search icon
என் மலர்tooltip icon

    பைக்

    பிகாஸ் D15
    X
    பிகாஸ் D15

    பிகாஸ் D15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் விற்பனை விவரங்கள்..!

    பிகாஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய D15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இரண்டு வெவ்வேறு வேரியண்ட்களில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    பிகாஸ் நிறுவனம் இந்தியாவில் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. BG D15 என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - BG D15i மற்றும் BG D15 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 99 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் வினியோகம் ஜூன் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    புதிய பிகாஸ் BG D15 ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் அதனை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்கூட்டர் அறிமுகம் செய்ததோடு இந்திய சந்தையில் தனது விற்பனையை அதிகப்படுத்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட சந்தைகளில் டீலர் நெட்வொர்க்-ஐ அதிகப்படுத்த திட்டம் தீட்டி இருக்கிறது. 

     பிகாஸ் D15

    தற்போது நாடு முழுக்க 100 ஷோரூம்களை  பிகாஸ் இயக்கி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பிகாஸ் முடிவு செய்து உள்ளது. புதிய பிகாஸ் BG D15 மாடலில் 3.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை 7 நொடிகளுக்குள் எட்டிவிடும். 

    பிகாஸ் BG D15 ஸ்கூட்டர் இகோ மற்றும் ஸ்போர்ட் என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இதில் 16 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5.30 மணி நேரம் ஆகும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 115 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த ஸ்கூட்டர் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. 
    Next Story
    ×