என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
போக்ஸ்வேகன், ஸ்கோடா மற்றும் குப்ரா நிறுவனங்கள் கூட்டணியில் புதிதாக காம்பேக்ட் எலெக்ட்ரிக் கார் மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.
போக்ஸ்வேகன், ஸ்கோடா மற்றும் சியட் நிறுவனத்தின் குப்ரா பிராண்டுகளின் கீழ் விற்பனை செய்யப்பட இருக்கும் காம்பேக்ட் எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கும் பணிகளை போக்ஸ்வேகன் குழுமம் துவங்கி இருக்கிறது. மூன்று மாடல்களும் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MEB EV பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட இருக்கின்றன. இவற்றில் ஒரே மாதிரியான அடையாளங்கள் இடம்பெற்று இருக்கும்.
புதிய கார்கள் பொதுவாக MEB ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு, போக்ஸ்வேகன் ID.3 மற்றும் ID.4 மாடல்களை சார்ந்து உருவாக்கப்பட இருக்கிறது. இவை ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படு வரும் போஸ்க்வேகன் e-UP, ஸ்கோடா சிட்டிகோ e-IV மற்றும் சியட் Miii எலெக்ட்ரிக் அர்பன் EV மாடல்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

போக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் அர்பன் EV மாடல்கள் ஸ்பெயின் நாட்டில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த பகுதியில் புதிய பேட்டரி ஆலையை கட்டமைக்க போக்ஸ்வேகன் குழுமம் இந்திய மதிப்பில் ரூ. 81 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பேட்டரிகள் மர்டோரெல் மற்றும் பம்ப்லோனா வாகன உற்பத்தி மையங்களுக்கு அனுப்பப்பட இருக்கின்றன.
2030 ஆண்டு வாக்கில் போக்ஸ்வேகன் உருவாக்க இருக்கும் ஆறு பேட்டரி உற்பத்தி ஆலைகளில் இது மூன்றாவது ஆலையாக இருக்கும். இரு பேட்டரி உற்பத்தி ஆலைகள் ஜெர்மனி மற்றும் ஸ்வீடனில் உருவாகி வருகின்றன. இவை தவிர செக் குடியரசு, ஸ்லோவேகியா, போலாந்து மற்றும் ஹங்கேரி போன்ற பகுதிகளிலும் போக்ஸ்வேகன் பேட்டரி உற்பத்தி ஆலைகள் துவங்கப்பட இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2022 மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய C கிளாஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பென்ஸ் C Class மாடல் விலை ரூ. 55 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 61 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய 2022 C Class மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆறாவது தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் இந்த மாடல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய C கிளாஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டனன. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடலின் விலை விவரங்கள் மே 10 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய C கிளாஸ் மாடல் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி ஒரு பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. டீசல் என்ஜின் இருவித டியுனிங்கில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் வடிவில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 204 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டுள்ள 2 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக அமைந்துள்ளது. டீசல் என்ஜின் 2 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் ஆகும். இது 200 ஹெச்.பி. திறன், 440 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதே என்ஜின் 265 ஹெச்.பி. பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் டியுனிங்கிலும் கிடைக்கிறது. மூன்று என்ஜின்களுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது. இது 20 ஹெச்.பி. பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் அதிக திறன் வழங்குகிறது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடலின் பெட்ரோல் கார் லிட்டருக்கு 16.9 கிலோமீட்டர்களும், டீசல் என்ஜின் லிட்டருக்கு 23 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது கார் மாடல்களை கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் இன்றி விற்பனை செய்து வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான பி.எம்.டபிள்யூ. தனது பிரபல கார் மாடல்களான 3 சீரிஸ், 4 சீரிஸ், Z4 மற்றும் பல்வேறு கிராஸ் ஓவர் மாடல்களை இண்டர்நெட் கனெக்டி ஆப்ஷன்களான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இன்றி விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த கனெக்டிவிட்டி அம்சங்கள் இன்றி விற்பனை செய்யப்படும் கார்களுக்கு எதிர்காலத்தில் அப்டேட் வழங்கப்படும் என பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தெரிவித்து உள்ளது.
2022 ஜூன் மாத இறுதியில் கனெக்டிவிட்டி அம்சங்கள் அனைத்தும் ஓவர் தி ஏர் அப்டேட்கள் மூலம் கார்களுக்கு வழங்கப்படும் என பி.எம்.டபிள்யூ. தெரிவித்து இருக்கிறது. புதிய சிப்செட்களில் வைபை வசதி இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த பிரச்சினை எத்தனை மாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்ற விவரங்களை பி.எம்.டபிள்யூ. இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும், இந்த பிரச்சினை உள்ள கார் மாடல்கள் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப அம்சங்கள் இன்றி கார்களை விற்பனை செய்வது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்திற்கு புதிய விஷயம் இல்லை. முன்னதாக பல்வேறு கார் மாடல்களில் தொடுதிரை வசதி இன்றி பி.எம்.டபிள்யூ. விற்பனை செய்து இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. குழுமத்தை சேர்ந்த மினி மற்றும் இதர பிராண்டுகளும் சிப்செட் குறைபாடு காரணமாக கார் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்து உள்ளன.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. இந்த மாத நிலவரப்படி புல்லட் 350 மாடல் விலை ரூ. 2 ஆயிரத்து 874 அதிகரித்து உள்ளது.
புதிய விலை விவரங்கள்:
ராயல் என்பீல்டு புல்லட் 350 ஸ்டாண்டர்டு மாடல் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 999
ராயல் என்பீல்டு புல்லட் 350 கிக்ஸ்டார்ட் மாடல் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 674
ராயல் என்பீல்டு புல்லட் 350 எல்க்ட்ரிக் ஸ்டார்ட் மாடல் ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 338
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய J ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கும் புதிய கிளாசிக் 350 மற்றும் Meteor 350 மாடல்களை போன்று இல்லாமல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பழைய பிளாட்பார்மில் உருவாகி, விற்பனை செய்யப்பட்டு வரும் ஒற்றை மாடலாக புல்லட் 350 இருந்து வருகிறது. முன்னதாக புதிய தலைமுறை புல்லட் 350 மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
தற்போதைய புல்லட் 350 மாடல் சிங்கில் கிராடில் பிரேம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 346சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 19.2 பி.ஹெச்.பி. பவர், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குஷக் மாண்ட் கர்லோ ஸ்பெஷல் எடிஷன் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் விலை ரூ. 15.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் மாடல் டொர்னாடோ ரெட் நிறம் கொண்டிருக்கிறது. ஸ்பெஷல் வேரியண்ட் மற்றும் ஸ்டாண்டர்டு மாடல்கள் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்த மாண்ட் கர்லோ எடிஷனில் மாண்ட் கர்லோ பிளாக்டு-அவுட் எலிமண்ட்கள், கிளாஸ் பிளாக் ரூஃப், ORVM-கள், ரூப் ரெயில்கள், முன்புற கிரில், புதிய அலாய் வீல்கள், முன்புற ஃபெண்டரில் மாண்ட் கர்லோ பேட்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேடிக் வைப்பர்கள், ஹெட்லேம்ப்கள், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், ஆறு ஸ்பீக்கர்கள் கொண்ட ஸ்பீக்கர் சிஸ்டம், சப் வூஃபர், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், டையர் பிரெஷர் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷனில் 115 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.0 லிட்டர் யூனிட், 150 ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹைனெஸ் மோட்டார்சைக்கிள் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஹைனெஸ் CB350 மோட்டார்சைக்கிள் மாடலுக்கு ஐ.ஓ.எஸ். இண்டகிரேஷன் வசதியை வழங்கி இருக்கிறது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிளில் ஆண்ட்ராய்டு ஆட்டோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொண்டு அழைப்புகள், மெசேஜ் மற்றும் நேவிகேஷன் போன்ற விவரங்களை காண்பிக்கும்.
எனினும், இந்த அம்சம் முதற்கட்டமாக ஹோண்டா ஹைனெஸ் டாப் எண்ட் மாடலான DLX ப்ரோ மற்றும் ஆனிவர்சரி எடிஷன் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 03 ஆயிரத்து 179 என்றும் ரூ. 2 லட்சத்து 05 ஆயிரத்து 679 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

புதிய ஐ.ஓ.எஸ். வசதி தவிர, இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சைடு ஸ்டாண்டு மற்றும் என்ஜின் கட்-ஆப், டூயல் சேனல் ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மாடலில் 348.3சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 21 பி.ஹெச்.பி. பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.
டொயோட்டா குழும நிறுவனங்கள் கர்நாடக மாநில அரசுடன் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் ரூ. 4 ஆயிரத்து 800 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
டொயோட்டா குழுமத்தின் அங்கமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் மற்றும் டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் என்ஜின்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி டொயோட்டா குழும நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 4 ஆயிரத்து 800 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து உள்ள. இந்த தொகையில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனங்கள் மட்டும் இணைந்து ரூ. 4 ஆயிரத்து 100 கோடி முதலீடு செய்கின்றன.

இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் தனது 25 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் தருணத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது, புதிய வேலை வாய்ப்பு உருவாக்க இந்த முதலீடு வழிவகை செய்யும்.
அதன் படி டொயோட்டா குழும நிறுவனங்கள் உற்பத்தி ஆலைகளை கட்டமைத்து, இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க இருக்கின்றன. இந்த முதலீடு பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு எதிராக மாற்று எரிபொருள் சார்ந்த புது தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட இருக்கிறது.
இத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான பணிகளும் இந்த முதலீட்டில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிளை ஒரு வழியாக அறிமுகம் செய்து விட்டது. புதிய கே.டி.எம். RC390 மாடலின் விலை இந்தியாவில் ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது முந்தைய மாடலை விட ரூ. 36 ஆயிரம் அதிகம் ஆகும்.
அதிக விலைக்கு ஈடு செய்யும் வகையில் 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிளில் அசத்தல் ஸ்டைலிங் மற்றும் சிறப்பான செயல்திறன் வழங்கப்பட்டு இருக்கிறது. 2022 கே.டி.எம். RC390 மாடலின் முன்புறம் எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கே.டி.எம். RC200 ஸ்போர்ட் பைக் மாடலை தழுவிய டிசைன் அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதில் 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பியூவல் டேன்க், ரி-டிசைன் செய்யப்பட்ட டெயில் செக்ஷன், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய கே.டி.எம். RC390 மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், கார்னரிங் ஏ.பி.எஸ்., குயிக்ஷிப்டர், TFT டிஸ்ப்ளே, ஸ்விட்ச் கியர் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இதே அம்சங்கள் அதன் சர்வதேச வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய 2022 கே.டி.எம். RC390 மாடலிலும் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த என்ஜின் 42.9 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2023 வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த நிதியாண்டிற்குள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயார் நிலையில் இருக்கும் என ஹோண்டா தெரிவித்து இருக்கிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்குவது பற்றிய தகவலை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அட்சுஷி ஒகடா தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் அதிக விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா இருந்து வருகிறது. இதே பெயரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சூட்டும் போது, அதன் விற்பனையை அதிகப்படுத்த முடியும் என ஹோண்டா நம்புகிறது.
எனினும், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குமா அல்லது தனது ஆக்டிவா மாடலை மாடிபை செய்து எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது ஹோண்டா நிறுவனம் பென்லி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் டெஸ்டிங் செய்து வருகிறது.
போக்ஸ்வேகன் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளன. எதற்கான கூட்டணி என்ற விவரங்களை பார்ப்போம்.
போக்ஸ்வேகன் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இணைந்து ஆக்மெண்டெட் ரியாலிட்டி கிளாஸ்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இதை கொண்டு ஓட்டுனர்கள் ஹாலோகிராபிக் டிஸ்ப்ளேக்களில் போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரங்கள், பரிந்துரைகள், வானிலை நிலவரங்கள் என ஏராளமான தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
பயணங்களின் போது கார்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹாலோ லென்ஸ் 2 ஹெட்செட்-ஐ இயங்க வைக்க போக்ஸ்வேகரன் நிறுவனம் மைக்ரோசாப்ட் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. எதிர்கால போக்குவரத்துக்களில் ஆக்மெண்டெட் ரியாலிட்டி மிக முக்கிய பங்கு வகிக்கும் என போக்ஸ்வேகன் தெரிவித்து உள்ளது.

2015 ஆம் ஆண்டிலேயே போக்ஸ்வேகன் நிறுவனம் தனது ரேஸ் டிரெயினர் கொல்ப் ஆர் மாடலில் ஹாலோ லென்ஸ்-ஐ பயன்படுத்த விருப்பம் தெரிவித்து இருந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. வாகனத்தில் ஹெட்செட்டை பொருத்தும் போது சென்சார்கள் டிராக்கிங் திறனை இழந்து, ஹாலோகிராம்கள் மறைந்து விட்டன.
இதை அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை போக்ஸ்வேகன் அணுகியது. பின் 2018 ஆண்டு முதல் இரு நிறுவனங்கள் இணைந்து இதற்கான தீர்வை காணும் முயற்சியில் ஈடுபட துவங்கி உள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையில் திடீரென மாற்றங்களை செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனம் தனது ஹேச்பேக் கார் மாடல்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வின் படி ஹூணன்டாய் கார் மாடல்கள் விலை ரூ. 3 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை உயர்வு மட்டுமின்றி கார் மாடல்களின் வேரியண்ட் அப்டேட்டும் செய்யப்பட்டு உள்ளது.
விலை உயர்வின் படி ஹூண்டாய் சாண்ட்ரோ ஹேச்பேக் மாடல் விலை ரூ. 4 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும். அதன்படி ஹூண்டாய் சாண்ட்ரோ விலை இந்தியாவில் தற்போது ரூ. 4 லட்சத்து 89 ஆயிரத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 6 லட்சத்து 41 ஆயிரம் என மாறி இருக்கிறது.
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மாடல் விலை ரூ. 9 ஆயிரம் அதிகரித்துள்ளது. இந்த மாடலின் புதிய விலை ரூ. 5 லட்சத்து 39 ஆயிரத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 69 ஆயிரம் என மாறி இருக்கிறது. ஹூண்டாய் i20 மாடலின் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் புதிய விலை ரூ. 7 லட்சத்து 03 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 87 ஆயிரம் என மாறி உள்ளது.
அனைத்து விலைகளும் கார்களின் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய ஸ்கார்பியோ மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய ஸ்கார்பியோ மாடலுக்கான டீசரை மஹிந்திரா நிறுவனம் அதிரடியாக வெளியிட்டு உள்ளது. புதிய ஸ்கார்பியோ மாடல் மும்பையில் உள்ள மஹிந்திரா இந்தியா டிசைன் ஸ்டூடியோவில் டிசைன் செய்யப்பட்டு சென்னை அருகில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வேலியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்கார்பியோ மாடல் முற்றிலும் புது டிசைன், பிரீமியம் இண்டீரியர், அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் புதிய ஸ்கார்பியோ மாடல் ஹூண்டாய் கிரெட்டா, எம்.ஜி. ஹெக்டார், நிசான் கிக்ஸ், போக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக் மற்றும் டாடா ஹேரியர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

டீசரில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலின் எல்.இ.டி. டுவின் ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் 2 லிட்டர் M-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் M-ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இவை முறையே 150 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 130 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும். இத்துடன் இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்படும் என தெரிகிறது.






