search icon
என் மலர்tooltip icon

    கார்

    பி.எம்.டபிள்யூ. கார்
    X
    பி.எம்.டபிள்யூ. கார்

    விலை உயர்ந்த கார்கள்- கனெக்டிவிட்டி இன்றி விற்பனை செய்யும் பி.எம்.டபிள்யூ. - ஏன் தெரியுமா?

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது கார் மாடல்களை கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் இன்றி விற்பனை செய்து வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான பி.எம்.டபிள்யூ. தனது பிரபல கார் மாடல்களான 3 சீரிஸ், 4 சீரிஸ், Z4 மற்றும் பல்வேறு கிராஸ் ஓவர் மாடல்களை இண்டர்நெட் கனெக்டி ஆப்ஷன்களான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இன்றி விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த கனெக்டிவிட்டி அம்சங்கள் இன்றி விற்பனை செய்யப்படும் கார்களுக்கு எதிர்காலத்தில் அப்டேட் வழங்கப்படும் என பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    2022 ஜூன் மாத இறுதியில் கனெக்டிவிட்டி அம்சங்கள் அனைத்தும் ஓவர் தி ஏர் அப்டேட்கள் மூலம் கார்களுக்கு வழங்கப்படும் என பி.எம்.டபிள்யூ. தெரிவித்து இருக்கிறது. புதிய சிப்செட்களில் வைபை வசதி இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த பிரச்சினை எத்தனை மாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்ற விவரங்களை பி.எம்.டபிள்யூ. இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும், இந்த பிரச்சினை உள்ள கார் மாடல்கள் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தொழில்நுட்ப அம்சங்கள் இன்றி கார்களை விற்பனை செய்வது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்திற்கு புதிய விஷயம் இல்லை. முன்னதாக பல்வேறு கார் மாடல்களில் தொடுதிரை வசதி இன்றி பி.எம்.டபிள்யூ. விற்பனை செய்து இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. குழுமத்தை சேர்ந்த மினி மற்றும் இதர பிராண்டுகளும் சிப்செட் குறைபாடு காரணமாக கார் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்து உள்ளன. 
    Next Story
    ×