search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    மஹிந்திரா ஸ்கார்பியோ
    X
    மஹிந்திரா ஸ்கார்பியோ

    புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ இந்திய வெளியீட்டு விவரம்

    மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடலை இந்தியாவில் அரிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்.யு.வி. மாடலை ஜூன் 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு ஸ்பை படங்கள், வீடியோக்கள் வெளியான நிலையில், இந்த மாடலுக்கான டீசர் வீடியோக்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அந்த வரிசையில் இந்த மாடல் அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கிறது.

    டீசர் வீடியோவின் படி புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் முற்றிலும் மேம்பட்ட ஸ்டைலிங், முன்புறம் புது கிரில், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், முன்புற பம்ப்பரில் ஃபாக் லேம்ப் ஹவுசிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டூயல் டோன் அலாய் வீல்கள், க்ரோம் டோர் ஹேண்டில்கள், க்ரோம் விண்டோ லைன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    காரின் உள்புறம் புதிய ஸ்கார்பியோ மாடலில் மேம்பட்ட கேபின், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், எலெக்ட்ரிக் சன்ரூப், முன்புறம் பார்த்த நிலையில் மூன்றாம் அடுக்கு இருக்கைகள், ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பீக்கர்கள், யு.எஸ்.பி. சி சார்ஜிங் போர்ட்கள், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், கீலெஸ் எண்ட்ரி போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 

    2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இத்துடன் 4-வீல் டிரைவ் வசதி வழங்கப்படலாம்.
    Next Story
    ×