என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 19 லேண்ட் ரோவர் கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்படும் கார்கள் இலவசமாக சரிசெய்து தரப்பட இருக்கின்றன.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2022 ரேன்ஜ் ரோவர் மாடல்களின் கிராஷ் சென்சார் சரியாக பொருத்தப்படவில்லை என்பதை கண்டறிந்து உள்ளது. இதனை சரி செய்யவில்லை எனில் மோசமான பின் விளைவுகள் ஏற்படலாம் என ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கருதுகிறது.
இதனால் அமெரிக்க சந்தையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 முதல் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் விற்பனை செய்யப்பட்ட ரேன்ஜ் ரோவர் எஸ்.யு.வி. மாடல்களை ரிகால் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதே காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட யூனிட்களில் 100 சதவீதம் கோளாறு உள்ளன.

இந்த கோளாறு காரணமாக காரின் முன்புற கிராஷ் சென்சார் செயலிழக்கலாம். இதனால் காரின் ஆக்டிவ் ரெசிஸ்டண்ட் சிஸ்டம்களும் சரியாக இயங்காமல் போகும். முன்புற கிராஷ் சென்சார்கள் இயங்காமல் போனால், காரணம் ஏர்பேக் சரியாக செயல்படாது. இது ஓட்டுனர் மட்டும் இன்றி காரில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் கடும் காயங்களை ஏற்படுத்தி விடும்.
இந்த கோளாறை ஏப்ரல் மாத வாக்கில் கண்டறிந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஆலையில் இதுபற்றிய விசாரணையை நடத்தியது. அதன் பின் தற்போது கோளாறு பாதுகாப்பு விஷயத்தில் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கார்களை ரிகால் செய்யும் நடவடிக்கையை ஜாகுவார் லேண்ட் ரோவர் மேற்கொண்டு வருகிறது.
கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் தனது 2022 கே.டி.எம். RC 390 மோட்டார்சைக்கிளை இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
கே.டி.எம். இந்தியா நிறுவனம் ஒருவழியாக இந்தியாவில் 2022 கே.டி.எம். RC 390 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய 2022 கே.டி.எம். RC 390 மாடல் விலை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய கே.டி.எம். RC 390 மாடலை விட ரூ. 36 ஆயிரம் விலை அதிகம் ஆகும். 2022 கே.டி.எம். RC 390 மாடல் இரண்டு முற்றிலும் புதிய நிறங்களில் கிடைக்கிறது.
இவை கே.டி.எம். ஃபேக்டரி ரேசிங் புளூ மற்றும் போல்டு டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்ட கே.டி.எம். ஆரஞ்சு என அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஃபேக்டரி ரேசிங் புளூ நிற வேரியண்டில் ஃபேரிங், பியூவல் டேன்க் மற்றும் டெயில் பகுதிகளில் ஆரஞ்சு மற்றும் புளூ ஷேட்களில் கிடைக்கின்றன. கே.டி.எம். ஆரஞ்சு நிற வேரியண்டின் பியூவல் டேன்க் மீது ஆரஞ்சு நிறமும், பியூவல் டேன்க் மீது பெரிய கருப்பு நிறத்தாலான கே.டி.எம். ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு இருக்கிறது.

புது மாடலில் ஏராளமான அப்டேட்கள் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிளில் ப்ளூடூத் வசதி கொண்ட ஃபுல் கலர் TFT கன்சோல், ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், கார்னெரிங் ஏ.பி.எஸ். மற்றும் குயிக் ஷிஃப்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பியூவல் டேன்க் உள்ளது.
2022 கே.டி.எம். RC 390 மாடலில் 373சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர், DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 42.9 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர்களை டெலிவரி பெறும் வீடியோக்களை ஓலா எலெக்டரிக் வெளியிட்டு இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான் விற்பனையை சமீபத்தில் துவங்கியது. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் முழு தொகையை செலுத்தி 24 மணி நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டு வருவதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஸ்கூட்டர்கள் அதிவேகமாக டெலிவரி செய்யப்பட்டு வருவதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவன குழுவினருக்கு ஓலா எலெக்ட்ரிக் சி.இ.ஒ. பாவிஷ் அகர்வால் பாராட்டு தெரிவித்து உள்ளார். வாடிக்கையாளர்கள் புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரைந்து டெலிவரி எடுத்துக் கொள்ளும் வீடியோவை ஓலா எலெக்டரிக் நிறுவனம் தனது ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டு இருக்கிறது.
“ஸ்கூட்டர் வாங்கிய 24 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. ஓலா எலெக்ட்ரிக் குழுவின் சிறப்பான பணி இது. பல்வேறு எலெக்ட்ரிக் வாகன பிராண்டுகள் தங்களின் வாகனங்களை டெலிவரி செய்ய காத்திருப்பு காலத்தை அறிவித்து உள்ளன. இதோடு வாகனத்தை பதிவு செய்யவும் அதிக நேரம் ஆகிறது. எதிர்காலம் இங்கே இருக்கிறது, இதன் அங்கமாக இருங்கள்!,” என பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய M சீரிஸ் கார் மாடல் 540 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது பந்தைய களத்திலும் புது சாதனை படைத்து அசத்தி இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பெர்பார்மன்ஸ் பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், பி.எம்.டபிள்யூ. M4 CSL மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய M4 CSL மாடலில் அதிக செயல்திறன், சிறப்பான டிசைன் மற்றும் நர்பர்கிரிங் பந்தய களத்தில் பி.எம்.டபிள்யூ. உற்பத்தி செய்ததில் அதிவேக கார் என்ற பட்டத்தை பெற்று இருக்கிறது. இந்த பந்தய களத்தில் பி.எம்.டபிள்யூ. M4 CSL மாடல் 7 நிமிடங்கள் 20.207 நொடிகளில் கடந்துள்ளது.

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். உலகளவில் இந்த கார் மொத்தத்தில் 1000 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலில் 3.0 லிட்டர், ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட, ஸ்டிரெயிட் 6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 550 ஹெச்.பி. திறன், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. M4 CSL மணிக்கு அதிகபட்சமாக 307 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஸ்டாண்டர்டு மாடலை விட 110 கிலோ எடை குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் முன்புறம் 21 இன்ச் வீல்களும், பின்புறம் 22 இன்ச் வீல்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மிஷெலின் பைலட் ஸ்போர்ட் கப் 2 R டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.
எம்ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது கார் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் அதிக வெற்றிகளை வாரி குவித்து வருகிறது. கடந்த மாதம் இந்திய சந்தையில் ஒரு லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருப்பதாக எம்.ஜி. மோட்டார்ஸ் அறிவித்து இருந்தது. இந்தியாவில் சில மாடல்களை மட்டுமே அறிமுகம் செய்துள்ள நிலையில், இத்தகைய மைல்கல்லை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களை அப்டேட் செய்ய இருக்கிறது. அப்டேட் மட்டுமின்றி புது எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகளிலும் எம்.ஜி. நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் எம்.ஜி. ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

ஹெக்டார் மாடலை தொடர்ந்து எம்.ஜி. குளோஸ்டர் பேஸ்லிப்ட் மாடலின் ஸ்பை படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புது பேஸ்லிப்ட் மாடலில் ஸ்டைலிங் அப்டேட்கள் மற்றும் புது அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
இரு மாடல்கள் மட்டுமின்றி எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கான இரண்டாவது எம்.ஜி. எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இது தற்போது விற்பனை செய்யப்படும் எம்.ஜி. ZS EV காரை விட குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது அளவில் சிறிய கார் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் 250 டியூக் மோட்டார்சைக்கிள் டூயல் சேனல் ஏ.பி.எஸ். ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் USD ஃபோர்க், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது.
கே.டி.எம். இந்தியா நிறுவனம் 200 டியூக் மற்றும் 390 டியூக் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களிடையே நிலவும் இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் கே.டி.எம். 250 டியூக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. கே.டி.எம். 250 டியூக் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் இரண்டு அசத்தலான நிறங்களில் கிடைக்கிறது.
அதன்படி கே.டி.எம். 250 டியூக் மாடல் டார்க் கல்வேனோ நிறத்தில் கிடைக்கிறது. இதில் எலெகெட்ரிக் ஆரஞ்சு மற்றும் மேட் பிளாக் நிறங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில் ஆரஞ்சு நிற கிராஃபிக்ஸ், ஆரஞ்சு வீல்கள் மற்றும் ஃபிரேம்களில் ஆரஞ்சு நிறம் பூசப்பட்டு உள்ளது. இத்துடன் சில்வர் மெட்டாலிக் நிறத்திலும் இந்த மாடல் கிடைக்கிறது. இந்த மாடலின் பியூவல் டேன்க் மீது 250 ஸ்டிக்கரிங் செய்யபர்பட்டு உள்ளது.

மேலும் இதன் ஹெட்லேம்ப் கவுல், பின்பகுதிகளில் ஆரஞ்சு நிற ஹீண்ட் செய்யப்பட்டு உள்ளது. பிளாக்டு-அவுட் வீல்களில் ஆரஞ்சு நிற டேப் வழங்கப்பட்டு இருக்கிறது. டார்க் கல்வேனோ வேரியண்டை போன்றே இந்த நிற வேரியண்டிலும் ஆர்ஞ்சு நிற ஃபிரேம் உள்ளது.
கே.டி.எம். 250 டியூக் மாடலில் 249சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 29.6 பி.ஹெச்.பி. பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப், யு.எஸ்.டி. ஃபோர்க், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் கே.டி.எம். 250 டியூக் மாடல் சுசுகி ஜிக்சர் 250 மற்றும் ஹஸ்க்வர்னா 250 ட்வின் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த காருக்கான விளம்பர படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ப்ரோடோடைப் வெர்ஷனில் பல முறை இந்த காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த மாடல் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், நீண்ட காலம் சோதனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முதல் முறையாக எவ்வித மறைப்பும் இன்றி சோதனை செய்யப்படும் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இவை புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் விளம்பர படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டவை என கூறப்படுகிறது. அதன்படி இந்த காரின் முன்புறம் மெல்லிய கிளாஸ் பிளாக் நிற கிரில், ரிடிசைன் செய்யப்பட்ட ஹெட்லைட் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

Photo Courtesy: RushLane
இத்துடன் J வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் முன்புற பம்ப்பர்கள் பிளாக் இன்சர்ட் மற்றும் ஃபாக் லேம்ப்களை கொண்டுள்ளன. பக்கவாட்டில் பிரம்மாண்ட வீல் ஆர்ச்கள், நீண்ட சில்வர் நிற ரூஃப் ரெயில்கள் உள்ளன. இத்துடன் புதிய அலாய் வீல்கள் மற்றும் ஸ்வில் ரக டூயல் டோன் டிசைன் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய தலைமுறை மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கான முன்பதிவு தற்போது ஓலா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெற்று வருகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஓலா S1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கி வருகிறது. இந்த நிலையில், ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டர்களை அப்டேட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர் வாங்குவதற்கான முன்பதிவு வலைதளம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய ஓலா S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் ஓலா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
இந்தியாவில் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை அடுத்து ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. விலை உயர்வு பற்றிய தகவலை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த விற்பனைக்கு வாங்குவோர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார். ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999 என ஓலா எலெக்ட்ரிக் வலைதளத்திலும் மாற்றப்பட்டு விட்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உலகின் விலை உயர்ந்த காரை விற்பனை செய்து சாதனை படைத்து உள்ளது. மெர்சிடிஸ் 1955 300 SLR Uhlenhaut கூப் மாடல் இந்த சாதனையை பெற்று தந்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உலகின் விலை உயர்ந்த காரை விற்பனை செய்து இருக்கிறது. தனியார் ஏலத்தில் ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் தான் உருவாக்கி வைத்து இருந்த இரண்டு 1955 300 SLR Uhlenhaut கூப் மாடல்களில் ஒன்றை விற்பனைக்கு பட்டியலிட்டது. இந்த ஏலத்தில் மெர்சிடிஸ் 1955 300 SLR Uhlenhaut மாடல் 135 மில்லியன் யூரோக்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,100 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.
இந்த கூப் ப்ரோடோடைப் மாடலின் பெயர், இதனை உருவாக்கியவரும், மூத்த பொறியாளருமான Rudolf Uhlenhaut-ஐ கவுரவிக்கும் வகையில் சூட்டப்பட்டு இருக்கிறது. முன்னதாக உலகின் விலை உயர்ந்த கார்ந்த என்ற பெருமையை 1962 பெராரி 250 GTO மாடல் பெற்று இருந்தது. இந்த கார் 48.4 மில்லியன் டாலர்களுக்கு 2018 வாக்கில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

“ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி மற்றும் மிக முக்கிய வரலாற்று அம்சங்களால் உருவாகி இருக்கும் எங்கள் பிராண்டின் மைல்கல் 300 SLR Uhlenhaut கூப் மாடல் ஆகும். இரண்டு தனித்தும் மிக்க கார்களில் ஒன்றை விற்பனை செய்வதற்கான முடிவு, நியாயமான காரணங்களுக்காகவே எடுக்கப்பட்டு உள்ளது. இது ஒரு நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் கிடைக்கும் வருவாய் சர்வதேச உதவித்தொகை திட்டத்திற்காக பயன்படுத்தப்பட இருக்கிறது,” என மெர்சிடிஸ் பென்ஸ் சி.இ.ஓ. ஓலா கலெனியஸ் தெரிவித்து இருக்கிறார்.
இந்த கார் மாடலுக்கான ஏலம் மே 5 ஆம் தேதி நடைபெற்றது. ஏலம் ஆர்.எம். சவுத்பி உடனான கூட்டணி மூலம் நடத்தப்பட்டது. இதில் மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் ஆசைக்காக கார் வாங்கி வைக்கும் கார் ப்ரியர்கள் கலந்து கொண்டனர். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட கார் இதுவரை பொது வெளியில் இடம்பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மெர்சிடிஸ் 300 SLR Uhlenhaut மாடலில் 3 லிட்டர், 8 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. இது 298 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 290 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது. இந்த சீரிசில் மொத்தமே இரு யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், மற்றொரு மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புது தலைமுறை ஸ்கார்பியோ மாடல் மஹிந்திரா ஸ்கார்பியோ N என்று அழைக்கப்பட இருக்கிறது. இந்த மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்.யு.வி. மாடல் மஹிந்திரா ஸ்கார்பியோ N எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என அறிவித்து இருக்கிறது. புதிய மஹந்திரா ஸ்கார்பியோ N மாடல் ஜூன் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் எப்படி காட்சியளிக்கும் என்ற புகைப்படங்களையும் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டாலும், தற்போது விற்பனையாகி வரும் மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் புது பெயர் - மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் முன்புறம் செங்குத்தான கிரில், புது எலிமண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் புதிய மஹிந்திரா லோகோ மற்றும் சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பாக் லேம்ப்கள் காணப்படுகின்றன.
காரின் பின்புறம் ரி-டிசைன் செய்யப்பட்ட டெயில்கேட், பின்புறம் கீழ் பகுதியில் கிடைமட்டமான ப்ரோபைல் கொண்டிருக்கிறது. இத்துடன் இருபுறங்களிலும் பம்ப்பர் மற்றும் க்ரோம் ஸ்ட்ரிப் ப்ரிட்ஜிங் உள்ளது. இந்த மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை டக்சன் மாடல் இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த மாடல் முற்றிலும் புது டிசைன் மற்றும் அதிக அம்சங்களை கொண்டிருக்கும்.
முற்றிலும் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் 2022 இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2004 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டக்சன் மாடல் இதுவரை உலகம் முழுக்க 70 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இவற்றில் ஐரோப்பாவில் மட்டும் சுமார் 17 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடலில் முற்றிலும் புது டிசைன், ஏராளமான அம்சங்கள் மற்றும் அதீத சௌகரிய வசதிகள் வழங்கப்பட இருக்கிறது. இதே மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட அதிக கூர்மையான தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் முன்புறத்தில் புதிய கிரில் இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ஹெட்லைட்கள் மற்றும் புது பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

காரின் உள்புறம் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புளூ லின்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்திற்கு டச் கண்ட்ரோல், ஆம்பிண்ட் லைட்டிங், இ பார்க்கிங் பிரேக், ஸ்விட்ச் கியர்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய ஹூண்டாய் டக்சன் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் மற்றும் ஆல்-வீல் டிரைவ் போன்ற ஆப்ஷ்ன்கள் வழங்கப்படலாம்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M 1000 RR மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் M காம்படிஷன் பேக்கேஜ் கொண்டிருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் M 1000 RR ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இந்த மாடல் பி.எம்.டபிள்யூ. M சீரிசின் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. M 1000 RR அல்லது M RR என அழைக்கப்படும் மோட்டார்சைக்கிள் பி.எம்.டபிள்யூ. S 1000 RR மாடலில் இருந்து ஏராளமான மெக்கானிக்கல் மற்றும் காஸ்மெடிக் மாற்றங்களை பெறும் முதல் பி.எம்.டபிள்யூ. M சீரிஸ் மாடல் ஆகும்.
புதிய M 1000 RR 50 Years M என அழைக்கப்படும் ஆனிவர்சரி எடிஷன் மாடலில் பி.எம்.டபிள்யூ. அதிக மாற்றங்களை மேற்கொள்ளவில்லை. புதிய ஆனிவர்சரி ஸ்பெஷல் எடிஷன் மாடலில் முற்றிலும் புது நிறம் மற்றும் ஆப்ஷனல் M காம்படீஷன் பேக்கேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய M 1000 RR ஆனிவர்சரி எடிஷன் மாடல் சௌ பௌலோ எல்லோ நிறத்தில் கிடைக்கிறது.

இதனுடன் ஆப்ஷனாக வழங்கப்படும் M காம்படிஷன் பேக்கேஜ் - பல்வேறு கார்பன் பைபர் ஸ்டைலிங் எலிமண்ட்கள், M ஜி.பி.எஸ். லேப் டைமர் ட்ரிகர் சாப்ட்வேர், ரியர் சீட் கவர் மற்றும் பாசஞ்சர் கிட், அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் ஸ்விங் ஆர்ம், லோ ப்ரிக்ஷன் M எண்டியூரன்ஸ் செயின், பில்லெட் அலுமினியம் என்ஜின் ப்ரோடெக்டர்கள் மற்றும் போல்டிங் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர்கள் போன்ற அம்சங்களை வழங்குகிறது.
புதிய ஸ்பெஷல் எடிஷன் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் 999சிசி, லிக்விட் கூல்டு, 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 209 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் கிடைக்கும் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக பி.எம்.டபிள்யூ. M 1000 RR இருந்து வருகிறது. இதன் விலை எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் ரூ. 42 லட்சம் ஆகும். இத்துடன் M காம்படிஷன் பேக்கேஜ் விலை மட்டும் ரூ. 3 லட்சம் ஆகும்.






