என் மலர்

  ஆட்டோ டிப்ஸ்

  ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட்
  X
  ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட்

  புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் முன்பதிவு துவக்கம் - வினியோக விவரம்!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் நான்கு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

  ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் 2023 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 1 கோடியே 64 லட்சம், எக்ஸ்-ஷோரூம்  என துவங்குகிறது. தற்போது இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளது. வினியோகம் நவம்பர் மாத வாக்கில் துவங்குகிறது.

  புதிய தலைமுறை லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் SE, HSE, Autobiography மற்றும் Fist Edition போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேற்கத்திய சந்தைகளில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால் இந்திய சந்தையில் இந்த மாடல் ஒற்றை டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. 

  நிறங்களை பொருத்தவரை ஏராளமான புது ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் இந்திய மாடலில் டிஜிட்டல் எல்.இ.டி. ஹெட்லைட்கள், ஹீடெட் ரியர் வியு மிரர்கள், இலுமினேட் செய்யப்பட்ட சீட்பெல்ட் பக்கில்கள், மெரிடியன் 3D சவுண்ட் சிஸ்டம், செண்ட்ரல் இன்பர்மேஷன் ஸ்கிரீன் ப்ரோ, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஹெட்-அப் டிஸ்ப்ளே, டிரைவர் அசிஸ்ட் பேக் மற்றும் சரவுண்ட் வியு கேமரா செட்டப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

   ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட்

  இந்தியாவில் 2023 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் 3 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட, டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 345 பி.ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும்.

  மேலும் மணிக்கு அதிகபட்சமாக 234 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்டில் 2996சிசி, 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் பெரிய பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. 
  Next Story
  ×