search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    கியா EV6
    X
    கியா EV6

    பல்வேறு நிறங்களில் உருவாகி இருக்கும் கியா EV6 - விரைவில் இந்திய வெளியீடு!

    கியா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் எலெக்ட்ரிக் கார் பல்வேறு நிறங்களில் உருவாகி இருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    கியா இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான முன்பதிவுகளை மே மாதம் 26 ஆம் தேதி துவங்கி இருப்பசாத தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், புதிய கியா EV6 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், கியா EV6 மாடல் கியா ஆலையில் வைத்தே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கியா உற்பத்தி ஆலையில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. புகைப்படங்களின் படி 2022 கியா EV6 மாடல்- ரெட், வைட் மற்றும் சில்வர் என பல விதமான நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிறங்கள் மட்டுமின்றி கியா நிறுவனம் இந்த காரை மேலும் சில நிறங்களில் விற்பனை செய்யலாம்.

     கியா EV6
    Photo Courtesy: Rushlane

    இந்திய சந்தையில் கியா EV6 மாடல் சி.பி.யு. (முழுமையாக உருவாக்கப்பட்ட மாடல்) வடிவில் இந்தியா கொண்டுவரப்பட இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடலின் விலை ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. முதற்கட்டமாக 100 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் கியா இந்தியா ஏற்கனவே அறிவித்து விட்டது.

    சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் கியா  EV6 மாடல் 58kWh மற்றும் 77.4kWh என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதிகளுடன் கிடைக்கிறது. இதன் வெவ்வேறு வெர்ஷன்கள் அதற்கு ஏற்ற செயல்திறன் மற்றும் ரேன்ஜ்களை வழங்குகிறது.

    Next Story
    ×