என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய 3 சீரிஸ் பேஸ்லிப்ட் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதுபற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் பிரீமியம் செடான் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன்படி இந்த காரில் நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. 

    மாற்றங்களை பொருத்தவரை புதிய 3 சிரிஸ் மாடலில் ஒட்டுமொத்தமாக ஸ்டைலிங் அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது. புகைப்படங்களின் படி புதிய காரின் முன்புறம் 3 சீரிஸ் தோற்றத்தை வெளிப்படுத்தும் கூர்மையான புது ஹெட்லேம்ப் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ரிவைஸ்டு கிரில், குரோம் இன்சர்ட்கள், காரின் ப்ரோபைல் பகுதி அதிக மாற்றங்களை கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    பின்புறம் அப்டேட் செய்யப்பட்ட ட்வீக்டு பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேபின் பகுதியில் அதிக ஹை-டெக் இன்போடெயின்ட வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் புதிய பி.எம்.டபிள்யூ. கார் இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடலில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் 3 சீரிஸ் மற்றும் 3 சிரிஸ் GL மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி பி.எம்.டபிள்யூ. M340i மாடலுடன் 3 லிட்டர், 6 சிலிண்டர், ட்வின் டர்போ என்ஜின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படிகிறது.

    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பார்ச்சூனர் வேரியண்டை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டொயோட்டா இந்தியா நிறுவனம் பார்ச்சூனர் GR-S அல்லது கசூ ரேசிங் ஸ்போர்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பார்ச்சூனர் GR-S மாடல் விலை ரூ. 48 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் டீசல் 4x4 AT ட்ரிம் வடிவில் ஒற்றை லோடட் வேரியண்ட்-இல் கிடைக்கிறது.

    வழக்கமான வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது டொயோட்டா பார்ச்சூனர் GR-S மாடலில் பிளாக்டு-அவுட் அலாய் வீல்கள், டூயல் டோன் ரேடியேட்டர் கிரில், GR ஸ்போர்ட்ஸ் டியூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷன், GR ஸ்பெக் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், GR ஸ்பெக் சீட்கள், GR ஸ்பெக் எனஅஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

     டொயோட்டா பார்ச்சூனர் GR-S

    மற்ற அம்சங்களை பொருத்தவரை குவாட் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட்மெண்ட் வசதி கொண்ட ORVM-கள், ABS EBD, VSC, TRC, BA, HAC, ஏழு ஏர்பேக், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, பவர்டு டெயில் கேட், டிரைவ் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டொயோட்டா பார்ச்சூனர் GR-S மாடலில் 2.8 லிட்டர், 4 சிலிண்டர், டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் ஆட்டிட்யூட் பிளாக் மற்றும் வைட் பியல் க்ரிஸ்டல் ஷைன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
    கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. புது விலை விவரங்களை பார்ப்போம்.


    கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை சமீபத்தில் உயர்த்தியது. இதில் 390 டியூக் மற்றும் 250 டியூக் மாடல்கள் விலை மட்டும் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இரு மாடல்களின் விலை தற்போது ரூ. 2 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

    புதிய  விலை உயர்வின் படி கே.டி.எம். 390 டியூக் மற்றும் 250 டியூக் மாடல்கள் விலை முறையே ரூ. 2 லட்சத்து 94 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் என மாறி இருக்கிறது. புதிய விலை மே 5 ஆம் தேதி முதல் அமலாகி இருக்கின்றன. உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக இரு மோட்டார்சைக்கிள்களின் விலை உயர்த்தப்படுவதாக கே.டி.எம். நிறுவனம் டீலர்களிடம் தெரிவித்து உள்ளது.

     கே.டி.எம். 250 டியூக்

    390 மற்றும் 250 டியூக் மாடல்கள் தோற்றத்தில் ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கின்றன. இதன் பெயிண்ட் மற்றும் ஹெட்லேம்ப்-இல் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இரு மாடல்களிலும் சேசிஸ், வீல்கள், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் உள்ளிட்டவை ஒரே மாதிரியாகவே வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் பெரும் வித்தியாசம் என்ஜின் மட்டும் தான் எனலாம்.

    அந்த வகையில் கே.டி.எம். 390 டியூக் மாடலில் 373சிசி, என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 42.9 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டியூக் 250 மாடலில் 248சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 29.6 ஹெச்.பி. பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு மாடல்களிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. எனினும் 390 டியூக் மாடலில் பை-டைரெக்‌ஷனல் குவிக் ஷிப்டர் வழங்கப்பட்டு உள்ளது. 
    ஓலா நிறுவனத்தின் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக 65 வயதான முதியவர் படுகாயம் அடைந்துள்ளார்.


    ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் ஓலா S1 ப்ரோ மாடலில் ஏற்பட்ட மென்பொருள் குறைபாடு காரணமாக படுகாயம் அடைந்துள்ளது. இதுபற்றிய தகவல்களை பாதிக்கப்பட்ட முதியவரின் மகள் பல்லவ் மகேஸ்வரி தனது லின்க்டுஇன் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். 

    அதன்படி ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டரை ரிவர்ஸ் மோடில் இயக்க முயற்சித்த போது திடீரென ஸ்கூட்டர் அதிவேகமாக ரிவர்ஸ் மோடில் இயங்கி இருக்கிறது. இதில் நிலை தடுமாறிய முதியவர் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் முதியவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பத்து தையல்கள் போடப்பட்டுள்ளன. மேலும் அவரது இடபுற தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இரண்டு பிளேட்கள் வைக்கப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவரின் மகன் தெரிவித்து இருக்கிறார். 

    ஓலா நிறுவனத்தின் S1 சீரிஸ் ஸ்கூட்டர்கள் ரிவர்ஸ் மோடில் இருக்கும் போது திடீரென அதிவேகமாக செல்கிறது என கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. முன்னதாக இதேபோன்ற பிரச்சினை காரணமாக மேலும் சிலர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர். எனினும், இதுவரை ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டர்களில் S1 சீரிஸ் ரிவர்ஸ் மோட் பிரச்சினையை சரி செய்யவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

    ரிவர்ஸ் மோட் மட்டுமின்றி ஓலா S1 சீரிஸ் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் பற்றி விசாரணையை மேற்கொள்வதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்து இருந்தது. எனினும், இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2023 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் காரின் இந்திய விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது.


    சில நாட்களுக்கு முன் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த மாடலுக்கான இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி 2023 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 1 கோடியே 64 லட்சம், எக்ஸ்-ஷோரூம்  என துவங்குகிறது. 

    புதிய தலைமுறை லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் SE, HSE, Autobiography மற்றும் Fist Edition போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலின் வினியோகம் நவம்பர் மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது. மேற்கத்திய சந்தைகளில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    ஆனால் இந்திய சந்தையில் இந்த மாடல் ஒற்றை டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. நிறங்களை பொருத்தவரை ஏராளமான புது ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புது விலைகளுடன் லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் அம்சங்களும் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் வரும் மாதங்களில் இதன் விலையும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

     2023 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட்

    2023 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் இந்திய மாடலில் டிஜிட்டல் எல்.இ.டி. ஹெட்லைட்கள், ஹீடெட் ரியர் வியு மிரர்கள், இலுமினேட் செய்யப்பட்ட சீட்பெல்ட் பக்கில்கள், மெரிடியன் 3D சவுண்ட் சிஸ்டம், செண்ட்ரல் இன்பர்மேஷன் ஸ்கிரீன் ப்ரோ, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஹெட்-அப் டிஸ்ப்ளே, டிரைவர் அசிஸ்ட் பேக் மற்றும் சரவுண்ட் வியு கேமரா செட்டப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் 2023 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் 3 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட, டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 345 பி.ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும்.

    மேலும் மணிக்கு அதிகபட்சமாக 234 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்டில் 2996சிசி, 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் பெரிய பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. 
    ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் தனது கார் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை மே மாத இறுதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்பட இருக்கிறது. தள்ளுபடி சலுகைகள் ரெனால்ட் நிறுவனத்தின் க்விட், டிரைபர் மற்றும் கைகர் போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் கார் மாடல்களுடன் ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூரல் சலுகையின் கீழ் ரூ. 5 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூரல் சலுகை விவசாயிகள், சார்பன்ச் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் கீழ் பயன்பெற ரெனால்ட் அங்கீகரித்த தரவுகள் வைத்திருக்க வேண்டும்.

    ரெனால்ட் க்விட்:

    2021 ரெனால்ட் க்விட் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரூ. 37 ஆயிரம் வரையிலான லாயல்டி பலன்கள், ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. 

    ரெனால்ட் க்விட் 2022 மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள், ரூ. 37 ஆயிரம் மதிப்பிலான லாயல்டி பலன்கள், ரெனால்ட் நிறுவனத்தின் ரிலிவ் ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் சலுகை வழங்கப்படுகிறது. 
     ரெனால்ட் கார்

    ரெனால்ட் டிரைபர்:

    ரெனால்ட் டிரைபர் 2021 எம்.பி.வி. மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள், ரூ. 44 ஆயிரம் லாயல்டி பலன்கள், ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. 2022 ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 44 ஆயிரம் லாயல்டி பலன்கள், ரெனால்ட் நிறுவனத்தின் ரிலிவ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் கைகர்:

    ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 55 ஆயிரம்  வரையிலான லாயல்டி பலன்கள், ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை மற்றும் ரெனால்ட் நிறுவனத்தின் ரிலிவ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் லைவ் வயர் பிராண்டு இ பைக் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிரிவு லைவ் வயர் சமீபத்தில் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட S2 டெல் மார் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இத்துடன் இதே மாடலின் லான்ச் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. எனினும், இந்த மாடல் மொத்தத்தில் 100 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் லைவ் வயர் S2 டெல் மார் LE மாடல் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்தது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த மாடல் அமெரிக்காவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. மற்ற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த மோட்டார்சைக்கிளை வாங்க மேலும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

    புதிய டெல் மார் மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த இ பைக் 80 பி.ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது லைவ் வயர் ஒன் மாடலில் உள்ளதை விட 20 சதவீதம் குறைவு ஆகும். மேலும் இது முந்தைய மாடலை விட 25 சதவீதம் எடை குறைவாக இருக்கிறது.

    இந்த இ பைக் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த மாடலில் பில்ட் இன் GPS, இண்டர்நெட் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஓவர் தி ஏர் அப்டேட் மூலம் புது அம்சங்கள் வழங்கப்படும். 
    எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிப்பது பற்றி ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.


    எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஓலா எலெக்ட்ரிக் மட்டும் தான். மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடிக்கடி வெடித்து சிதறும் நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கு முன்பே அதிக பிரிபலம் அடைந்து விட்டது. 

    சமீப காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிப்பது பற்றி ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    அதன்படி, “புதிய ஆட்டோமொபைல் பிரிவில் எலெக்ட்ரிக் வாகன தீ விபத்துக்கள் மிக எளிதில் பலரின் கவனத்தை ஈர்த்து விடுகிறது,” என்று பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். எலெக்ட்ரிக் வாகன தீ விபத்துக்களை அடுத்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் பேசி இருந்தார் என தகவல் வெளியாகி உள்ளது.

    “எதிர்காலத்திலும் இதே போன்று நடக்கும், ஒரு வேளை நடக்கலாம். ஆனால் வாகனத்தின் அனைத்து பிரச்சினையையும் கவனித்து சரி செய்வது தான் எங்கள் குறிக்கோள். ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதனை உடனே சரி செய்து விடுவோம். சிறு பிரச்சினைகள் காரணமாக எதிர்காலத்திலும் இ ஸ்கூட்டர்களில் தீ விபத்து ஏற்படும். சாலைகளில் வலம் வரும் 50 ஆயிரம் ஓலா இ ஸ்கூட்டர்களில் ஒன்று தான் வெடித்து இருக்கிறது,” என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது புதிய X1 மாடலுக்கான புது டீசரை வெளியிட்டு உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    பி.எம்.டபிள்யூ. தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வரிசையில், பி.எம்.டபிள்யூ. அறிமுகம் செய்ய இருக்கும் புது மாடல் X1 EV ஆகும். புதிய எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் டீசர் முதல் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஸ்வீடன் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆர்ஜ்ப்ளாக் ஆலை அருகில் சோதனை செய்யப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் மாடல்களை போன்றே பி.எம்.டபிள்யூ. iX1 மாடலும் ஐந்தாம் தலைமுறை இடிரைவ் பவர்டிரெயினில் உருவாக்கப்படுகிறது. இதில் டூயல் மோட்டார் செட்டப் மற்றும் AWD சிஸ்டம், அதிக வோல்டேஜ் பேட்டரி பேக் வழங்கப்பட இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 413 முதல் 438 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.  

    பி.எம்.டபிள்யூ. X1

    பி.எம்.டபிள்.யூ. iX1 மாடலின் இதர தொழில்நுட்ப விவரங்கள் தற்போது வெளியாகவில்லை. எனினும், இவை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பாக்கலாம். புதிய X1 மாடலின் பிளக் இன் ஹைப்ரிட் வெர்ஷன்களும் வழங்கப்படுகிறது. இவை அதன் சர்வதேச வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

    புது பி.எம்.டபிள்.யூ. மாடல்கள் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இவற்றின் இந்திய வெளியீடு அடுத்த ஆண்டு வாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நீண்ட ரேன்ஜ் வழங்கும் நெக்சான் EV மேக்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 74 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40.5kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. நீண்ட ரேன்ஜ் மட்டுமின்றி டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் அசத்தலான அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     டாடா நெக்சான் EV மேக்ஸ்

    இந்திய சந்தையில் டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் XZ+ மற்றும் ZX+ லக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் இண்டென்சி டீல், டேடோனா கிரே மற்றும் ப்ரிஸ்டைன் வைட் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இண்டென்சி டீல் நிறம் நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. 

    தோற்றத்தில் புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் முந்தைய நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் வித்தியாசப்படுத்தும் வகையில் மேக்ஸ் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. புதிய நெக்சான் EV மேக்ஸ் அதன் ஸ்டாண்டர்டு மாடலுடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

     டாடா நெக்சான் EV மேக்ஸ்

    புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் உள்ள 40.5Kwh லித்தியம் அயன் பேட்டரி பேக், முந்தைய நெக்சான் EV மாடலில் உள்ளதை விட 33 சதவீதம் பெரியது. இதன் காரணமாக புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த கார் 141 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளுக்குள் எட்டிவிடும். இது முந்தைய நெக்சான் EV மாடலை விட 100 கிலோ எடை அதிகம் ஆகும். புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடலுடன் 3.3 கிலோவாட் அல்லது 7.2 கிலோவாட் AC பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.
    யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் மாடலின் விலை மீண்டும் மாற்றி அமைத்து இருக்கிறது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.


    யமஹா ஏரோக்ஸ் 155 விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டது. தற்போதைய விலை உயர்வை சேர்த்து ஏரோக்ஸ் மாடல் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இம்முறை யமஹா ஏரோக்ஸ் 155 விலை ரூ. 1,800 உயர்த்தப்பட்டு உள்ளது. 

     யமஹா ஏரோக்ஸ் 155

    விலை உயர்வின் படி ஏரோக்ஸ் 155 விலை தற்போது ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை உயர்வு தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. யமஹா ஏரோக்ஸ் 155 மாடலில் 155சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் யமஹா R15 மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த மாடலில் லிக்விட் கூலிங், வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் 155 மாடல் ரேசிங் புளூ, கிரே வெர்மிலான் மற்றும் மெட்டாலிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தை வாகன விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக புது தகவலை வெளியிட்டு உள்ளது.

    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. மாடல் மூலம் எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்கியது. இந்தியாவில் களமிறங்கி மூன்று ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எம்.ஜி. மோட்டார்ஸ் எட்டி இருக்கிறது.

    தற்போது எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் - எம்.ஜி. ஹெக்டார், எம்.ஜி. ஹெக்டார் பிளஸ், எம்.ஜி. ஆஸ்டர், எம்.ஜி. ZS EV மற்றும் எம்.ஜி. குளோஸ்டர் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. எனினும், இந்தியாவில் எம்.ஜி. மோட்டார் இந்தியா ஒரே ஒரு உற்பத்தி ஆலையை வைத்திருக்கிறது. இந்த உற்பத்தி ஆலை குஜராத் மாநிலத்தின் ஹலோல் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த உற்பத்தி ஆலையில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 37 சதவீதம் பெண் ஊழியர்கள் ஆவர். மேலும் 2023 டிசம்பர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கையை 50 சதவீதமாக அதிகரிக்க எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது. சமீபத்தில் எம்.ஜி. மோட்டார் நிறுவனம் மேம்பட்ட எம்.ஜி. ZS EV மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    ×