என் மலர்

  பைக்

  2022 டி.வி.எஸ். ஐகியூப்
  X
  2022 டி.வி.எஸ். ஐகியூப்

  நீண்ட ரேன்ஜ் கொண்ட 2022 டி.வி.எஸ். ஐகியூப் இந்தியாவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் நீன்ட ரேன்ஜ் வழங்கும் 2022 டி.வி.எஸ். ஐகியூப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

  டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்தியாவில் 2022 ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. புதிய டி.வி.எஸ். ஐகியூப் மாடல் விலை ரூ. 98 ஆயிரத்து 564  என துவங்குகிறது. 2022 டி.வி.எஸ். ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - டி.வி.எஸ். ஐகியூப், ஐகியூப் S மற்றும் ஐகியூப் ST என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

  2020 ஆண்டு வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டி.வி.எஸ். ஐகியூப் மாடல் தற்போது அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டி.வி.எஸ். ஐகியூப் மாடல் - சாய்ஸ், கம்ஃபர்ட் மற்றும் சிம்ப்லிசிட்டி என மூன்று விஷயங்களை அடிப்படையாக கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. ரேன்ஜ், ஸ்டோரேஜ், நிறங்கள் மற்றும் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களின் அடிப்படையில் பயனர்கள் டி.வி.எஸ். ஐகியூப் மாடலின் மூன்று வேரியண்ட்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும். 

   2022 டி.வி.எஸ். ஐகியூப்

  மேம்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் 2022 டி.வி.எஸ். ஐகியூப் S மாடல் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் ரேன்ஜ் கொண்டிருக்கிறது. டாப் எண்ட் ST வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்டுள்ளது. மூன்று வேரியண்ட்களின் ரேன்ஜ் முந்தைய மாடல்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

  2022 டி.வி.எஸ். ஐகியூப் மாடல் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 98 ஆயிரத்து 564 ஆன்-ரோடு, டெல்லி என்றும் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 08 ஆயிரத்து 690, ஆன் -ரோடு, டெல்லி என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டி.வி.எஸ். ஐகியூப் ST வேரியண்ட் விலை அறிவிக்கப்படவில்லை. புதிய டி.வி.எஸ். ஐகியூப் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 999 ஆகும். 

  Next Story
  ×