என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் நான்கு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் 2023 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 1 கோடியே 64 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. தற்போது இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளது. வினியோகம் நவம்பர் மாத வாக்கில் துவங்குகிறது.
புதிய தலைமுறை லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் SE, HSE, Autobiography மற்றும் Fist Edition போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேற்கத்திய சந்தைகளில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால் இந்திய சந்தையில் இந்த மாடல் ஒற்றை டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
நிறங்களை பொருத்தவரை ஏராளமான புது ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் இந்திய மாடலில் டிஜிட்டல் எல்.இ.டி. ஹெட்லைட்கள், ஹீடெட் ரியர் வியு மிரர்கள், இலுமினேட் செய்யப்பட்ட சீட்பெல்ட் பக்கில்கள், மெரிடியன் 3D சவுண்ட் சிஸ்டம், செண்ட்ரல் இன்பர்மேஷன் ஸ்கிரீன் ப்ரோ, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஹெட்-அப் டிஸ்ப்ளே, டிரைவர் அசிஸ்ட் பேக் மற்றும் சரவுண்ட் வியு கேமரா செட்டப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் 2023 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் 3 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட, டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 345 பி.ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும்.
மேலும் மணிக்கு அதிகபட்சமாக 234 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்டில் 2996சிசி, 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் பெரிய பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடலை இந்தியாவில் அரிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்.யு.வி. மாடலை ஜூன் 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு ஸ்பை படங்கள், வீடியோக்கள் வெளியான நிலையில், இந்த மாடலுக்கான டீசர் வீடியோக்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அந்த வரிசையில் இந்த மாடல் அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கிறது.
டீசர் வீடியோவின் படி புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் முற்றிலும் மேம்பட்ட ஸ்டைலிங், முன்புறம் புது கிரில், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், முன்புற பம்ப்பரில் ஃபாக் லேம்ப் ஹவுசிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டூயல் டோன் அலாய் வீல்கள், க்ரோம் டோர் ஹேண்டில்கள், க்ரோம் விண்டோ லைன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
காரின் உள்புறம் புதிய ஸ்கார்பியோ மாடலில் மேம்பட்ட கேபின், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், எலெக்ட்ரிக் சன்ரூப், முன்புறம் பார்த்த நிலையில் மூன்றாம் அடுக்கு இருக்கைகள், ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பீக்கர்கள், யு.எஸ்.பி. சி சார்ஜிங் போர்ட்கள், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், கீலெஸ் எண்ட்ரி போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இத்துடன் 4-வீல் டிரைவ் வசதி வழங்கப்படலாம்.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜீப் மெரிடியன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜீப் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடலின் இந்திய விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய ஜீப் மெரிடியன் மாடல் விலை ரூ. 29 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய ஜீப் மெரிடியன் 3-ரோ எஸ்.யு.வி மாடல்- லிமிடெட் மேனுவல் முன்புற வீல் டிரைவ் (FWD) மற்றும் ஆட்மோடேிக் 4 வீல் டிரைவ் (FWD) ஆப்ஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
முன்னதாக ஜீப் மெரிடியன் மாடலுக்கான உற்பத்தி பணிகள் இந்திய ஆலையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இத்துடன் ஜீப் மெரிடியன் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஜீப் மெரிடியன் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடலில் 2 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புற வீல் டிரைவ் சிஸ்டம் இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடலில் 10.1 இன்ச் தொடுதிரை வசதி மற்றும் 10.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், பானரோமிக் சன்ரூப், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் போன் சார்ஜிங், பவர்டு சீட்கள், பவர்டு டெயில்கேட் உள்ளது. பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், 360-டிகிரி கேமரா மற்றும் டையர் பிரெஷர் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்தியாவில் ஜீப் மெரிடியன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 36 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஜீப் மெரிடியன் மாடல் இந்திய சந்தையில் டொயோட்டா பார்ச்சூனர், எம்.ஜி. குளோஸ்டர் மற்றும் ஸ்கோடா கோடியக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்ப்ளெண்டர் பிளஸ் மாடலை ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மாடல் மொத்தம் நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்ப்ளெண்டர் பிளஸ் மோட்டார்சைக்கிளின் புது வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புது வேரியண்ட் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 72 ஆயிரத்து 900, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மேட் ஷீல்டு கோல்டு மாடலை விட ரூ. 1,200 அதிகம் ஆகும்.
முன்னதாக கிளாமர், பிளெஷர், டெஸ்டினி போன்ற மாடல்களை அப்டேட் செய்து Xtec வெர்ஷனில் அறிமுகம் செய்த ஹீரோ மோட்டோகார்ப் தற்போது ஸ்ப்ளெண்டர் மாடலையும் அப்டேட் செய்து இருக்கிறது. தோற்றத்தில் இந்த மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

ஸ்ப்ளெண்டர் Xtec மாடலிலும் 92.7சிசி ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.9 ஹெச்.பி. பவர், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் மைலேஜை கருத்தில் கொண்டு i3s தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் முழுமையான டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கால், எஸ்.எம்.எஸ். அலர்ட், ரியல் டைம் மைலேஜ் ரீட்-அவுட், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், சைடு ஸ்டாண்டு என்ஜின் கட் ஆஃப் போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்தியாவில் புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் Xtec மாடல்: ஸ்பார்க்லிங் பீட்டா புளூ, கேன்வாஸ் பிளாக், டொர்னாடோ கிரே மற்றும் பியல் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புது வேரியண்ட் சேர்த்து ஸ்ப்ளெண்டர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் தற்போது நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 69 ஆயிரத்து 380, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
புதிய போர்ஷ் 718 கேமேன் GT4 RS மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும்.
போர்ஷ் நிறுவனம் இந்தியாவில் தனது புது கேமேன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் கேமேன் GT4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய போர்ஷ் 718 கேமேன் GT4 RS மாடலின் விலை ரூ. 2 கோடியே 54 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய 718 கேமேன் GT4 RS மாடலில் 911 GT3 சார்ந்த என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய போர்ஷ் 911 GT3 மாடலுடன் ஒப்பிடும் போது,புதிய கேமேன் 718 GT4 RS மாடலில் உள்ள ஃபிளாட் சிக்ஸ் என்ஜின் 496 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

போர்ஷ் GT4 வெர்ஷனுடன் ஒப்பிடும் போது புதிய கேமேன் GT4 RS மாடலில் கூடுதலாக 79 ஹெச்.பி. பவர் மற்றும் 20 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை கிடைக்கிறது. இந்த என்ஜினுடன் போர்ஷ் நிறுவனத்தின் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய போர்ஷ் 718 கேமேன் GT4 RS மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு 315 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது. புதிய GT4 RS மாடல் ஸ்டாண்டர்டு GT4 மாடலை விட அரை நொடி வேகமானது ஆகும். எடையை பொருத்தவரை இந்த மாடல் ஃபுல் டேன்க் கொள்ளளவில் 1415 கிலோகிராம் எடையை கொண்டுள்ளது. இது GT4 மாடலை விட 35 கிலோ குறைவு ஆகும்.
புத்தம் புதிய லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
நீண்ட வீல்-பேஸ் கொண்ட லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலின் டீசர் வெளியாகி இருக்கிறது. புதிய லேண்ட் ரோவர் டிபெண்டர் மாடல் மே 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக 2020 வாக்கில் லேண்ட் ரோவர் டிபெண்டர் மாடல் முழுமையாக ரிவாம்ப் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் 8 சீட்டர் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலுக்கான முன்பதிவு, அறிமுக நிகழ்வு நிறைவுற்றதும் தொடங்கும். தற்போதைய தகவல்களின் படி புதிய டிபெண்டர் 130 மாடலின் வீல்பேஸ் 3300 மில்லிமீட்டராக இருக்கும் என கூறப்படுகிறது. டீசரில் வெளியாகி இருக்கும் ஒற்றை புகைப்படத்தில் 8 சீட்டர் லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடல் பற்றி அதிக விவரங்கள் இடம்பெறவில்லை.

எனினும், புதிய டிபெண்டர் 130 மாடலின் 8 சீட்கள், மூன்று அடுக்குகளில் 2-3-3 வரிசையில் இடம்பெற்று இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த காரின் மூன்றாவது அடுக்கிலும் மூன்று பேரும் அமரும் இருக்கை வழங்கப்பட இருப்பது உறுதியாகி உள்ளது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட 7 சீட்டர் டிபெண்டர் 110 மாடலில் 2-3-2 முறையில் இருக்கைகள் வழங்கப்பட்டன.
லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலில் வழங்கப்பட இருக்கும் என்ஜின் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த மாடலில் சக்திவாய்ந்த மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அம்சங்கள் மற்றும் இந்திய வெளியீடு பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
பி.எம்.டபிள்யூ. குழுமத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் அப்டேட் செய்யப்பட்டு 2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. புதிய 3 சீரிஸ் மாடலில் கூர்மையான டிசைன், மேம்பட்டு இண்டீரியர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் பவர்டிரெயின் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், 2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடல் அடுத்த ஆண்டு துவக்கம் அல்லது 2023 ஆண்டு மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 2023 பி.எம்.டபிள்.யூ. 3 சீரிஸ் மாடலின் வெளிப்புறம் ஸ்டிரக்ச்சர் செய்யப்பட்ட சர்பேஸ்கள், டைனமிக் லைன் மற்றும் பெரிய ஏர் இண்டேக் உள்ளிட்டவை உள்ளன. இவை காரின் முன்புறத்திற்கு அதிரடியான ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது.

இதன் ஹெட்லைட் மற்றும் கிட்னி கிரில்கள் ரி-டிசைன் செய்யப்பட்டு உள்ளன. ஸ்டாண்டர்டு எல்.இ.டி. ஹெட்லைட்கள் தற்போது மிக மெல்லியதாக மாற்றப்பட்டுள்ளன. இதன் டேடைம் டிரைவிங் லைட்கள் தலைகீழாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இவை காருக்கு அதிநவீன தோற்றத்தை வழங்குகின்றன.
புதிய 2023 பி.எம்.டபிள்.யூ. 3 சீரிஸ் மாடலில் முந்தைய வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜின்களே வழங்கப்பட்டு உள்ளன. இதன் பேஸ் வேரியண்ட் 330i மாடலில் 2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 255 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. 330e பிளக்-இன் ஹைப்ரிட் மாடலில் 288 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 3 லிட்டர் I6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் கார் எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ஸ்டெலாண்டிஸ் இந்தியா குழுமத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தைக்கான எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டு திட்டம் பற்றி பேசும் போது இந்த தகவலை ஸ்டெலாண்டிஸ் தலைமை செயல் அதிகாரி கார்லோஸ் டவாரஸ் தெரிவித்து இருக்கிறார்.
“சிட்ரோயன் பிராண்டுக்கான ஸ்மார்ட் கார் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் கார் வெர்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் வாகனங்களை எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கு மாற்றுவதில் சிட்ரோயன் முன்னணி பிராண்டாக இருக்கும்,” என டவாரஸ் தெரிவித்தார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார் மாடல்களுடன் ஒப்பிடும் போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகமாகவே இருக்கிறது. அந்த வகையில் புதிய சிட்ரோயன் எலெக்ட்ரிக் மாடல்களின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படும் என்பது கேளிவிக்குறியாகவே இருந்த வந்தது.
தற்போது இது பற்றிய கேள்விக்கும் டவாரஸ் பதில் அளித்துள்ளார். அதில்,“எங்கள் வினியோகஸ்தர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றி, உற்பத்திக்கான கூடுதல் செலவீனங்களை தவிர்த்து, காரின் விலை அதிகரிப்பதை பெருமளவு குறைத்து, நடுத்தர மக்களும் இந்த காருக்கு பணம் செலுத்த வைக்க வேண்டும். இதன் காரணமாக காம்பேக்ட் கார் மாடல்கள் மட்டுமின்றி எம்.பி.வி. மாடல்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறோம்,” என குறிப்பிட்டுள்ளார்.
எலெக்ட்ரிக் மாடல் தவிர சிட்ரோயன் நிறுவனம் அடுத்த மாதம் தனது சிட்ரோயன் C3 காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர மேலும் சில எலெக்ட்ரிக் மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் நீன்ட ரேன்ஜ் வழங்கும் 2022 டி.வி.எஸ். ஐகியூப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்தியாவில் 2022 ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. புதிய டி.வி.எஸ். ஐகியூப் மாடல் விலை ரூ. 98 ஆயிரத்து 564 என துவங்குகிறது. 2022 டி.வி.எஸ். ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - டி.வி.எஸ். ஐகியூப், ஐகியூப் S மற்றும் ஐகியூப் ST என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
2020 ஆண்டு வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டி.வி.எஸ். ஐகியூப் மாடல் தற்போது அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டி.வி.எஸ். ஐகியூப் மாடல் - சாய்ஸ், கம்ஃபர்ட் மற்றும் சிம்ப்லிசிட்டி என மூன்று விஷயங்களை அடிப்படையாக கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. ரேன்ஜ், ஸ்டோரேஜ், நிறங்கள் மற்றும் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களின் அடிப்படையில் பயனர்கள் டி.வி.எஸ். ஐகியூப் மாடலின் மூன்று வேரியண்ட்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.

மேம்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் 2022 டி.வி.எஸ். ஐகியூப் S மாடல் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் ரேன்ஜ் கொண்டிருக்கிறது. டாப் எண்ட் ST வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்டுள்ளது. மூன்று வேரியண்ட்களின் ரேன்ஜ் முந்தைய மாடல்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
2022 டி.வி.எஸ். ஐகியூப் மாடல் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 98 ஆயிரத்து 564 ஆன்-ரோடு, டெல்லி என்றும் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 08 ஆயிரத்து 690, ஆன் -ரோடு, டெல்லி என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டி.வி.எஸ். ஐகியூப் ST வேரியண்ட் விலை அறிவிக்கப்படவில்லை. புதிய டி.வி.எஸ். ஐகியூப் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 999 ஆகும்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் அசத்திய டாப் 5 ஹேச்பேக் மாடல்கள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக விற்பனையை ஈட்டிக் கொடுக்கும் பிரிவுகளில் ஒன்றாக ஹேச்பேக் பிரிவு இருக்கிறது. அடிக்கடி விலை உயர்வு, செமிகண்டக்டர் தட்டுப்பாடு, எஸ்.யு.வி. மாடல்களுக்கான தட்டுப்பாடு போன்ற காரணங்களால் ஹேச்பேக் மாடல்களின் விற்பனையில் சமீப காலங்களில் பாதிப்பு ஏற்பட துவங்கி இருக்கிறது. அந்த வகையில் ஏப்ரல் 2022 மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 5 ஹேச்பேக் மாடல்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி வேகன் ஆர் - கடந்த மாதம் ஹேச்பேக் பிரிவில் அதிகம் விற்பனையான மாடல்களில் ஒன்றாக மாருதி சுசுகி வேகன் ஆர் இடம்பெற்று இருக்கிறது. ஏப்ரல் 2021 மாதத்தில் 18 ஆயிரத்து 656 யூனிட்களை விற்பனை செய்திருந்த மாருதி சுசுகி கடந்த ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 17 ஆயிரத்து 766 யூனிட்களையே விற்பனை செய்துள்ளது.

மாருதி சுசுகி பலேனோ - மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் ஹேச்பேக் மாடல் இது ஆகும். ஏப்ரல் 2022 மாதத்தில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 10 ஆயிரத்து 938 பலேனோ யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. முன்னதாக 2021 ஏப்ரல் மாதத்தில் 16 ஆயிரத்து 384 யூனிட்களை மாருதி சுசுகி விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாருதி சுசுகி ஆல்டோ - ஒட்டுமொத்த விற்பனையில் ஆல்டோ மாடல் 40 சதவீதம் சரிவை சந்தித்த போதிலும், அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேச்பேக் மாடல்கள் பிரிவில் மாருதி சுசுகி ஆல்டோ மூன்றாவது இடம்பிடித்து உள்ளது. கடந்த மாதம் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 10 ஆயிரத்து 443 ஆல்டோ யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் - இந்த பட்டியலில் இடம் பிடித்து இருக்கும் ஒற்றே மாருதி சுசுகி நிறுவனம் அல்லாத மாடல் இது ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ஹூண்டாய் நிறுவனம் 11 ஆயிரத்து 540 கிராண்ட் i10 நியோஸ் மாடல்களை விற்பனை செய்துள்ளது.
மாருதி சுசுகி ஸ்விப்ட் - ஏப்ரல் 2022 மாதத்தில் ஸ்விப்ட் மாடல் விற்பனை 50 சதவீகம் சரிவடைந்துள்ளது. எனினும், ந்த மாடல் அதிக யூனிட்கள் விற்பனையில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 8 ஆயிரத்து 898 ஸ்விப்ட் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. ஏப்ரல் 2021 மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 18 ஆயிரத்து 316 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஹூண்டாய் மற்றும் டாடா பவர் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்து உள்ளன.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் டாடா பவர் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்து உள்ளன. கூட்டணியின் படி இரு நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, நாடு முழுக்க ஹூண்டாய் விற்பனை மையங்களில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நெட்வொர்க்-ஐ கட்டமைக்க முடிவு செய்துள்ளன.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான அன்சு கிம், டாடா பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் பிரவீர் சின்ஹா இடையே புது கூட்டணி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பின் இருவரும் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். கூட்டணி பற்றிய அறிவிப்பு ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள ஹூண்டாய் இந்தியா தலைமையகத்தில் வைத்து வெளியிடப்பட்டது. இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது 29 நகரங்களில் 32 எலெக்ட்ரிக் வாகன டீலர்களை வைத்து இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா எலெக்ட்ரிக் வாகன டீலர்ஷிப்களில் தற்போது 7.2 கிலோவாட் AC சார்ஜர்களே உள்ளன. புது ஒப்பந்தத்தின் படி டீலர்ஷிப்களில் உள்ள சார்ஜர்களை 60 கிலோவாட் DC பாஸ்ட் சார்ஜர்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது டீலர்ஷிப்களில், இடவசதி மற்றும் அனைத்து விதமான ஒப்புதல்களை டாடா பவர் நிறுவனத்திற்கு வழங்கும். இங்கு சார்ஜிங் மையங்களை நிறுவி அவற்றை பராமரிக்கும் பணிகளை டாடா பவர் மேற்கொள்ள இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கார் மாடலுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை நிறுத்தி இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது சாண்ட்ரோ மாடலுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை நிறுத்தி இருக்கிறது. ஹூண்டாய் ஹேச்பேக் மாடலின் விலை இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டே இருக்கிறது. எனினும், சாண்ட்ரோ மாடல் ஹூண்டாய் வலைதளத்தின் ‘Click to Buy’ முன்பதிவு தளத்தில் இடம்பெறவில்லை.
முன்னதாக இம்மாத துவக்கத்தில் ஹூண்டாய் சாண்ட்ரோ மாடல் விலை ரூ. 17 ஆயிரத்து 800 வரை அதிகரிக்கப்பட்டது. புது ஹேச்பேக் மாடலான சாண்ட்ரோ விற்பனை நிறுத்தம் பற்றி ஹூண்டாய் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், ஆன்லைன் தளம் போன்றே விற்பனை மையங்களிலும் இந்த மாடலுக்கான முன்பதிவுகள் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் 2018 வாக்கில் ரி-எண்ட்ரி கொடுத்த ஹூண்டாய் சாண்ட்ரோ எண்ட்ரி-லெவல் ஹேச்பேக் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள், ரியர் ஏர்கான் வெண்ட்கள், கீலெஸ் எண்ட்ரி மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.
ஹூண்டாய் சாண்ட்ரோ மாடலின் விலை தற்போது ரூ. 4 லட்சத்து 89 ஆயிரம் என துவங்கி அதிகபட்சமாக ரூ. 6 லட்சத்து 41 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






