என் மலர்

  பைக்

  கே.டி.எம். 250 டியூக்
  X
  கே.டி.எம். 250 டியூக்

  இந்தியாவில் பைக் விலையை அதிரடியாக உயர்த்திய கே.டி.எம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. புது விலை விவரங்களை பார்ப்போம்.


  கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை சமீபத்தில் உயர்த்தியது. இதில் 390 டியூக் மற்றும் 250 டியூக் மாடல்கள் விலை மட்டும் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இரு மாடல்களின் விலை தற்போது ரூ. 2 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

  புதிய  விலை உயர்வின் படி கே.டி.எம். 390 டியூக் மற்றும் 250 டியூக் மாடல்கள் விலை முறையே ரூ. 2 லட்சத்து 94 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் என மாறி இருக்கிறது. புதிய விலை மே 5 ஆம் தேதி முதல் அமலாகி இருக்கின்றன. உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக இரு மோட்டார்சைக்கிள்களின் விலை உயர்த்தப்படுவதாக கே.டி.எம். நிறுவனம் டீலர்களிடம் தெரிவித்து உள்ளது.

   கே.டி.எம். 250 டியூக்

  390 மற்றும் 250 டியூக் மாடல்கள் தோற்றத்தில் ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கின்றன. இதன் பெயிண்ட் மற்றும் ஹெட்லேம்ப்-இல் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இரு மாடல்களிலும் சேசிஸ், வீல்கள், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் உள்ளிட்டவை ஒரே மாதிரியாகவே வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் பெரும் வித்தியாசம் என்ஜின் மட்டும் தான் எனலாம்.

  அந்த வகையில் கே.டி.எம். 390 டியூக் மாடலில் 373சிசி, என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 42.9 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டியூக் 250 மாடலில் 248சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 29.6 ஹெச்.பி. பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு மாடல்களிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. எனினும் 390 டியூக் மாடலில் பை-டைரெக்‌ஷனல் குவிக் ஷிப்டர் வழங்கப்பட்டு உள்ளது. 
  Next Story
  ×