search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோண்டா அமேஸ்"

    • ஹோண்டா நிறுவனத்தின் சப்-காம்பேக்ட் செடான் அமேஸ் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.
    • இந்திய சந்தையில் ஹோண்டா அமேஸ் மாடல் 2013 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது அமேஸ் சப்-காம்பேக்ட் செடான் மாடல் இந்திய விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 2013 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஹோண்டா அமேஸ் மாடல் ஒன்பது ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காலக்கட்டத்தில் இரண்டு ஜெனரேஷன் மாடல்கள் மற்றும் சில பேஸ்லிப்ட் வெர்ஷன்களில் அமேஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக ஹோண்டா அமேஸ் இருந்து வருகிறது. ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த மாதாந்திர விற்பனையில் அமேஸ் மாடல் மட்டும் 40 சதவீத பங்குகளை பெற்றுள்ளது. இதுதவிர அமேஸ் மாடலின் மொத்த விற்பனையில் 60 சதவீதம் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சந்தைகளில் நடைபெற்று இருக்கிறது.


    அதிக விற்பனை மட்டுமின்றி இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் குறைந்த விலை கார் மாடல் என்ற பெருமையை அமேஸ் பெற்று இறுக்கிறது. புதிய ஹோண்டா அமேஸ் மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 63 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    "ஹோண்டா அமேஸ் மாடல் விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை எட்டி இருப்பது பெருமை மிக்க தருணம் ஆகும். இந்த காரை அன்புடன் ஏற்றுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மிக்க நன்றி. மேலும் பிராண்டுக்கு தொடர்ச்சியாக ஆதரவாக செயல்பட்டு வரும் விற்பனையாளர்களுக்கும் நன்றி. இந்தியாவில் எங்களின் எண்ட்ரி லெவல் மாடலாக ஹோண்டா அமேஸ் இருந்து வருகிறது."

    "பிரீமியம் செடான் மாடல் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, அவர்களின் எதிர்பார்ப்புகளை கடந்துள்ளது. இதுவே அமேஸ் மாடல் பெரிய மற்றும் சிறிய நகரங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம் ஆகும்," என ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டகுயா சுமுரா தெரிவித்தார்.

    ×