என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    டொயோட்டா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கிளான்சா ஹேச்பேக் மற்றும் அர்பன் குரூயிசர் சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்கள் விலையை நாளை (மே 1) முதல் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து கார்களின் விலை உயர்த்தப்படுவதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    இரு மாடல்களின் விலை உயர்த்தப்படுவது உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், இவற்றின் விலை எத்தனை சதவீதம் உயர்த்தப்பட இருக்கிறது என்பது பற்றி டொயோட்டா நிறுவனம் இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இம்முறை இரு கார்களின் விலை அதன் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப அதிகபட்சம் 2 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிகிறது.

    கடந்த இரு மாதங்களில் டொயோட்டா நிறுவன கார்களின் விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். முன்னதாக இந்த நிதியாண்டு துவக்கத்தில் டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 4 சதவீதம் வரை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    "டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் டொயோட்டா அர்பன் குரூயிசர் மற்றும் டொயோட்டா கிளான்சா மாடல்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. விலை உயர்வு மே 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனங்களை ஈடு செய்யும் நோக்கிலேயே விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது." என டொயோட்டா நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளது.

    ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் குஷக் மாடலின் புது வேரியண்டை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய குஷக் ஆம்பிஷன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கோடா குஷக் ஆம்பிஷன் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் பேஸ் ஆக்டிவ் வேரியண்ட் மற்றும் ஆம்பிஷன் வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. 

    ஆம்பிஷன் கிளாசிக் MT விலை ரூ. 12 லட்சத்து 69 ஆயரம் என விலை நிர்ணம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆம்பிஷன் கிளாசிக் 1.0 AT மாடல் விலை ரூ. 14 லட்சத்து 09 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய குஷக் ஆம்பிஷன் மாடலில் பின்புற வைப்பர் மற்றும் டி-ஃபாகர், முன்புற பம்ப்பர் ஏர் இன் டேக், சில்வர் முன்புற மற்றும் பின்புற டிப்யூசர்களில் குரோம் ஹைலைட்கள் உள்ளன. இத்துடன் எலெக்ட்ரிக் திறன் கொண்ட ORVM-கள், 16 இன்ச் அலாய் வீல்கள், சில்வர் ரூப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, எல்.இ.டி. ஹெட்லேம்ப், டி.ஆர்.எல்.கள் மற்றும் முன்புற ஃபாக் லைட்கள் உள்ளன.

    இந்த காரின் கேபினில் 10 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் லெதர் கொண்டு ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், ரியர் பார்க்கிங் கேமரா, கூல்டு கிளவ் பாக்ஸ், பின்புறம் பார்சல் டிரே, பேடில் ஷிப்டர்கள், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளது.

    புதிய ஸ்கோடா குஷக் ஆம்பிஷன் மாடலில் 1 லிட்டர், 3 சிலிண்டர், TSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 114 பி.ஹெச்.பி. பவர், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஸ்கோடா நிறுவனம் மே 9 ஆம் தேதி புதிய குஷக் மாண்ட் கர்லோ எடிஷனையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சிட்டி eHEV ஹைப்ரிட் கார் மாடல் மிக விரைவில் இந்திய சந்தையில் வெளியிடப்பட இருக்கிறது.


    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலை இந்தியாவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது. இந்த மாடல் மே 4 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். சமீபத்தில் இந்த மாடல் விற்பனையகம் வரத் துவங்கியது.

    ஹோண்டா சிட்டி மாடல் டாப் எண்ட் ZX வேரியண்டில் வழங்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் 97 பி.ஹெச்.பி. பவர், 127 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட்

    இதில் உள்ள இரு மோட்டார்களில் ஒன்று இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் போன்று செயல்படும். இரண்டாவது மோட்டார் முன்புற ஆக்சில் மீது பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 108 பி.ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    புதிய ஹோண்டா eHEV எலெக்ட்ரிக் மோட்டார்கள் லித்தியம் அயன் பேட்டரியை ஒவ்வொரு முறை பிரேக் போடும் போதும் சார்ஜ் செய்கின்றன. பேடில் ஷிஃப்டர்கள் உதவியுடன் பிரேக் எனர்ஜி மீட்பு சிஸ்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். லித்தியம் அயன் பேட்டரி மீது ஹோண்டா நிறுவனம் எட்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.

    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த மாதம் முழுக்க ஒரு யூனிட்டை கூட வினியோகம் செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


    சர்வதேச செமிகண்டக்டர் குறைபாடு பிரச்சினையில் உள்நாட்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஹீகரோ எலெக்ட்ரிக் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் 2022 மாதம் முழுக்க இந்தியாவில் ஒரு யூனிட் கூட வினியோகம் செய்யப்படவில்லை என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

    மேலும் தனது இருசக்கர வாகனங்களுக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சம் 60 நாட்களாக அதிகரித்து உள்ளது என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளது. சில விற்பனை மையங்களில் காட்சிக்கு வைக்க கூட ஒரு யூனிட் இல்லை என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

     ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் ஹீரோ எலெக்ட்ரிக் முன்னணி நிறுவனமாக உள்ளது. எனினும், தற்போது செமி கண்டக்டர் குறைபாட்டு பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. 

    "எங்களின் மாதாந்திர விற்பனை ஒவ்வொரு மாதமும் இருமடங்கு வரை அதிகரித்து வந்தது. எப்படியோ பல்வேறு பகுதிகளில் இருந்து உதிரிபாகங்களை இந்தியா கொண்டு வந்து கொண்டிருந்தோம். எனினும், போர் சூழல் காரணமாக தற்போது இதிலும் இடையூறு ஏற்பட்டு விட்டது. இந்த காலக்கட்டத்தை பயன்படுத்திக் கொண்டு எங்களின் ஆலையில், உற்பத்தியை அதிகப்படுத்திக் கொள்ள முயற்சிக்க போகிறோம்." என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி சொஹிந்தர் கில் தெரிவித்து இருக்கிறார்.  
    டெஸ்லா நிறுவனத்தில் சுமார் 4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்து இருக்கிறார். இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், 4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான டெஸ்லா நிறுவன பங்குகளை விற்பனை செய்து இருக்கிறார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான நிதி திரட்டலின் அங்கமாக இந்த நடவடிக்கையை அவர் செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    Elon Musk, Tesla, எலான் மஸ்க், டெஸ்லா

    "இன்று இதற்கு பின் டெஸ்லா நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் எண்ணம் இல்லை" என எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார். கடந்த செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமை அன்று சுமார் 44 லட்சம் பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்தார். இது டெஸ்லா இன்க் நிறுவனத்தில் தனது பங்குகளில் 2.6 சதவீதம் ஆகும். 

    முன்னதாக எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களை ரொக்கமாக கொடுத்து வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். எலான் மஸ்க்-இன் சொத்து மதிப்பு 268 பில்லியன் டாலர்கள் என போர்ப்ஸ் தெரிவித்து உள்ளது. 
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்தியாவில் i4 எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய i4 எலெக்ட்ரிக் செடான் மாடலை இந்தியா ஆர்ட் ஃபேர் நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் புதிய i4 எலெக்ட்ரிக் மாடல் மே 26 ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்து உள்ளது. இதே தினத்தில் கியா நிறுவனமும் தனது கியா EV6 எலெக்ட்ரிக் கிராஸ் ஓவர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

     பி.எம்.டபிள்யூ. i4

    புதிய i4 எலெக்ட்ரிக் செடான் இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். முன்னதாக பி.எம்.டபிள்யூ. நிறுவனம் iX எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. iX மற்றும் i4 தவிர பி.எம்.டபிள்யூ. நிறுவனம் மினி கூப்பர் SE மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய i4 மாடல் ஆடம்பர பிரிவில் அறிமுகம் செய்யப்படும் முதல் எலெக்ட்ரிக் செடான் ஆகும். 

    இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. i4 மாடல் இடிரைவ் 40 வேரியண்டில் கிடைக்கிறது. இந்த காரில் 81.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இது 330 ஹெச்.பி. பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 483 கிலோமீட்டர் வரை செல்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரங்கள் ஆகும்.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அவின்யா EV கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய அவின்யா எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'Born Electric' பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய 'Born Electric' பிளாட்பார்மின் கீழ் வெவ்வேறு EV பாடி ஸ்டைல்களில் புது மாடல்கள் உருவாக்கப்படுகின்றன. 

    புது கான்செப்ட்களின் முதல் ப்ரோடக்‌ஷன் மாடல் 2025 வாக்கில் சாலைகளில் வலம்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அவின்யா கான்செப்ட் மாடலுடன் TPEML-இன் புதிய பிராண்டு லோகோவுடன் வருகிறது. காரின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் எல்.இ.டி. பார் இடம்பெற்று இருக்கிறது. இதன் நடுவே T எனும் வார்த்தை தெரிகிறது.

      டாடா அவின்யா EV கான்செப்ட்

    சமஸ்கிருத மொழியில் அவின்யா என்ற வார்த்தைக்கு புதுமை என அர்த்தமாகும். இந்த கான்செப்ட் மாலில் பல்வேறு முதல் முறை அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. மேலும் இந்த கான்செப்ட் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புது டிசைன் மொழியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

    இந்த கான்செப்ட் மாடல் பியூர் EV ஜென் 3 தொழில்நுட்பத்தை சார்ந்து உருவாக்கப்பட இருக்கிறது. இந்த காரை DC பாஸ்ட் சார்ஜர் கொண்டு 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் தனது என்டார்க் XT ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் என்டார்க் ஸ்கூட்டரின் புது வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. டி.வி.எஸ். என்டார்க் XT பெயரில் புது ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது ஸ்டாண்டர்டு,  ரேஸ் எடிஷன், சூப்பர் ஸ்குவாட் எடிஷன் மற்றும் ரேஸ் XP என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     டி.வி.எஸ். என்டார்க்

    அந்த வரிசையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது வேரியண்ட் சேர்த்தால், டி.வி.எஸ். என்டார்க் மாடல் மொத்தம் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய XT வேரியண்டில் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் புது அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதுதவிர இந்த வேரியண்ட் பிரத்யேக ஸ்டைலிங், எக்ஸ்டீரியர் மற்றும் புது கிராபிக்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் புதிய டி.வி.எஸ். என்டார்க் டிரம் பிரேக் கொண்ட பேஸ் மாடல் விலை ரூ. 77 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது. இதன் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 81 ஆயிரத்து 500-இல் இருந்து துவங்குகிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய XT மாடல் தற்பேதைய டாப் எண்ட் XP வேரியண்டின் மேல் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் தனது ஸ்விப்ட் ஸ்போர்ட் காரை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் கார்களின் பேஸ்லிப்ட் வெர்ஷன்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டம் தீட்டி இருக்கிறது. இந்த வரிசையில், புது மாடல்களும் இடம்பெறும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்த நிலையில், மாருதி சுசுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடல் பூனேவில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த காரின் பின்புற விண்ட் ஸ்கிரீனில் ‘On test by ARAI’ ஸ்டிக்கர் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் புது மாடல் கொண்டு மாருதி சுசுகி நிறுவனம் ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலுக்கு போட்டியை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என தெரிகிறது.
    மாருதி சுசுகி ஸ்விப்ட் ஸ்போர்ட்
    Photo Source: Rushlane

    தோற்றத்தில் புதிய ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடலில் புதிய மற்றும் ரி-ப்ரோபைல் செய்யப்பட்ட பம்ப்பர்கள், டூயல் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் பின்புறம் ஸ்பாயிலர், டூயல் டோன் அலாய் வீல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பூட் பகுதியில் ஸ்போர்ட் பேட்ஜ் உள்ளிட்டவை காணப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் மாருதி சுசுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 127 பி.ஹெச்.பி. பவர், 235 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்வது பற்றி அசத்தல் அப்டேட் கொடுத்துள்ளது.


    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விரைவில் இரண்டு புது எலெக்ட்ரிக் ஸகூட்டர் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இரண்டு புது வேரியண்ட்களில் ஒரு மாடலில் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. பெரிய பேட்டரி கொண்ட மாடல் நிச்சயம் அதிக ரேன்ஜ் வழங்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

    புதிதாக இரண்டு வேரியண்ட்களை அறிமுகம் செய்வது பற்றி ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருன் மேத்தா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். மேலும் இரண்டு புது வேரியண்ட்களும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தற்போதைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்திய சந்தையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் 450X மற்றும் ஏத்தர் 450 பிளஸ் என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களில் ஏத்தர் 450X பிரீமியம் வேரியண்ட் ஆகும். இவற்றை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட இருக்கும் இரண்டு புது வேரியண்ட்கள் அம்சங்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. 
    டிரையம்ப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 டிரையம்ப் டைகர் 1200 மாடலின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய டைகர் 1200 மாடலினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய டிரையம்ப் டைரக் 1200 மாடலுக்கான டீசர் அந்நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

    டீசர் வெளியானதை தொடர்ந்து புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். தற்போது டீசர் மட்டும் வெளியாகி உள்ளது. டீசரில் வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    டிரையம்ப் டைகர் 1200

    புதிய டிரையம்ப் டைகர் 1200 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே தொடங்கி விட்டது. சர்வதேச சந்தையில் இந்த மோட்டார்சைக்கிள் ரேலி மற்றும் GT என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையிலும் டிரையம்ப் டைகர் 1200 இரு வேரியண்ட்களும் அறிமுகமாகும் என தெரிகிறது. 

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடலில் யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் 1,160 சிசி, இன்-லைன், 3 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 147 பி.ஹெச்.பி. பவர், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 நின்ஜா மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    கவாசகி இந்தியா நிறுவனம் 2022 நின்ஜா 300 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கவாசகி நின்ஜா 300 மாடல் விலை ரூ. 3 லட்சத்து 37 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முந்தைய கவாசகி நின்ஜா 300 மாடல் விலை ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2022 நின்ஜா 300 மாடலில் மேம்பட்ட கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் - லைம் கிரீன், கேண்டி லைம் கிரீன் மற்றும் எபோனி என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. முந்தைய 2021 எடிஷனும் இதே நிறங்களில் கிடைக்கின்றன. எனினும், மூன்று நிறங்களில் எபோனி பெயிண்ட் கொண்ட வேரியண்டில் புது கிராபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    2022 கவாசகி நின்ஜா 300

    மற்ற இரு நிற வேரியண்ட்கள் தோற்றத்தில் 2021 கவாசகி நின்ஜா 300 போன்றே காட்சியளிக்கின்றன. 2022 கவாசகி நின்ஜா 300 மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 296சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 38.4 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    புதிய 2022 கவாசகி நின்ஜா 300 மாடலிலும் டுவின் பாட் ஹாலோஜன் ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், டூயல் சேனல் ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2022 கவாசகி நின்ஜா 300 மாடலுக்கான முன்பதிவு நாடு முழுக்க துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் வினியோகம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
    ×