என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 250 மோட்டார்சைக்கிளில் சத்தமின்றி புது அப்டேட் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அப்டேட் செய்து இருக்கிறது. புது அப்டேட் படி பல்சர் 250 மாடல் இனி கிரீபியன் புளூ நிறத்திலும் கிடைக்கிறது. புதிய நிறம் பல்சர் N250 மற்றும் பல்சர் F250 மாடல்களில் கிடைக்கும். புகிய நிறம் கொண்ட வேரியண்ட் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில், இரு மாடல்களின் புது நிறம் கொண்ட வேரியண்ட் தற்போதைய விலையிலேயே கிடைக்கும்.

    இந்தியாவில் பஜாஜ் பல்சர் F250 கரீபியன் புளூ நிற மாடல் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 979 என்றும் பஜாஜ் பல்சர் N250 கரீபியன் புளூ மாடல் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 680 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது வேரியண்ட் ஹெட்லைட் கவுல், முன்புற பெண்டர், என்ஜின் கவுல், பியூவல் டேன்க் மற்றும் ரியர் பேனல் என அனைத்து இடங்களிலும் புளூ நிற பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது.

    பஜாஜ் பல்சர் 250

    இத்துடன் வெளிப்புற நிறத்திற்கு மேட்ச் செய்யும் வகையில் வீல் ஸ்ட்ரிப்களில் புளூ பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் மாற்றங்கள் நிறத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. புதிய பஜாஜ் பல்சர் N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மாடல்களில் 249சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு 2 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளன. 

    இந்த என்ஜின் 24.1 பி.ஹெச்.பி. பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. பல்சர் 250 டுவின் மாடல்கள் டியுபுலர் ஸ்டீல் பிரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நீண்ட ரேன்ஜ் வழங்கும் நெக்சான் EV மாடல் நெக்சான் EV மேக்ஸ் என அழைக்கப்படும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் மே 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதையும் டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் விலை ரூ. 20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி யூனிட் வழங்கப்படலாம். இத்துடன் புதிய காரில் ஃபுளோர் பிளானை டாடா மோட்டார்ஸ் மாற்றலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக நெக்சான் EV மேக்ஸ் பூட் ஸ்பேஸ் குறைய வாய்ப்புகள் உண்டு என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் அதிக திறன் மற்றும் டார்க் வெளிப்படுத்தும் மோட்டார் வழங்கப்படும் என தெரிகிறது.

    டாடா நெக்சான் EV மேக்ஸ்

    பெரிய பேட்டரி வழங்கப்பட இருப்பதால் டாடா நெக்சான் EV மேக்ஸ், தற்போதைய நெக்சான் EV மாடலுடன் ஒப்பிடும் போது அதிக ரேன்ஜ் வழங்கும் என நிச்சயம் எதிர்பார்க்க முடியும். தற்போதைய நெக்சான் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI சான்று பெற்று இருக்கிறது. அந்த வகையில் புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 400 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

    அந்த வகையில் நிஜ பயன்பாடுகளின் போது இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 320 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என கூறப்படுகிறது.  தற்போதைய நெக்சான் EV மாடலை முழு சார்ஜ் செய்தால் 200 முதல் அதிகபட்சமாக 220 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கி வருகிறது. 

    கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    கே.டி.எம். இந்தியா நிறுவனம் 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எண்ட்ரி லெவல் அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள் இரண்டு ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இத்துடன் 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலுக்கு சிறப்பு நிதி சலுகைகள் மற்றஉம் ரூ. 6 ஆயிரத்து 999 விலையில், விசேஷ மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் தற்போது புதிதாக கே.டி.எம். பேக்டரி ரேசிங் புளூ மற்றும் டார்க் கால்வேனோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் தற்போது ஸ்டிரீட் மற்றும் ஆஃப் ரோடு என இருவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

     2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர்

    இரு ரைடிங் மோட்களிலும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் லெவல்கள் மாற்றப்படும். ஆஃப் ரோடு மோட் கொண்டு பைக்கினை சிறப்பாக கண்ட்ரோல் செய்ய முடியும். இத்துடன் லீன் சென்சிடிவ் ABS வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் ரோபஸ்ட் 5 ஸ்போக் கேஸ்ட் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    புதிய 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலிலும் 373 சிசி, சிங்கில் சிலண்டர், 5 ஸ்பீடு, லிக்விட் கூல்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் யாரும் எதிர்பாராத நிலையில், புதிய டாடா ஏஸ் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டாடா ஏஸ் மாடலை அதிரடியாக அப்டேட் செய்து இருக்கிறது. இந்தியாவில் 17 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஏஸ் மாடல் எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சிறிய ரக வர்த்தக வாகனமாக விற்பனை செய்யப்படும் டாடா ஏஸ் மாடல் தற்போது எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

    இதுவரை டாடா ஏஸ் மாடல் பெட்ரோல், டீசல் மற்றும் CNG என மூன்று வித வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்த நிலையில், தற்போது இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக டாடா ஏஸ் தற்போது அனைத்து விதமான எரிபொருள்களிலும் இயங்கும் மாடல் என்ற பெருமையை இருக்கிறது. 

    டாடா ஏஸ் EV

    இந்தியாவில் தற்போதைய டாடா ஏஸ் மாடல்களின் விலை ரூ. 4 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக புதிய டாடா ஏஸ் எலெக்ட்ரிக் மாடல் விலை ரூ. 6 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ. 7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 

    டாடா ஏஸ் EV மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் EVOGEN பவர்டிரெயினில் இயங்குகிறது. இந்த பவர்டிரெயினில் கிடைக்கும் முதல் வாகனம் இது ஆகும். இந்த வாகனம் முழு சார்ஜ் செய்தால் 154 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. இதில் 21.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 36 ஹெச்.பி. பவர், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டாடா ஏஸ் EV மாடலில் பேட்டரி கூலிங் சிஸ்டம் மற்றும் ரி-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வாகனத்தின் டிரைவிங் ரேன்ஜ்-ஐ அதிகப்படுத்தும்.  
    மெர்சிடிஸ் சி கிளாஸ் மாடல், சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்போது தான் அறிமுகமாகி இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய C கிளாஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ஆறாவது தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் இந்த மாடல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. 

    புதிய C கிளாஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டனன. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடலின் விலை விவரங்கள் மே 10 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய C கிளாஸ் மாடல் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி ஒரு பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. டீசல் என்ஜின் இருவித டியுனிங்கில் கிடைக்கிறது.

     2022 மெர்சிடிஸ் C கிளாஸ்

    இதன் பெட்ரோல் என்ஜின் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் வடிவில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 204 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டுள்ள 2 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக அமைந்துள்ளது. டீசல் என்ஜின் 2 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் ஆகும். இது 200 ஹெச்.பி. திறன், 440 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    இதே என்ஜின் 265 ஹெச்.பி. பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் டியுனிங்கிலும் கிடைக்கிறது. மூன்று என்ஜின்களுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது. இது 20 ஹெச்.பி. பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் அதிக திறன் வழங்குகிறது. 

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடலின் பெட்ரோல் கார் லிட்டருக்கு 16.9 கிலோமீட்டர்களும், டீசல் என்ஜின் லிட்டருக்கு 23 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய தலைமுறை பல்சர் NS160 மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் NS160 மாடல் விரைவில் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. புதிய தலைமுறை பல்சர் NS160 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மாடலின் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

    தோற்றத்தில் இந்த மாடல் தற்போதைய பல்சர் N250 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாடலில் அண்டர்பெல்லி எக்சாஸ்ட் உள்ளது. ஆனால் பல்சர் N250 மாடலில் சைடு ஸ்லங் யூனிட் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் இதில் கிக் ஸ்டார்டர் இடம்பெற்று இருக்கிறது. இந்த பிரிவு மாடல்களில் இது மிகவும் அரிதான ஒன்று ஆகும்.

    பஜாஜ் பல்சர் NS160
    Photo Courtesy: BikeDekho

    இத்துடன் மெல்லிய டையர்கள், சிறிய டிஸ்க் பிரேக்குகள், ஏர் கூல்டு என்ஜினஅ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் அதிக செயல்திறன் வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இவை தவிர இதன் டிசைன் மற்றும் அம்சங்கள் புதிய பல்சர் NS250 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் பஜாஜ் பல்சர் NS160 விலை ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இதன் அப்டேட் செய்யப்பட்ட மாடல் விலை நிச்சயம் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் NS160 மாடல் ஹீரோ எக்ஸ்டிரீம் 160R, டி.வி.எஸ். அபாச்சி RTR160 4V மற்றும் சுசுகி ஜிக்சர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. 
    ஆடி நிறுவனம் தனது 2022 A8 L மாடலின் இந்திய முன்பதிவை துவங்கி இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஆடி இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் செடான் மாடலான 2022 ஆடி A8 L காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புதிய காருக்கான முன்பதிவுகளை ஆடி நிறுவனம் துவங்கி இருக்கிறது. புதிய 2022 ஆடி A8 L மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும். 

    2022 ஆடி A8 L மாடல் 2020 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடலின் மிட்-சைக்கிள் அப்டேட் ஆகும். 2020 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆடி A8 L விலை ரூ. 1 கோடியே 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த காரில் ஏராளமான புது அம்சங்கள், அசத்தலான என்ஜின் மற்றும் ஆடம்பர சவுகரிய வசதிகள் இடம்பெற்று இருந்தன. 

     2022 ஆடி A8 L

    புதிய 2022 ஆடி A8 L மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் கூர்மையான டிசைன் உள்ளது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் முன்புறம் சிங்கில் பிரேம் கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் மேட்ரிஸ் எல்.இ.டி. ஹெட்லைட்கள் புது டிசைன் கொண்டிருக்கின்றன. 

    2022 ஆடி A8 L மாடலில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 3.0 லிட்டர் வி6 என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 340 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும். 

    இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 209 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதே கார் 4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட TFSI என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 460 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    கவாசகி நிறுவனத்தின் 2022 நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் இந்திய வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    கவாசகி இந்தியா நிறுவனம் 2022 நின்ஜா 300 மாடலுக்கான வினியோகத்தை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் புதிய எண்ட்ரி லெவல் மாடல் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2022 கவாசகி நின்ஜா 300 மாடல் விலை ரூ. 3 லட்சத்து 37 ஆயிரம், (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வெளியீட்டை தொடர்ந்து இந்த மாடல் விற்பனையகம் வந்தடைந்த நிலையிலேயே, தற்போது வினியோகம் துவங்கி இருக்கிறது.

    புதிய 2022 கவாசகி நின்ஜா 300 மாடலில் புதிய கிராபிக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. 2022 கவாசகி நின்ஜா 300 மாடல்- லைம் கிரீன், கேண்டி லைம் கிரீன் மற்றும் எபோனி என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் கேண்டி லைம் கிரீன் மற்றும் எபோனி பெயிண்ட் கொண்ட மாடல்களில் புது கிராபிக்ஸ் வழஙஅகப்பட்டு இருக்கிறது. இதன் லைம் கிரீன் வேரியண்ட் தோற்றத்தில் 2021 மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 2022 கவாசகி நின்ஜா 300 மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 296சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 38.4 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    தென் கொரிய கார் உற்பத்தியாளரான கியா தனது ஆல் எலெக்ட்ரிக்  EV6 மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய  EV6 மாடலுக்கான டீசகர் கியா இந்தியா அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் கியா EV6 மாடல் சி.பி.யு. (முழுமையாக உருவாக்கப்பட்ட மாடல்) வடிவில் இந்தியா கொண்டுவரப்பட இருக்கிறது. 

    அந்த வகையில் இந்த மாடலின் விலை ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. முதற்கட்டமாக 100 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் கியா இந்தியா ஏற்கனவே அறிவித்து விட்டது.

     கியா EV6

    இந்த நிலையில், புதிய கியா  EV6 மாடலுக்கான முன்பதிவுகள் மே 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் கியா  EV6 மாடல் 58kWh மற்றும் 77.4kWh என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த கார் ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதிகளுடன் கிடைக்கிறது. இதன் வெவ்வேறு வெர்ஷன்கள் அதற்கு ஏற்ற செயல்திறன் மற்றும் ரேன்ஜ்களை வழங்குகிறது.

    உதாரணத்திற்கு கியா EV6 77.4kWh பேட்டரி மற்றும் RWD செட்டப் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 528 கிலோமீட்டர் வரை செல்லும். இதில் உள்ள 800 வோல்ட் சார்ஜிங் சப்போர்ட் காரணமாக கார் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆக 18 நிமிடங்களே ஆகிறது. 

    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 ஸ்கார்பியோ மாடல் இந்திய வெளியீடு பற்றி புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    மஹிந்திராவின் 2022 ஸ்கார்பியோ மாடல் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. சமீப காலங்களில் பலமுறை இந்த காரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய மாடல் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ எஸ்.யு.வி. மாடலின் 20 ஆண்டு விழாவை கொண்டாட திட்டமிட்டு வருவதால், இதே நாளில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களின் படி, புதிய ஸ்கார்பியோ மாடல் அளவில் பெரியதாக இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா XUV700 மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது. 

    புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கிறது. மேலும் இதில் அதிரடியான டிசைன் எலிமண்ட்கள் வழங்கப்பட இருக்கின்றன. சமீபத்திய ஸ்பை படங்களின் படி 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் இறுதி வடிவத்தை பெற்று விட்டது என்றே தெரிகிறது. இந்த காரின் இறுதிக்கட்ட சோதனைகளே தற்போது நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் 250 சீரிஸ் மாடல்கள் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளன. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பஜாஜ் பல்சர் N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதாக அறிவித்து இருக்கிறது. 

    அதன்படி இரு பல்சர் 250 சீரிஸ் மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இரு மாடல்களை சேர்த்து சுமார் 10 ஆயிரம் யூனிட்கள் இதுவரை டெலிவரி செய்யப்பட்டுள்ளது என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்திய சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர்  N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மோட்டார்சைக்கிள்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இவை பஜாஜ் பல்சர் சீரிசில் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் மாடல்கள் ஆகும். இரு மாடல்களிலும் 2590சிசி  என்ஜின் வழங்கப்பட்டுள்ளன. புதிய பஜாஜ் பல்சர் N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மாடல்கள் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளன. 

    பஜாஜ் பல்சர் 250

    இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N250 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 680 என்றும் பஜாஜ் பல்சர் F250 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 979 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  புதிய பஜாஜ் பல்சர் 250 சீரிஸ் மாடல்கள்- டெக்னோ கிரே, ரேசிங் ரெட் மற்றும் கரீபியன் புளூ நிறங்களில் கிடைக்கின்றன.

    புதிய பஜாஜ் பல்சர் N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மாடல்களில் 249சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு 2 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளன. இந்த என்ஜின் 24.1 பி.ஹெச்.பி. பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. பல்சர் 250 டுவின் மாடல்கள் டியுபுலர் ஸ்டீல் பிரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. 
    போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டைகுன் மாடல் விலையை அதிரடியாக மாற்றியமைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான போக்ஸ்வேகன் இந்தியாவில் தனது டைகுன் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விலையை ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தி இருக்கிறது. அதன்படி புதிய போக்ஸ்வேகன் டைகுன் மாடல் விலை தற்போது ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம் முதல் துவங்குகிறது. 

    டைகுன் பேஸ் மாடலான கம்பர்ட்லைன் விலையில் 3.64 சதவீதம் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது காரின் பழைய விலையில் இருந்து ரூ. 40 ஆயிரம் வரை அதிகம் ஆகும். டைகுன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்களின் விலை ரூ. 40 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் ஹைலைன் MT மாடல் விலை தற்போது ரூ. 40 ஆயிரம் அதிகரித்து ரூ. 13 லட்சத்து 39 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது. ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 79 ஆயிரம் ஆகும்.

    போக்ஸ்வேகன் டைகுன் டாப்லைன் மற்ரும் டைகுன் GT மாடல்கள் விலை ரூ. 40 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இவற்றின் விலை முறையே ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம் மற்றும் ரூ. 15 லட்சத்து 39 ஆயிரம் என துவங்குகிறது. டைகுன் ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 50 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ. 16 லட்சத்து 89 ஆயிரம் என துவங்குகிறது. டைகுன் GT AT மாடல் விலை ரூ. 18 லட்சத்து 59 ஆயிரம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    ×