search icon
என் மலர்tooltip icon

    கார்

    டாடா நெக்சான் EV மேக்ஸ்
    X
    டாடா நெக்சான் EV மேக்ஸ்

    ரூ. 17.74 லட்சம் துவக்க விலையில் அறிமுகமான நெக்சான் EV மேக்ஸ் - 437கி.மீ. ரேன்ஜ் வழங்கும்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நீண்ட ரேன்ஜ் வழங்கும் நெக்சான் EV மேக்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 74 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40.5kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. நீண்ட ரேன்ஜ் மட்டுமின்றி டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் அசத்தலான அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     டாடா நெக்சான் EV மேக்ஸ்

    இந்திய சந்தையில் டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் XZ+ மற்றும் ZX+ லக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் இண்டென்சி டீல், டேடோனா கிரே மற்றும் ப்ரிஸ்டைன் வைட் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இண்டென்சி டீல் நிறம் நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. 

    தோற்றத்தில் புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் முந்தைய நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் வித்தியாசப்படுத்தும் வகையில் மேக்ஸ் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. புதிய நெக்சான் EV மேக்ஸ் அதன் ஸ்டாண்டர்டு மாடலுடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

     டாடா நெக்சான் EV மேக்ஸ்

    புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் உள்ள 40.5Kwh லித்தியம் அயன் பேட்டரி பேக், முந்தைய நெக்சான் EV மாடலில் உள்ளதை விட 33 சதவீதம் பெரியது. இதன் காரணமாக புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த கார் 141 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளுக்குள் எட்டிவிடும். இது முந்தைய நெக்சான் EV மாடலை விட 100 கிலோ எடை அதிகம் ஆகும். புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடலுடன் 3.3 கிலோவாட் அல்லது 7.2 கிலோவாட் AC பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×