search icon
என் மலர்tooltip icon

    கார்

    சிட்ரோயன் கார்
    X
    சிட்ரோயன் கார்

    சிட்ரோயன் EV கார் இந்திய வெளியீட்டு விவரம்

    சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் கார் எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    ஸ்டெலாண்டிஸ் இந்தியா குழுமத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தைக்கான எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டு திட்டம் பற்றி பேசும் போது இந்த தகவலை ஸ்டெலாண்டிஸ் தலைமை செயல் அதிகாரி கார்லோஸ் டவாரஸ் தெரிவித்து இருக்கிறார்.

    “சிட்ரோயன் பிராண்டுக்கான ஸ்மார்ட் கார் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் கார் வெர்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் வாகனங்களை எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கு மாற்றுவதில் சிட்ரோயன் முன்னணி பிராண்டாக இருக்கும்,” என டவாரஸ் தெரிவித்தார்.

     சிட்ரோயன் கார்

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார் மாடல்களுடன் ஒப்பிடும் போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகமாகவே இருக்கிறது. அந்த வகையில் புதிய சிட்ரோயன் எலெக்ட்ரிக் மாடல்களின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படும் என்பது கேளிவிக்குறியாகவே இருந்த வந்தது.

    தற்போது இது பற்றிய கேள்விக்கும் டவாரஸ் பதில் அளித்துள்ளார். அதில்,“எங்கள் வினியோகஸ்தர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றி, உற்பத்திக்கான கூடுதல் செலவீனங்களை தவிர்த்து, காரின் விலை அதிகரிப்பதை பெருமளவு குறைத்து, நடுத்தர மக்களும் இந்த காருக்கு பணம் செலுத்த வைக்க வேண்டும். இதன் காரணமாக காம்பேக்ட் கார் மாடல்கள் மட்டுமின்றி எம்.பி.வி. மாடல்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறோம்,” என குறிப்பிட்டுள்ளார்.

    எலெக்ட்ரிக் மாடல் தவிர சிட்ரோயன் நிறுவனம் அடுத்த மாதம் தனது சிட்ரோயன் C3 காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர மேலும் சில எலெக்ட்ரிக் மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    Next Story
    ×