என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஒடிசி இரண்டு புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
மும்பையை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஒடிசி இந்திய சந்தையில் V2 மற்றும் V2 பிளஸ் பெயரில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஒடிசி V2 மற்றும் V2 பிளஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 75 ஆயிரம் மற்றும் ரூ. 97 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஒடிசி V2 மற்றும் ஒடிசி V2 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை சேர்த்து மொத்தம் ஆறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஒடிசி நிறுவனம் விற்பனை செய்கிறது.
இவை தவிர ஆண்டி தெப்ட் லாக், பேட்டரி கூலிங் தொழில்நுட்பம், கச்சிதமான பூட் ஸ்பேஸ், 12 இன்ச் அளவில் முன்புற டையர், எல்.இ.டி. லைட்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு புதிய ஸ்கூட்டர்கள் மட்டும் இன்றி ஒடிசி நிறுவனம் E2கோ, ஹாக் பிளஸ், ரேசர் மற்றும் எவோகிஸ் என நான்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

புது மாடல்கள் வெளியீட்டை தொடர்ந்து இந்தியா முழுக்க தனது டீலர் நெட்வொர்க் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக உயர்த்த ஒடிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகப்படுத்தவும் ஒடிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஆமதாபாத், மும்பை மற்றும் ஐதராபாத் நகரங்களை தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் உற்பத்தி ஆலைகளை கட்டமைக்க ஒடிசி நிறுவனம் முடிவு செய்துது.
புதிய ஒடிசி V2 மற்றும் V2 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட் IP67 தர வசதி கொண்ட பேட்டரிகள் உள்ளன. இந்த ஸ்கூட்டர்கள் முழு சார்ஜ் செய்தால் 150 கி.மீ. ரேன்ஜ் வழங்குகின்றன. ஒடிசி V2 மற்றும் V2 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் பல்வேறு விதமான நிறங்களில் கிடைக்கின்றன.
ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய அதிரடி திட்டங்களை தீட்டி வருகிறது. இதன் அங்கமாக புதிய EV ஆலையை திறக்க முடிவு செய்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் டெஸ்லாவுக்கு அச்சுறுத்தலான பிராண்டாக பார்க்கப்படுகிறது. ஐயோனிக் 5 மாடல் ஆண்டின் சிறந்த கார் என்ற பெருமையை பெற்றதோடு, ஹூண்டாய் பிராண்டின் EV6 மற்றும் ஜெனிசிஸ் GV60 போன்ற மாடல்கள் மூலம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் குறிப்பிடத்தக்க பங்குகளை பிடிக்க திட்டமிட்டுள்ளது.
இதோடு ஹூண்டாய் நிறுவனத்தின் கியா பிராண்டு இந்திய சந்தையில் தனது EV6 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இந்த வரிசையில், ஹூண்டாய் நிருவனம் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை திறக்க முடிவு செய்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகன சந்தையில் கவனம் செலுத்த ஹூண்டாய் நிறுவனம் 7.4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து புதிய ஆலையை துவங்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன.
தற்போது இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஹூண்டாய் செய்தி தொடர்பாளர், “அமெரிக்காவில் புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை துவங்க இருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதுதவிர இப்போதைக்கு தெரிவிக்க வேறு எந்த தகவல்களும் இல்லை,” என தெரிவித்தார்.
டொயோட்டா நிறுவனம் உருவாக்கி புதிய இன்னோவா மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் பிரபல எம்.பி.வி. மாடலாக இன்னோவா இருக்கிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் டொயோட்டா இன்னோவா விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், டொயோட்டா இன்னோவா மாடல் விரைவில் அப்டேட் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேம்பட்ட அம்சங்களுடன் உருவாகி வரும் இன்னோவா கார் அடுத்த தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய டொயோட்டா இன்னோவா மாடல் இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டம் அதாவது அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிய டொயோட்டா இன்னோவா மாடல் மோனோக் சேசிஸ் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மாடலில் டீசல் என்ஜினுக்கு மாற்றாக பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் புதிய டொயோட்டா இன்னோவா மாடலில் அதிக மைலேஜ் வழங்கும் என தெரிகிறது. இதோடு புதிய இன்னோவா மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா மாடல் 4.7 மீட்டர் நீளமாக இருக்கும் என தெரிகிறது. இது இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட அளவில் சிறியது ஆகும். அளவில் சிறியதாக இருந்தாலும் புதிய மாடல் அதிக இடவசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய இன்னோவா மாடல் வீல்பேஸ் 2850 மில்லிமீட்டர் அளவிலும், வீல்களுக்கு இடையில் அதிக இடைவெளி உள்ளது. இதனால் காரின் உள்புறத்தில் அதிக இடவசதி கிடைக்கும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஹேரியர் மாடலை அப்டேட் செய்து மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை தொடர்ச்சியாக அப்டேட் செய்து வருகிறது. கடந்த மாதம் ஹேரியர் மாடலை ஆறு புது நிறங்களில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்து இருந்தது. இந்த நிலையில், தற்போது டாடா ஹேரியர் மாடலை மூன்று புது வேரியண்ட்களில் அறிமுகம் செய்து உள்ளது.
அந்த வகையில் டாடா ஹேரியர் மாடல் தற்போது XZS, XZS டூயல் டோன் மற்றும் XZS டார்க் எடிஷன் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த புது வேரியண்ட்கள் மேனுவல் டிரான்ஸ்மிஷ் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. புது வேரியண்ட்களில் XZS மாடல் XZ வேரியண்டின் மேல், XZ பிளஸ் வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த வேரியண்டில் பானரோமிக் சன்ரூப், ஆட்டோ டிம்மிங் IRVM, 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், டூயல் டோன் பெயிண்ட் (ஆப்ஷனல்), ஓட்டுனர் இருக்கையை 6 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று புதிய வேரியண்ட்களிலும் 2 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய டாடா ஹேரியர் XZS மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் விலை ரூ. 20 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் XZS டார்க் எடிஷன் விலை ரூ. 21 லட்சத்து 60 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கே.டி.எம். நிறுவனம் விரைவில் 2022 RC 390 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக 2022 கே.டி.எம். RC390 இருக்கிறது. இந்த மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்வெளியாகி உள்ளது. புதிய 2022 கே.டி.எம். RC390 மாடல் முந்தைய மாடலை விட அதிக அப்டேட்களை பெற்று இருக்கிறது.
இவற்றில் புதிய டிரெலிஸ் ஃபிரேம், போல்ட்-ஆன் சப்-ஃபிரேம் உள்ளிட்டவை அடங்கும்.இதுதவிர 1.7 கிலோ குறைந்த எடை கொண்ட 5 ஸ்போக் அலாய் வீல்கள், பெரிய 13.7 லிட்டர் பியூவல் டேன்க், லைட் பிரேக்கிங் ஹார்டுவேர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றங்கள் காரணமாக புதிய 2022 கே.டி.எம். RC390 மாடல் எடை குறைந்து இருக்கும் என தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் புது மாடல் முன்பை விட சிறப்பான ஹேண்ட்லிங் வழங்கும்.

2022 கே.டி.எம். RC390 மாடலில் புதிய TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், குவிக்ஷிப்டர், கார்னெரிங் ஏ.பி.எஸ். மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய 2022 கே.டி.எம். RC390 மாடலில் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த என்ஜின் 43.5 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய 2022 கே.டி.எம். RC390 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RR310, கவாசகி நின்ஜா 300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
பிகாஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய D15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இரண்டு வெவ்வேறு வேரியண்ட்களில் அறிமுகம் செய்து இருக்கிறது.
பிகாஸ் நிறுவனம் இந்தியாவில் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. BG D15 என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - BG D15i மற்றும் BG D15 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 99 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் வினியோகம் ஜூன் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
புதிய பிகாஸ் BG D15 ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் அதனை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்கூட்டர் அறிமுகம் செய்ததோடு இந்திய சந்தையில் தனது விற்பனையை அதிகப்படுத்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட சந்தைகளில் டீலர் நெட்வொர்க்-ஐ அதிகப்படுத்த திட்டம் தீட்டி இருக்கிறது.

தற்போது நாடு முழுக்க 100 ஷோரூம்களை பிகாஸ் இயக்கி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பிகாஸ் முடிவு செய்து உள்ளது. புதிய பிகாஸ் BG D15 மாடலில் 3.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை 7 நொடிகளுக்குள் எட்டிவிடும்.
பிகாஸ் BG D15 ஸ்கூட்டர் இகோ மற்றும் ஸ்போர்ட் என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இதில் 16 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5.30 மணி நேரம் ஆகும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 115 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த ஸ்கூட்டர் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 ஸ்கார்பியோ மாடலின் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் உற்பத்தி பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஸ்கார்பியோ மாடல் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், வெளியீட்டைஓட்டி புது மாடலுக்கான டீசர்களை மஹிந்திரா அவ்வப்போது வெளியிட்டு எதிர்பார்ப்புகளை மேலும் எகிற செய்து வருகிறது.
அதன்படி உற்பத்தி ஆலையில் வைத்து எடுக்கப்பட்ட 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புது புகைப்படங்களின் படி 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலின் முன்புறம் செங்குத்தான கிரில், புது எலிமண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் புதிய மஹிந்திரா லோகோ காணப்படுகிறது. இத்துடன் சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பாக் லேம்ப்கள் காணப்படுகின்றன.
காரின் பின்புறம் ரி-டிசைன் செய்யப்பட்ட டெயில்கேட், பின்புறம் கீழ் பகுதியில் கிடைமட்டமான ப்ரோபைல் கொண்டிருக்கிறது. இத்துடன் இருபுறங்களிலும் பம்ப்பர் மற்றும் க்ர்ம் ஸ்ட்ரிப் ப்ரிட்ஜிங் உள்ளது. இந்த மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் EV6 எலெக்ட்ரிக் கார் அம்சங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா, தனது இந்திய வெளியீட்டை ஒத்திவைத்து இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் அதிகளவு இறக்குமதி வரி காரணமாக டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்கும முடிவை ஒத்தி வைப்பதாக கூறப்பட்டு இருந்தது.
இதனிடையே கியா இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஹூண்டாய் நிறுவனம் தனது EGMP EV பிளாட்பார்மை இந்தியா கொண்டு வருகிறது. இந்த பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் கியா EV6 மாடலும் இதே பிளாட்பார்மை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனத்தின் EGMP EV பிளாட்பார்ம் கொண்டு உருவாக்கப்பட்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் கார் மாடல் என்ற பெருமையை கியா EV6 பெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய கியா EV6 காரின் ஏர் வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இந்த கார் ரியர் வீல் டிரைவ் கான்பிகரேஷன் கொண்டிருக்கிறது. கியா EV6 GT லைன் மாடலில் ஏராளமான அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் பில்ட் இன் டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ABS, BAS, ESC, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹைவே டிரைவிங் அசிஸ்ட் மற்றும் வெஹிகில் ஸ்டேபிலிட்டி மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
லம்போர்கினி நிறுவனத்தின் பிரபல எஸ்.யு.வி. மாடல் எலெக்ட்ரிக் வடிவம் கொண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
லம்போர்கினி நிறுவனத்தின் அதிக பிரபலமான எஸ்.யு.வி. மாடல் உருஸ் விளங்குகிறது. லம்போர்கினி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகி வரும் உருஸ் மாடலை, விரைவில் முழுமையான எலெக்ட்ரிக் மாடல் வெர்ஷனில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லம்போர்கினி நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவர் மிட்ஜா பரோகெர்ட் ஆல்-எலெக்ட்ரிக் லம்போர்கினி உருஸ் எஸ்.யு.வி. வெளியீடு பற்றிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். எனினும், இதற்கு இன்னும் சில காலம் ஆகும் என தெரிகிறது.

“இப்போதா அல்லது தாமதம் ஆகுமோ என தெரியாது, உருஸ் மாடல் நிச்சயம் எலெக்ட்ரிக் வடிவம் பெறும்... உண்மையை சொல்லப் போனால், உலகில் இந்த டிரெண்ட் நிச்சயம் சூடுப் பிடித்துக் கொண்டு தான் வருகிறது. இப்போதே உருஸ் எலெக்ட்ரிக் வேரியண்ட் உருவாகும் என்று நான் கூற மாட்டேன், ஆனால் இதுபோன்ற கார்களை எலெக்ட்ரிக் வடிவில் மாற்றுவது அர்த்தமுள்ள காரியமாக இருக்கும்,” என பரோகெர்ட் தெரிவித்தார்.
2027 வாக்கில் லம்போர்கினி நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ர்க் கார் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக லம்போர்கினி நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. கடந்த ஆண்டு தனது கார் மாடல்களை எலெக்ட்ரிக் வடிவில் மாற்றவும், எலெக்ட்ரிக் வாகன துறையில் கவனம் கால் பதிக்கவும் லம்போர்கினி நிறுவனம் சுமார் 1.5 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்வதாக தெரிவித்தது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ ஸ்கூட்டர் மாடல்களில் மார்ச் 2022-க்கு முன் வினியோகம் செய்யப்பட்ட யூனிட்களுக்கு மட்டும் மேம்பட்ட VCU-க்களை வழங்க துவங்கி உள்ளது.
ஸ்கூட்டர்கள் அடிக்கடி வெடித்து சிதறுவது, ரிவர்ஸ் மோடில் திடீரென அதிவேகமாக இயங்குவது என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றன. இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு VCU (வெஹிகில் கண்ட்ரோல் யூனிட்) கொண்டு அப்டேட் வழங்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு VCU அப்டேட் செய்யப்படும் மாடல்களில் ஏற்கனவே வழங்கப்பட்டதை விட அதிகளவு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. பழைய மாடல்கள் மட்டுமின்றி புதிதாக உருவாக இருக்கும் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் மேம்பட்ட VCU-க்களே வழங்கப்பட இருக்கின்றன. புதிதாக அப்டேட் செய்யப்பட்ட VCU-க்களில் இ ஸ்கூட்டர்களில் வரும் பிரச்சினைகளை தீர்க்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஆன்போர்டு VCU-க்களை வழங்கி வருகிறது. முன்னதாக தீ விபத்து மற்றும் ரிவர்ஸ் மோடில் அதிவேகமாக இயங்குவது போன்ற பிரச்சினைகளில் ஓலா எலெக்ட்ரிக் சிக்கித் தவித்து வருகிறது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ஸ்கூட்டர்களை பரிசோதனை செய்ய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 1,441 யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருந்தது.
இதுதவிர வாகனங்களில் வழங்கப்படும் பேட்டரி செல் மற்றும் பேட்டரி பேக் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை ஓலா எலெக்ட்ரிக் தொடர்ச்சியாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. VCU யூனிட்களின் தெர்மல் மேனேஜ்மண்ட் பேட்டரி செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கும். இந்த நிலையில், VCU அப்டேட் மூலம் பல்வேறு பிரச்சினைகளை ஓலா எலெக்ட்ரிக் எதிர்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் முற்றிலும் புது டிசைன் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மே மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதன் படி தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை இந்த மாதம் முழுக்க அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்பட இருக்கின்றன. சலுகைகள் கேஷ் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.
மேத மாத சலுகைகளின் கீழ் மஹிந்திரா அல்டுராஸ் G4 மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது. மஹிந்திரா XUV300 மாடலுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வரையிலான சலுகை, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரத்து 200 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்கார்பியோ மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 13 ஆயிரம் வரையிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா பொலிரோ நியோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடி, ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா XUV700 மற்றும் தார் மாடல்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. முன்னதாக இந்த மாடல்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி ரூ. 78 ஆயிரத்து 311 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கியா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் எலெக்ட்ரிக் கார் பல்வேறு நிறங்களில் உருவாகி இருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
கியா இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான முன்பதிவுகளை மே மாதம் 26 ஆம் தேதி துவங்கி இருப்பசாத தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், புதிய கியா EV6 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், கியா EV6 மாடல் கியா ஆலையில் வைத்தே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கியா உற்பத்தி ஆலையில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. புகைப்படங்களின் படி 2022 கியா EV6 மாடல்- ரெட், வைட் மற்றும் சில்வர் என பல விதமான நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிறங்கள் மட்டுமின்றி கியா நிறுவனம் இந்த காரை மேலும் சில நிறங்களில் விற்பனை செய்யலாம்.

Photo Courtesy: Rushlane
இந்திய சந்தையில் கியா EV6 மாடல் சி.பி.யு. (முழுமையாக உருவாக்கப்பட்ட மாடல்) வடிவில் இந்தியா கொண்டுவரப்பட இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடலின் விலை ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. முதற்கட்டமாக 100 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் கியா இந்தியா ஏற்கனவே அறிவித்து விட்டது.
சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் கியா EV6 மாடல் 58kWh மற்றும் 77.4kWh என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதிகளுடன் கிடைக்கிறது. இதன் வெவ்வேறு வெர்ஷன்கள் அதற்கு ஏற்ற செயல்திறன் மற்றும் ரேன்ஜ்களை வழங்குகிறது.






