search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாகுவார் லேண்ட் ரோவர்"

    • இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும்.
    • எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து மேம்பட்ட திட்ட விவரங்கள் வெளியீடு.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டிற்குள் ஆறு எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு செய்துள்ள நிலையில், இது அந்த பட்டியலில் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ரி-இமாஜின் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஸ்டிராடஜி என்ற திட்டத்தை உருவாக்கி இருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி தெய்ரி பாலோர் தெரிவித்து இருந்தார். தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் அட்ரியன் மார்டெல் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து மேம்பட்ட திட்ட விவரங்களை வெளியிட்டுள்ளார்.

     


    அதில், "2026 ஆம் ஆண்டிற்குள் ஆறு லேண்ட் ரோவர்கள் பற்றி தெரிவித்து இருந்தோம். 2026 ஆம் ஆண்டிற்குள் ஆறு ஜாகுவார் லேண்ட் ரோவர் மாடல்களை வைத்திருப்பது கிட்டத்தட்ட சாத்தியமாகி வருகிறது. புதிய தொழில்நுட்பம் கொண்டு இதுவரை நாங்கள் உருவாக்கியதிலேயே மிகவும் சிறப்பான வாகனங்களை உற்பத்தி செய்வதில் நாங்கள் கவனமுடன் பணியாற்றி வருகிறோம்," என்று தெரிவித்தார்.

    தற்போது மாற்றப்பட்ட புதிய திட்டப்படி ரேன்ஜ் ரோவர் EV மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் EV மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் EV மாடல் முதலில் அறிமுகம் செய்யப்படுகிறது. இரு மாடல்களும் MLA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இவற்றுடன் இரண்டு சிறிய எஸ்.யு.வி.-க்கள் முற்றிலும் புதிய EMA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கிறது.

    சிறிய கார்கள் ரேன்ஜ் ரோவர் இவோக் மற்றும் வெலார் EV மாடல்களாக இருக்கும் என்று தெரிகிறது. நான்கு கார்கள் தவிர டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் டிஃபென்டர் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இணையும் என்று எதிர்பார்க்கலாம். 

    • இதில் 4.4 லிட்டர் டுவின் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது.
    • இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும்.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் SV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரேன்ஜ் ரோவர் SV மாடலின் விலை ரூ. 2 கோடியே 80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எஸ்.யு.வி.-யின் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இதில் 4.4 லிட்டர் டுவின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள 4.4 லிட்டர் வி8 என்ஜின் 626 ஹெச்.பி. பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 290 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.


     

    சக்திவாய்ந்த என்ஜின் மட்டுமின்றி, இந்த எஸ்.யு.வி. மாடலின் லோயர் பாடி ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் கார்பன் ஃபைபர் டிப் கொண்ட குவாட் டெயில்பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் கேபின் பகுதியில் SV சார்ந்த பெர்ஃபார்மன்ஸ் ஸ்போர்ட் சீட்கள், கார்பன் ஃபைபர் பேக் உள்ளது.

    இதில் உள்ள பேக்ரெஸ்ட் மற்றும் கியர் லீவர்களில் இலுமினேட் செய்யப்பட்ட SV லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரேன்ஜ் ரோவர் SV மாடல் லம்போர்கினி உருஸ், ஆடி RSQ8 மற்றும் ஆஸ்டன் மார்டின் DBX போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • ஜாகுவார் நிறுவனத்திற்கு என பிரத்யேக லோகோ ஒன்று இருந்ததே இல்லை.
    • லேண்ட் ரோவர் பிராண்டு தொடர்ந்து நிறுவனத்தின் டி.என்.ஏ.-வில் மிகமுக்கிய அங்கமாக தொடரும்.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முற்றிலும் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தின் பெயர் ஜெ.எல்.ஆர். (JLR) என்று மாற்றப்படுகிறது. புதிய லோகோ மிக எளிய டிசைன் கொண்டிருக்கிறது. இதில் JLR என்ற எழுத்துக்கள் மினிமலிஸ்ட் ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. இது ஜெ.எல்.ஆர். வாகனங்கள் மற்றும் விற்பனை மையங்களின் ஸ்டைலிங்கை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக ஜாகுவார் நிறுவனத்திற்கென பிரத்யேக லோகோ ஒன்று இருந்ததே இல்லை. மாறாக ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டுகளுக்கென தனி லோகோக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தன. இவை எந்த கார்களிலும் இடம்பெறவில்லை.

    புதிய லோகோவை அறிமுகம் செய்த ஜெ.எல்.ஆர்., "லேண்ட் ரோவர் பிராண்டு தொடர்ந்து நிறுவனத்தின் டி.என்.ஏ.-வில் மிகமுக்கிய அங்கமாக தொடரும். நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க ஓவல் வடிவ பேட்ஜ், வாகனங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படும்," என்று தெரிவித்து இருக்கிறது.

    டிஃபெண்டர், ரேன்ஜ் ரோவர் மற்றும் டிஸ்கவரி மாடல்களுக்கு டிரஸ்ட் மார்க்-ஆக (TrustMark) லேண்ட் ரோவர் உருவெடுக்கும் என்று மூத்த அதிகாரியான கெரி மெக்கோவென் தெரிவித்துள்ளார்.

    ×