பட்ட லான்சியா ஃபுல்வியா பெர்லினா ஒரே இடத்தில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஓடோமீட்டரில் அதிக மைல்களை கடக்கவில்லை. எனினும், ஒரே இடத்தில் 47 ஆண்டுகளாக இந்த கார் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

கடந்த 47 ஆண்டுகளில் இந்த கார் ஒரு இன்ச் அளவும் அசையவில்லை. இத்தாலி நாட்டின் காங்கிலியானோ பகுதியின் பொது நிறுத்தமிடத்தில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உரிமையாளர் 2019 ஆம் ஆண்டு வரை செய்தித்தாள் ஸ்டாண்டை நடத்தி வந்துள்ளார். ஒவ்வொரு நாளும் இந்த காரில் செய்தித்தாளை வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் இந்த கார் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், 1974 முதல் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணமும் மர்மமாகவே இருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் இந்திய சாலைகளில் வலம்வந்த போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் 2021 ஹிலக்ஸ் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது.
வெளியீட்டுக்கு முன் இந்த மாடல் இந்தியாவில் காணப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் ஹிலக்ஸ் விளம்பர படப்படிப்பின் போது எடுக்கப்பட்டவை போன்று காட்சியளிக்கின்றன. தற்போதைய தகவல்களின் படி ஹிலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த மாடல் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இந்த மாடல் சுமார் 1.8 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் ஐ.எம்.வி.-2 பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டாவின் பார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா போன்ற மாடல்கள் இதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் புதிய டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் விலை ரூ. 30 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இங்கு அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் இசுசு வி-கிராஸ் மாடலுக்கு போட்டியாக அமையும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ.கியூ.எஸ். மாடல் பாதுகாப்பு சோதனையில் அசத்தி இருக்கிறது.
2021 மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.எஸ். மாடல் யூரோ என்கேப் (NCAP) பாதுகாப்பு சோதனையில் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. ஆடம்பர எலெக்ட்ரிக் செடான் மாடலான இ.கியூ.எஸ். பெரியவர்கள் பயணிக்கும் பாதுகாப்பில் 96 சதவீதம் புள்ளிகளையும், குழந்தைகள் பயணிக்கும் போது 91 சதவீத புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.
இந்த ஆண்டு யூரோ பாதுகாப்பு சோதனையில் பங்கேற்ற எந்த கார் மாடலும் இத்தனை புள்ளிகளை பெறவில்லை. 2480 கிலோ எடை கொண்டிருக்கும் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் சேஃப்டி அசிஸ்ட் பிரிவில் 80 சதவீத புள்ளிகளை பெற்றுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடம்பர எலெக்ட்ரிக் செடான் மாடல் பல்வேறு உயர் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.

புதிய எலெக்ட்ரிக் கார் இரண்டு விதமான பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இந்த கார் இ.கியூ.எஸ்.450 மற்றும் இ.கியூ.எஸ்.580 4மேடிக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை முறையே 333 ஹெச்.பி. திறன், 523 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் வரை செல்லும்.
இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் புதிய இசட்650ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் வினியோகம் துவங்கி இருக்கிறது.
கவாசகி இந்தியா நிறுவனம் புதிய இசட்650ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது இதன் வினியோகம் துவங்கி இருக்கிறது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 6.65 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கவாசகி மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ஹோண்டா சி.பி.650 ஆர் மற்றும் ராயல் என்பீல்டு இண்டர்செப்டார் 650 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மாடலில் 649சிசி, பேரலெல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 67.3 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இந்த மாடலில் சிங்கில் பாட் வட்ட வடிவ ஹெட்லைட், குரோம் சரவுண்ட், ரெட்ரோ-ஸ்டைல் டுவின் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வட்ட வடிவ ரியர்-வியூ மிரர், உள்ளது. மேலும் இதில் ஸ்ப்லிட் ஸ்டைல் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் உள்ளன. இந்தியாவில் புதிய கவாசகி இசட்650ஆர்.எஸ். மாடல் கேண்டி எமிரால்டு கிரீன் மற்றும் மெட்டாலிக் மூன்டஸ்ட் கிரே நிறங்களில் கிடைக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்த இருக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜனவரி 1, 2022 அன்று அமலுக்கு வருகிறது. கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு அமையும்.
முன்னதாக ஸ்கோடா குஷக் ஆக்டிவ் 1.0 டி.எஸ்.ஐ. எம்.டி. வேரியண்ட் விலை ரூ. 29 ஆயிரம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புதிய தலைமுறை ஆக்டேவியா மற்றும் முற்றிலும் புதிய குஷக் மாடல்களை அறிமுகம் செய்தது.

அடுத்த ஆண்டு மேலும் இரண்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக கோடியக் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகமாகிறது. இந்த மாடல் காஸ்மெடிக் மாற்றங்கள், புதிய பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது லைவ்-வயர் இ.வி. பிராண்டின் கீழ் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் எஸ்2 டெல் மார் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாடல் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஏரோ பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த பிளாட்பார்ம் மிடில்-வெயிட் பிரிவுக்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பார்மில் மேலும் பல்வேறு மாடல்கள் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

மிடில்வெயிட் லைவ்-வயர் எஸ்2 மாடலை தொடர்ந்து குறைந்த எடையில் எஸ்3 மாடல்கள், அதன்பின் அதிக எடை கொண்ட லைவ்-வயர் எஸ்4 மாடல்கள் அறிமுகமாகும் என தெரிகிறது. ஹார்லியின் லைவ்-வயர் அந்நிறுவனத்தின் பிரீமியம் மாடலாக இருக்கும்.
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் அமேஸ் காம்பேக்ட் செடான் மாடல் இரண்டு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ் மாடல் உள்நாட்டில் இதுவரை 4.6 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 2018 ஆண்டில் அமேஸ் இரண்டாம் தலைமுறை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோண்டா அமேஸ் மாடலை வாங்கியவர்களில் 20 சதவீதம் பேர் சி.வி.டி. டிரான்ஸ்மிஷனை தேர்வு செய்துள்ளனர். 40 சதவீதம் பேர் முதல் முறையாக கார் வாங்கியவர்கள் ஆகும். மற்ற மாடல்களை போன்றே அமேஸ் மாடலும் ஹோண்டாவின் ராஜஸ்தான் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

அமேஸ் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 90 பி.ஹெச்.பி. திறன், 110 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 99 பி.ஹெச்.பி. திறன், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவில் ஹோண்டா அமேஸ் மாடல் மாருதி சுசுகி டிசையர், டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் ஆரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
பி.எம்.டபிள்யூ. மற்றும் டி.வி.எஸ். மோட்டராட் நிறுவனங்கள் இணைந்து புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.
இந்திய இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பி.எம்.டபிள்யூ. மோட்டராட் உடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.
முன்னதாக 2013 ஆம் ஆண்டு இருநிறுவனங்கள் கூட்டணி அமைத்து டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310, பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜி.எஸ். மாடல்களை அறிமுகம் செய்தன. இந்த கூட்டணி காரணமாக இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை வளர்ச்சி பெற துவங்கியது.

மேலும் இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 5 ஆயிரம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை வினியோகம் செய்து பி.எம்.டபிள்யூ. மோட்டராட் புதிய மைல்கல் எட்டியது. இதில் 90 சதவீத யூனிட்கள் ஜி சீரிஸ் மாடல்கள் ஆகும். இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் முதல் மாடல் அடுத்த 24 மாதங்களுக்குள் அறிமுகமாகிறது.
கேரளா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய புதுவிதமான சார்ஜிங் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துவிட்டது. விலை உயர்வை தொடர்ந்து பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதன் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துவருகிறது.
இதுதவிர மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகளை வழங்குகிறது. எனினும், எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்புகள் இன்னும் போதுமான அளவு வளர்ச்சி பெறாத நிலையிலேயே இருக்கிறது.

இந்தியா முழுக்க எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்த பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கேரளா மாநில மின்துறை சார்பில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய புது திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி மின்கம்பங்களில் எலெக்ட்ரிக் சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சார்ஜர்களை எலெக்ட்ரிபை (Electrify) எனும் செயலி மூலம் பயன்படுத்தலாம். முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் கோழிக்கோடு மாவட்டத்தில் பத்து சார்ஜர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சார்ஜ் செய்வதற்கான யூனிட் ஒன்றுக்கு ரூ. 9 கட்டணம் (வரிகள் இன்றி) வசூலிக்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் கான்செப்ட் மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது விஷன் இ.கியூ.எக்ஸ்.எக்ஸ். கான்செப்ட் மாடலின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் ஜனவரி 3, 2022 அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய கார் சிறப்பான ஏரோடைனமிக் டிசைன் மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டிருக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. முந்தைய தகவல்களில் மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் இ.கியூ.எக்ஸ்.எக்ஸ். மாடலில் முந்தைய இ.கியூ.எஸ். மாடலை விட 20 சதவீதம் அதிக பேட்டரி செல்கள் இடம்பெற்று இருக்கும்.

இதனால் புதிய கார் முழு சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. முதலில் கான்செப்ட் வடிவில் இந்த காரின் அம்சங்களை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது. இதில் வழங்கப்படும் பெரும்பாலான அம்சங்கள் இதர மாடல்களிலும் வழங்கப்பட இருக்கிறது.
ஆடி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கியூ7 மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது.
2022 ஆடி கியூ7 மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இந்தியாவில் புதிய பி.எஸ்.6 புகைவிதிகள் அமலுக்கு வந்த போது ஆடி கியூ7 சீரிஸ் விற்பனை அதிரடியாக நிறுத்தப்பட்டது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2021 ஆடி கியூ5 மாடலை போன்றே புதிய கியூ7 மாடலும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். இதில் 3 லிட்டர் பெட்ரோல் யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாடலில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லைட்கள், பம்ப்பர் மற்றும் ஏர் டேம்களில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன் டேஷ்போர்டு டுவின்-ஸ்கிரீன் எம்.எம்.ஐ. டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதில் 10.1 இன்ச் மெயின் டிஸ்ப்ளே, 8.6 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. முன்னதாக புதிய ஆடி கியூ7 மாடலின் உற்பத்தி பணிகள் ஔரங்காபாத் ஆலையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
பெனலி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பெனலி டி.ஆர்.கே. 251 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
பெனலி இந்தியா நிறுவனம் புதிய டி.ஆர்.கே. 251 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 2.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 6 ஆயிரம் ஆகும்.
புதிய பெனலி டி.ஆர்.கே. 251 மாடல் ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்யப்படும் டி.ஆர்.கே. 502 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இறுக்கிறது. இதில் டுவின்-பாட் ஹெட்லைட், மூக்கு போன்ற தோற்றத்தில் பெண்டர், செமி ஃபேரிங், உயரமான விண்ட்-ஸ்கிரீன், 18 லிட்டர் பியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சேடிள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் ஃபுல்-எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 249சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த என்ஜின் 25.4 பி.ஹெச்.பி. திறன், 21.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்திய சந்தையில் எண்ட்ரி லெவல் டி.ஆர்.கே. மாடல் கே.டி.எம். 250 அட்வென்ச்சர், ராயல் என்பீல்டு ஹிமாலயன் மற்றும் பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஜி.எஸ். போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.






