search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்ஸ்வேகன்"

    • புதிய போக்ஸ்வேகன் விர்டுஸ் வேரியண்ட் ஏழு நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட EVO TSI பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.

    போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது விர்டுஸ் செடான் மாடலின் புதிய GT DSG வேரியண்டை அறிமுகம் செய்தது. புதிய விர்டுஸ் மாடலின் துவக்க விலை ரூ. 16 லட்சத்து 19 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விர்டுஸ் மாடல் தற்போது கம்பர்ட்லைன், ஹைலைன், டாப்லைன், ஜிடி மற்றும் ஜிடி பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய விர்டுஸ் GT DSG வேரியண்ட் டாப்லைன் AT மற்றும் GT பிளஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட EVO TSI பெட்ரோல் என்ஜின் மற்றும் ஆக்டிவ் சிலிண்டர் கட்-ஆஃப் தொழில்நுட்பம், 7 ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     

    இந்த என்ஜின் 148 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு 19.62 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய போக்ஸ்வேகன் விர்டுஸ் GT DSG மாடல்: வைல்டு செர்ரி ரெட், சர்குமா எல்லோ, கார்பன் ஸ்டீல் கிரே, ரைசிங் புளூ, கேன்டி வைட், லாவா புளூ மற்றும் ரிப்லெக்ஸ் சில்வர் என்று ஏழு நிறங்களில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய விர்டுஸ் GT DSG வேரியண்டில் 10-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.

    புதிய வேரியண்ட் அதன் முந்தைய வேரியண்ட்களை விட வித்தியாசப்படுத்திக் கொள்ள முன்புற கிரில், ஃபென்டர் மற்றும் டெயில்கேட் உள்ளிட்டவைகளில் GT பேட்ஜ் கொண்டிருக்கின்றன. இத்துடன் GT அனுபவம் வழங்கும் வகையில் ரெட் பிரேக் கேலிப்பர்கள், GT-தீம் இருக்கை மேற்கவர்கள், குரோம் விங்ஸ், ரெட் ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் கிளாஸ் பிளாக் ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • 2018-இல் போக்ஸ்வேகன் குழுமம் மாட்யுல் எலெக்ட்ரிக் டிரைவ் மேட்ரிக்ஸ் பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்தது.
    • இந்த பிளாட்ஃபார்ம் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிளாக்ஷிப் செடான் ஐடி.7 மாடலிலும் பயன்படுத்தப்படுகிறது.

    போக்ஸ்வேகன் குழுமம் சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவில் உள்ள போக்ஸ்வேகன், ஆடி, கப்ரா, ஸ்கோடா மற்றும் போக்ஸ்வேகன் வர்த்தக பிரிவு என ஐந்து பிராண்டுகளின் எட்டு உற்பத்தி ஆலைகளில் இந்த வாகனங்கள் உற்பத்தி நடைபெற்று வந்தது.

    2018-இல் போக்ஸ்வேகன் குழுமம் அறிமுகம் செய்த மாட்யுல் எலெக்ட்ரிக் டிரைவ் மேட்ரிக்ஸ் பிளாட்ஃபார்ம் போக்ஸ்வேகன் ஐடி பேட்ஜ் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர போக்ஸ்வேகன் குழுமத்தின் இதர எலெக்ட்ரிக் வாகனங்களிலும் இந்த பிளாட்ஃபார்ம் பயன்படுத்தப்படுகிறது.

     

    ஐடி.3, ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி, ஐடி.5 மற்றும் ஐடி.6 போன்ற மாடல்கள் இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதே பிளாட்ஃபார்ம் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிளாக்ஷிப் செடான் ஐடி.7 மாடலிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த செடான் மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    தற்போது இருக்கும் பிளட்ஃபார்ம் தவிர போக்ஸ்வேகன் நிறுவனம் மற்றொரு புதிய பிளாட்ஃபார்மை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த தலைமுறை MEB+ பிளாட்ஃபார்ம் மேம்பட்ட பேட்டரிகளை கொண்டிருக்கும் என்றும் இவை முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்களுக்கும் அதிக ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    • போக்ஸ்வேகன் நிறுவனம் உலக சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.
    • இதே போன்று இந்திய சந்தையிலும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய போக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

    போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உலக சந்தையில் ஏராளமான நாடுகளில் போக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், போக்ஸ்வேகன் ஐடி. குடும்பத்தில் இருந்து இதுவரை ஐந்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    அக்டோபர் 2020 வாக்கில் போக்ஸ்வேகன் ஐடி.3 மாடல்கள் மூலம் எலெக்ட்ரிக் வாகன வினியோகத்தை அந்நிறுவனம் துவங்கியது. தற்போது உலகளவில் கார் வினியோகத்தில் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஐந்து லட்சம் மைல்கல் எட்டிய செய்தி வெளியாகி இருக்கிறது. இதுதவிர மேலும் 1 லட்சத்து 35 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவற்றை வினியோகம் செய்யும் பணிகளில் போக்ஸ்வேகன் ஈடுபட்டு வருகிறது.

    2033 முதல் ஐரோப்பாவில் போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய இருக்கிறது. ஐரோப்பாவில் 2030 முதல் விற்பனை செய்யப்படும் ஒட்டுமொத்த போக்ஸ்வேகன் வாகனங்களில் 70 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிலும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகப்படுத்த போக்ஸ்வேகன் திட்டமிட்டு வருகிறது.

    "1 லட்சத்து 35 ஆயிரம் ஐடி. கார்களை வாடிக்கையாளர்களுக்கு விரைந்து வினியோகம் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். எனினும், உதிரிபாகங்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கலான சூழல் நிலவுவதால், உற்பத்தி திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டியாத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்." என போக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் பிரிவுக்கான நிர்வாக குழு உறுப்பினர் மெல்டா அபெ தெரிவித்து இருக்கிறார்.

    • போக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டைகுன் மாடல் கார் முன்பதிவு விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • இத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து இதுவரை எத்தனை யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டன என்ற விவரமும் வெளியாகி உள்ளது.

    போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது டைகுன் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலை வாங்க இதுவரை சுமார் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி இதுவரை 28 ஆயிரம் யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    கடந்த மாதம் தான் போக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் ஆனிவர்சரி எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் புதிய ஆனிவர்சரி எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. டைகுன் ஆனிவர்சரி எடிஷன் விலை ரூ. 15 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    போக்ஸ்வேகன் டைகுன் ஆனிவர்சரி எடிஷன் மாடல் வைல்டு செர்ரி ரெட், கர்குமா எல்லோ மற்றும் ரைசிங் புளூ என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. முன்னதாக போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் மாடல்களுக்கான குளோபல் NCAP புள்ளி விவரங்கள் வெளியாகின. இதில் இரு மாடல்களும் ஐந்து நடசத்திர குறியீடுகளை பெற்று அசத்தின.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் வரையிலான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் டைகுன் மிட்-சைஸ் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • அக்டோபர் மாதத்தில் போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி மாடலுக்கு அதிகபட்ச சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

    போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரு கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து உள்ளது. போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி மற்றும் விர்டுஸ் செடான் மாடல்களுக்கு தள்ளுபடி, எக்சேன்ஜ் தள்ளுபடி மற்றும் லாயல்டி பலன்கள் வழங்கப்படுகின்றன. இரு கார்களில் போக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு அதிகபட்ச பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி பேஸ் வேரியண்ட் வாங்குவோருக்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் 1.0 லிட்டர் என்ஜின் கொண்ட வேரியண்ட்களுக்கு ரூ. 55 ஆயிரம் வரையிலான பலன்களும், 1.5 லிட்டர் GT DSG வேரியண்டிற்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்களும் வழங்கப்படுகிறது. டைகுன் 1.5 லிட்டர் GT மேனுவல் ரூ. 80 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷக் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த கார் இரண்டு டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    போக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலை வாங்குவோர் ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும். இதன் டாப்லைன் வேரியண்டிற்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • போக்ஸ்வேகன் சர்வீஸ் மையம் ஒன்று தனது வாடிக்கையாளருக்கு கொடுத்த கட்டண ரசீது வைரல் ஆகி வருகிறது.
    • கார் சரி செய்யும் விவகாரத்தில் ஏற்கனவே பல முறை இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

    இந்தியாவில் செயல்பட்டு வரும் போக்ஸ்வேகன் சர்வீஸ் மையங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அதிக தொகையை பில் செய்து பல முறை சர்ச்சியில் சிக்கியுள்ளன. அந்த வரிசையில், தற்போது போக்ஸ்வேகன் போலோ மாடலை சரி செய்ய அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையம் ஒன்று ரூ. 22 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்து அதிர்ச்சி அளித்து இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தனது அனுபவத்தை லின்க்டுஇன் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

    பெங்களூரில் வசித்து வரும் அனிருத் கனேஷ் என்பவர் போக்ஸ்வேகன் போலோ TSI மாடலை பயன்படுத்தி வருகிறார். சமீபத்திய பெங்களூரு வெள்ளத்தில் போக்ஸ்வேகன் போலோ சேதமடைந்து விட்டது. இதை அடுத்து அனிருத் பெங்களூரை அடுத்த வைட்பீல்டில் உள்ள போக்ஸ்வேகன் ஆப்பிள் ஆட்டோ சர்வீஸ் மையத்திற்கு தனது போலோ காரை சரி செய்ய எடுத்துச் சென்றார். சேதமடைந்த காரை எடுத்துச் செல்ல இரவு நேரத்தில் யாரும் வரவில்லை என அனிருத் குறிப்பிட்டுள்ளார்.


    வைட்பீல்டு வொர்க்‌ஷாப்பில் அனிருத்தின் போக்ஸ்வேகன் போலோ கார் 20 நாட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் போக்ஸ்வேகன் ஆப்பிள் ஆட்டோ சார்பில் அதிகாரி அனிருத்தை தொடர்பு கொண்டு காரை சரி செய்ய ரூ. 22 லட்சம் வரை செலவாகம் என தெரிவித்து இருக்கிறார். இதன் பின் கார் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அனிருத் தொடர்பு கொண்டார். இன்சூரன்ஸ் நிறுவனம் காருக்கு முழு சேதமடைந்து விட்டதாக குறிப்பிட்டு, காரை சர்வீஸ் மையத்தில் இருந்து எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.

    காரின் தரவுகளை சேகரிக்க அனிருத் காரின் விற்பனையகம் சென்றார். அங்கு அவரிம் ரூ. 44 ஆயிரத்து 840 கட்டண ரசீது கொடுத்து மீண்டும் ஷாக் கொடுத்துள்ளனர். பின் இந்த பிரச்சினையை போக்ஸ்வேகன் வாடிக்கையாளர் சேவை மையத்திம் அனிருத் தெரிவித்து இருக்கிறார். இதனை 48 மணி நேரத்தில் சரி செய்வதாக அனிருத்திடம் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது பிரச்சினை சரி செய்யப்படவில்லை.

    போக்ஸ்வேகன் போலோ காரை ரூ. 11 லட்சம் கொடுத்து வாங்கிய அனிருத் அதனை சரி செய்ய தனக்கு ரூ. 22 லட்சம் வரை ஆகும் என சர்வீஸ் செண்டர் அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன் பின் அனிருத்தை தொடர்பு கொண்ட போக்ஸ்வேகன் அவரிடம் ரூ. 5 ஆயிரம் செலுத்த வலியுறுத்தி உள்ளது.

    • போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது.
    • போக்ஸ்வேகன் கார்களின் விலை உயர்வு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது.

    ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான போக்ஸ்வேகன் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் போக்ஸ்வேகன் நிறுவன கார் மாடல்கள் விலை 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது. உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணம் என போக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

    இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் சந்தை பங்குகளை அதிகப்படுத்தியதில் டைகுன் மற்றும் விர்டுஸ் மாடல்கள் முக்கிய பங்காற்றி உள்ளன. எனினும், தற்போதைய விலை உயர்வு போக்ஸ்வேகன் வாகன விற்பனையை அதிகப்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி மற்றும் விர்டுஸ் செடான் மாடல்கள் அந்நிறுவனத்தின் இந்தியா 2.0 வியாபார யுக்தியின் அங்கமாக அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களும் MQB-AO IN பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செடான் பிரிவில் பெரிய மாடலாக விர்டுஸ் உருவாகி இருக்கிறது. இத்துடன் சிறப்பான வீல்பேஸ் கிடைத்துள்ளது.

    டைகுன் மாடல் அளவீடுகளை பொருத்தவரை 4221 மில்லிமீட்டர் நீளம், 1760 மில்லிமீட்டர் அகலம், 1612 மில்லிமீட்டர் உயரம் கொண்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் 2651 மில்லிமீட்டர் ஆகும். அம்சங்களை பொருத்தவரை டைகுன் மற்றும் விர்டுஸ் மாடல்களில் ஒரே மாதிரியே வழங்கப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங் பேட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேடிக் வைப்பர்கள், குரூயிஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ஆட்டோ வைப்பர் மற்றும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. 

    • போக்ஸ்வேகன் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • டிகுவான் மாடலின் முழு எலெக்ட்ரிக் வேரியண்ட் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மாடல்கள் புதிதாக துவங்கப்பட்டு இருக்கும் ID துணை பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முற்றிலும் புது எலெக்ட்ரிக் மாடல்களுக்கு முன்னதாகவே போக்ஸ்வேகன் தற்போது விற்பனை செய்து வரும் கார்களின் எலெக்ட்ரிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    உயரம் குறைக்கப்பட்டு, பின்புறம் எக்சாஸ்ட் டிப்கள் நீக்கப்பட்டு, முன்புற கிரில் மூடப்பட்டு இருக்கும் டிகுவான் மாடல் நர்பர்க்ரிங் களத்தில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. இந்த கார் டிகவான் மாடலின் தோற்றம் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இது போக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட்டாக இருக்கும் என தெரிகிறது. போக்ஸ்வேகன் குழுமத்தின் பல்வேறு எஸ்.யு.வி. மாடல்களுக்கு இந்த பாடி ஷெல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.


    இந்த வகையில் இந்த மாடல் போக்ஸ்வேகன் குழும நிறுவனங்களின் ஏதேனும் ஒரு எலெக்ட்ரிக் காருக்கான பிளாட்பார்மாக இருக்கலாம். தற்போதைய டிகுவான் மாடல் MQB பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்பை படத்தில் உள்ள மாடல் MEB பிளாட்பார்முக்கு ஏற்ப மாற்றப்பட்டு இருக்கலாம். எலெக்ட்ரிக் பவர்டிரெயின் சிங்கில் மோட்டார் அல்லது டூயல் மோட்டார் செட்டப் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    எலெக்ட்ரிக் டிகுவான் தோற்றத்தில் இது முதல் முறை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்கள் தான். அந்த வகையில், இன்னும் பலக் கட்ட சோதனைகளுக்கு பின்னரே இந்த மாடல் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடல் இந்த தசாப்தத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம். 

    • போக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விர்டுஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த காரின் துவக்க விலை ரூ. 11 லட்சம் ஆகும்.

    போக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த விர்டுஸ் காம்பேக்ட் செடான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலின் துவக்க விலை ரூ. 11 லட்சத்து 22 ஆயிரம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 92 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    விலை விவரங்கள்:

    போக்ஸ்வேகன் விர்டுஸ் 1.0 TSI Comfortline டைனமிக் லைன் (MT) ரூ. 11 லட்சத்து 22 ஆயிரம்

    போக்ஸ்வேகன் விர்டுஸ் 1.0 TSI Highline டைனமிக் லைன் (MT) ரூ. 12 லட்சத்து 98 ஆயிரம்

    போக்ஸ்வேகன் விர்டுஸ் 1.0 TSI Highline டைனமிக் லைன் (AT) ரூ. 14 லட்சத்து 28 ஆயிரம்

    போக்ஸ்வேகோன் விர்டுஸ் 1.0 TSI Topline டைனமிக் லைன் (MT) ரூ. 14 லட்சத்து 42 ஆயிரம்

    போக்ஸ்வேகோன் விர்டுஸ் 1.0 TSI Topline டைனமிக் லைன் (AT) ரூ. 15 லட்சத்து 72 ஆயிரம்

    போக்ஸ்வேகன் விர்டுஸ் 1.5 TSI GT Line பெர்பார்மன்ஸ் லைன் (AT) ரூ. 17 லட்சத்து 92 ஆயிரம்


    ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலில் 1 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 113 பி.ஹெச்.பி. திறன், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 1.5 லிட்டர் TSI 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 148 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ×