என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிரெட்டா நைட் எடிஷன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா நைட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 51 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
மாற்றங்களை பொருத்தவரை கிரெட்டா நைட் எடிஷனின் வெளிப்புறம் டி-குரோம் செய்யப்பட்ட முன்புற கிரில், முன்புறம் - பின்புறம் ஸ்கிட் பிளேட், ரூஃப் ரெயில்கள், சி பில்லர் மற்றும் ORVM-களில் கிளாஸ் பிளாக் ஃபினிஷ் கொண்டுள்ளது. இதன் பின்புற டெயில் கேட் பகுதியில் நைட் எடிஷன் லோகோ இடம்பெற்று இருக்கிறது.

வீல்களை பொருத்தவரை புதிய பேஸ் மாடலான கிரெட்டா S+ வேரியண்ட்-இல் 16 இன்ச் டார்க் கிரே நிற அலாய் வீல்களும், டாப் எண்ட் SX (O) வேரியண்டில் 17 இன்ச் அலாய் வீல்களும் வழங்கப்பட்டுஉள்ளன. இதன் முன்புற டிஸ்க் பிரேக் கேலிப்பர்கள் சிவப்பு நிறம் கொண்டுள்ளன. கேபின் முழுக்க ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்டு, லெதர் இருக்கைகள், ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவைகளில் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. இது பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.
ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் SX (O) வேரியண்டில் மட்டும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த சிட்டி e:HEV ஹைப்ரிட் மாடல் விலையை அறிவித்து இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த புதிய ஹோண்டா சிட்டி e:HEV ஹைப்ரிட் மாடல் விலையை அறிவித்து உள்ளது. புதிய ஹோண்டா சிட்டி e:HEV ஹைப்ரிட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 50 ஆயிரம் என துவங்குகிறது. இது ஹோண்டா சிட்டி ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 4.5 லட்சம் அதிகம் ஆகும்.
ஹோண்டா சென்சிங் அல்லது ADAS அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கும் ஹோண்டா நிறுவனத்தின் முதல் கார் மாடல் இது ஆகும். ஹோண்டா சிட்டி e:HEV ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் உள்ள ஹோண்டா நிறுவன உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்று முதல் இந்த காரின் வினியோகம் துவங்குகிறது.

ஹோண்டா சிட்டி eHEV மாடலில் 1.5 லிட்டர், அட்கின்சன் சைக்கிள் iVTEC பெட்ரோல் என்ஜின் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இணைந்து 124 பி.ஹெச்.பி. திறன், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 26.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
ஹோண்டா eHEV எலெக்ட்ரிக் மோட்டார்கள் லித்தியம் அயன் பேட்டரியை ஒவ்வொரு முறை பிரேக் போடும் போதும் சார்ஜ் செய்கின்றன. பேடில் ஷிஃப்டர்கள் உதவியுடன் பிரேக் எனர்ஜி மீட்பு சிஸ்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். லித்தியம் அயன் பேட்டரி மீது ஹோண்டா நிறுவனம் எட்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.
ஜீப் நிறுவனம் ரங்கூன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட மெரிடியன் எஸ்.யு.வி. முதல் யூனிட்டை வெளியிட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜீப் நிறுவனம் தனது புதிய மெரிடியன் எஸ்.யு.வி.-யின் உற்பத்தியை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவும் துவங்கி உள்ளது. முன்னதாக சில விற்பனையாளர்கள் ஏற்கனவே இந்த மாடலுக்கான முன்பதிவை துவங்கி மேற்கொண்டு வந்தனர். புதிய ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதிகாரப்பூர்வ முன்பதிவு கட்டணமும் ரூ. 50 ஆயிரம் தான் என ஜீப் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
வரும் வாரங்களில் புதிய ஜீப் மெரிடியன் மாடல் விற்பனையகங்களை வந்தடையும் என ஜீப் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஜூன் மாதத்தில் இருந்து இந்த மாடலுக்கான வினியோகம் துவங்க இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடலுக்கான விலை விவரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்பட இருக்கின்றன.
ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸ் மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஜீப் மெரிடியன் மாடலில் இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது Meteor 350 மற்றும் ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு இந்திய சந்தையில் விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் தான் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தியது. இந்த நிலையில், புதிய Meteor 350 மற்றும் ஹிமாலயன் மாடல்களுக்கு ராயல் என்பீல்டு நிறுவனம் விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் ராயல் என்பீல்டு Meteor 350 மற்றும் ஹிமாலயன் மாடல்கள் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போதைய அறிவிப்பின் படி இரு மாடல்களிலும் ட்ரிப்பர் நேவிகேஷன் அம்சம் விரும்புவோர் தேர்வு செய்யும் அக்சஸரியாக வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் இந்த அக்சஸரி இன்றி Meteor 350 மற்றும் ஹிமாலன் வாங்குவோருக்கு மோட்டார்சைக்கிள் விலையில் ரூ. 5 ஆயிரம் விலை குறைக்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் குறைபாடு காரணமாக உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ட்ரிப்பர் நேவிகேஷன் அம்சத்திற்கான குறைபாட்டை எதிர்கொள்ளும் வகையில், ராயல் என்பீல்டு நிறுவனம் அதனை அக்சஸரியாக மாற்றி இருக்கிறது.
இவைதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் மாதங்களில் புதிய ஹண்டர் 350, ஹிமாலயன் 450, ஷாட்கன் 650 மற்றும் சில மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் மே மாதத்திற்கான சலுகை மற்றும் தள்ளுபடி விவரங்களை வெளியிட்டு உள்ளது. இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதன் மூலம் கார் விற்பனையை அதிகப்படுத்த ஹோண்டா கார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. அந்த வகையில் மே மாதத்திற்கான சலுகையில் கார் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ. 33 ஆயிரத்து 158 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சலுகை மற்றும் தள்ளுபடிகள் கார் மாடல்களின் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும். மேலும் இந்த சலுகைகள் மே 31, 2022 அல்லது ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும்.
ஹோண்டா அமேஸ் மாடலுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும். இந்த காருக்கு எக்சேன்ஜ் சலுகை எதுவும் வழங்கப்படவில்லை.
ஹோண்டா சிட்டி நான்காவகது தலைமுறை மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ. 8 ஆயிரம் வழங்கப்படுகிறது.

ஹோண்டா WR V மாடலுக்கு ரூ. 26 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
ஹோண்டா சிட்டி ஐந்தாம் தலைமுறை மாடலுக்கு ரூ. 30 ஆயிரத்து 396 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ. 5 ஆயிரத்து 396 மதிப்பிலான இலவச அக்சஸரீக்கள், ரூ. 5 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஸ் போனஸ், ரூ. 8 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 33 ஆயிரத்து 158 வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி,ஸ ரூ. 12 ஆயிரத்து 158 மத்ப்லிபலான இலவச அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்திற்கு சலுகை வழங்குவது பற்றி மத்திய மந்திரி நிதின் கட்கரி புது விளக்கம் அளித்து இருக்கிறார். இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார் உற்பத்தியை மேற்கொண்டால் நிச்சயம் சலுகைகளை பெற முடியும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.
இதுதவிர இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார் மாடல்களை விட எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விலை குறையும் என்றும் அவர் உறுதியளித்து இருக்கிறார். டெஸ்லாவுக்கு இந்தியா நிச்சயம் உற்பத்தி தளமாக இருக்கும் என நிதின் கட்கரி பலமுறை தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு நிச்சயம் வரிச்சலுகை அளிக்கப்பட மாட்டாது என்பதையும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு முதல் டெஸ்லா நிறுவனம் மற்றும் மத்திய அரசிடையே இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. 2020 ஆண்டிலேயே இந்தியாவில் டெஸ்லா கார் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் டெஸ்லா கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு வரிச்சலுகைகளை வழங்க வேண்டும் என எலான் மஸ்க் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார்களை முழுமையாக உற்பத்தி செய்த நிலையில் (Completely Build Units-CBUs) இங்கு இறக்குமதி செய்து அவற்றை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. எனினும், சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதை மத்திய அரசு விரும்பவில்லை. இந்த நிலையை மாற்றிக் கொள்ளவும் மத்திய அரசு தயாராக இல்லை.
அதிக இறக்குமதி வரிகள் காரணமாக தனது கார்களை இருமடங்கு விலையில் விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனமும் விரும்பவில்லை. உலகின் பெரிய நாடுகளிலேயே இந்தியாவில் மட்டும் தான் இறக்குமதி வரிகள் அதிகளவில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். 40 ஆயிரம் டாலர்கள் விலை கொண்ட கார்களுக்கு இறக்குமதி வரி 60 சதவீதமாக வசூலிக்கப்படுகிறது. இதை விட அதிக விலை கொண்ட கார்களுக்கு வரி மேலும் அதிகமாகும்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய X1 மாடல் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடல்களில் ஒன்றாக புதிய தலைமுறை பி.எம்.டபிள்யூ. X1 இருக்கிறது. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பி.எம்.டபிள்யூ. டீலர் புதிய X1 மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறார்.
டீசரில் புதிய தலைமுறை எஸ்.யு.வி. மாடலின் சில்-ஹவுட் படம் இடம்பெற்று உள்ளது. புதிய பி.எம்.டபிள்யூ. X1 மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு, மேம்பட்ட பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக முழுமையான எலெக்ட்ரிக் வெர்ஷன் iX1 என பெயரிடப்பட்டு உள்ளது.
புதிய பி.எம்.டபிள்யூ. கார் இந்த ஆண்டே அறிமுகம் செய்யப்படும் என்பதை அந்நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தி விட்டது. எனினும், புதிய தலைமுறை பி.எம்.டபிள்யூ. X1 மாடல் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அடுத்த தலைமுறை எஸ்.யு.வி. மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அதன்படி புதிய பி.எம்.டபிள்யூ. X1 மாடலில் 305 ஹெச்.பி. திறன் வழங்கும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய X1 மாடலின் பிளக்-இன் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய பி.எம்.டபிள்யூ. மாடல் அளவில் மற்ற பி.எம்.டபிள்யூ. எஸ்.யு.வி.-க்களை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது என்டார்க் ஸ்கூட்டரின் XT வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது என்டார்க் 125சிசி ஸ்கூட்டர் மாடலின் புதிய XT வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்துள்ளது. புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 XT விலை ரூ. 1,02,823 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய டி.வி.எஸ். என்டார்க் XT மாடலில் ஹைப்ரிட் SmartXonnect சிஸ்டம், TFT மற்றும் LCD கன்சோல், 60 ஹை-டெக் அம்சங்கள், டி.வி.எஸ். இன்டெலிகோ தொழில்நுட்பம், மேம்பட்ட ஸ்டார்ட்-ஸ்டாப் பன்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் ஸ்போர்ட் அலாய் வீல்கள் உள்ளன.

டி.வி.எஸ். என்டார்க் 125 XT மாடலில் சமூக வலைதள நோட்டிபிகேஷன் அலெர்ட், ஆன்லைன் உணவு டெலிவரி போன்ற மிக முக்கிய விவரங்களை டிராக் செய்யும் வசதி உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள டிராபிக் டைம் ஸ்லைடர் ஸ்கிரீன்களை கொண்டு நேரலை விளையாட்டு ஸ்கோர்கள், செய்தி மற்றும் பல்வேறு விவரங்களை போக்குவரத்து நெரிசல் அல்லது சிக்னலில் நிற்கும் போது பார்க்க முடியும்.
புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 XT மாடலில் 124.8 சிசி, சிங்கில் சிலிண்டர், 3 வால்வு, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.25 பி.ஹெச்.பி. பவர், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதில் உள்ள SmartXtalk அம்சம் வாய்ஸ் அசிஸ்ட் வசதியை வழங்குகிறது. இதை கொண்டு ஸ்கூட்டர் மோட், ஸ்கிரீன் பிரைட்னஸ், நேவிகேஷன், பாடல்களை மாற்றுவது போன்ற அம்சங்களை குரல் வழியே மேற்கொள்ள முடியும். இத்துடன் எரிபொருள் குறைவது, வீணாவது, மழை எச்சரிக்கை, போன் பேட்டரி குறைவது போன்ற தகவல்களையும் இந்த ஸ்கூட்டர் வழங்கும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டாடா பன்ச் மாடல் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா பன்ச் மாடல் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. அதன்படி டாடா பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் விலை தற்போது ரூ. 5 லட்சத்து 82 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. தற்போதைய அறிவிப்பின் படி டாடா பன்ச் பேஸ் மாடல் விலை ரூ. 15 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த முறை டாடா பன்ச் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலை உயர்த்தப்படவில்லை. விலை உயர்வின் படி டாடா பன்ச் மேனுவல் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 82 ஆயிரத்து 900 என துவங்கு அதிகபட்சம் ரூ. 8 லட்சத்து 88 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. டாடா பன்ச் ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 24 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9 லட்சத்து 48 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

அம்சங்களை பொருத்தவரை புதிய டாடா பன்ச் மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்., பாக் லைட்கள், ரூப் ரெயில்கள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.
டாடா பன்ச் மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்கசார் CNG வேரியண்ட் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் அல்கசார் CNG வேரியண்ட் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முன்னதாக கியா கரென்ஸ் CNG மாடல் ஸ்பை படங்கள் வெளியானதை தொடர்ந்து இம்முறை அல்கசார் CNG மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன.
கியா கரென்ஸ் மற்றும் ஹூண்டாய் அல்கசார் மாடல்கள் இந்திய சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த 7 சீட்டர் கார் ஆகும். தற்போது நிறுவனங்களும் தங்களின் 7 சீட்டர் மாடலில் CNG கிட் வழங்க முடிவு செய்துள்ளன. ஸ்பை படங்களின் படி ஹூண்டாய் அல்கசார் CNG மாடல் தோற்றத்தில் எந்த மாற்றமும் இன்றி உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

Photo Courtesy: MotorBeam
7 சீட்டர் மாடல் என்பதால் ஹூண்டாய் அல்கசார் பிரீமியம் தோற்றம் மற்றும் அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த மாடலின் முன்புற கிரில் மற்றும் உயரமான ரூஃப்லைன் உள்ளிட்டவை காருக்கு அசத்தலான தோற்றத்தை வழங்குகின்றன.
ஹூண்டாய் அல்கசார் மாடல் இந்திய சந்தையில் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனினும், இதன் CNG கிட் ஒற்றை என்ஜினில் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய 2022 ZS EV மாடல் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் சமீபத்தில் புதிய 2022 ZS EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய 2022 ZS EV எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மார்ச் மாத விற்பனையிலும் 2022 ZS EV மாடல் அமோக வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், 2022 மார்ச் மாதத்தில் 2022 எம்.ஜி. ZS EV மாடலை வாங்க ஆயிரத்து 500 பேர் மட்டுமே முன்பதிவு செய்து இருந்தனர். ஒவ்வொரு மாதமும் முன்பதிவு யூனிட்கள் அதிகரித்து வருவதை வைத்து பார்க்கும் போது இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரிப்பதை உணர முடிகிறது.
எனினும், சீனாவில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு காரணமாகவும், செமிகண்டக்டர் பற்றாக்குறை காரணமாகவும் புதிய ZS EV மாடலின் வினியோக பணிகளில் தொய்வு ஏற்படும் என்றே தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய 2022 எம்.ஜி. ZS EV மாடல் விலை ரூ. 21 லட்சத்து 09 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 25 லட்சத்து 88 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2022 எம்.ஜி. ZS EV மாடலில் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் நிரந்தர மேக்னட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இணைந்து 174 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும்.
யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் மார்ச் மாத விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
யமஹா நிறுவனத்தின் FZ சீரிஸ் இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் மாடலாக தொடர்ந்து நீடிக்கிறது. மார்ச் 2022 மாதத்தில் மட்டும் யமஹா FZ விற்பனை 39 சதவீதம் அதிகரித்து உள்ளது.
மார்ச் மாதம் இந்திய சந்தையில் மொத்தத்தில் 23 ஆயிரத்து 016 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2021 மார்ச் மாதத்தில் யமஹா நிறுவனம் 16 ஆயிரத்து 563 FZ யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இந்தியாவில் யமஹா FZ ஸ்டாண்டர்டு எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 18 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
யமஹா FZ மாடலில் பாடி நிறத்தால் ஆன உபகரணங்கள், FZ-S மாடலில் அதிக பிரீமியம் தோற்றம் வழங்கும் குரோம் அம்சங்கள் உள்ளன. எனினும், இரு மாடல்களிலும் ஒரே திறன் கொண்ட என்ஜினே வழங்கப்படுகின்றன. இரு மாடல்களும் 149சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் கொண்டிருக்கின்றன. இந்த என்ஜின் 12.2 பி.ஹெச்.பி. திறன், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.






