என் மலர்

  இது புதுசு

  மஹிந்திரா ஸ்கார்பியோ N
  X
  மஹிந்திரா ஸ்கார்பியோ N

  புதிய தலைமுறை ஸ்கார்பியோ விவரங்கள் வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா நிறுவனத்தின் புது தலைமுறை ஸ்கார்பியோ மாடல் மஹிந்திரா ஸ்கார்பியோ N என்று அழைக்கப்பட இருக்கிறது. இந்த மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


  மஹிந்திரா நிறுவனம் தனது புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்.யு.வி. மாடல் மஹிந்திரா ஸ்கார்பியோ N எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என அறிவித்து இருக்கிறது. புதிய மஹந்திரா ஸ்கார்பியோ N மாடல் ஜூன் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் எப்படி காட்சியளிக்கும் என்ற புகைப்படங்களையும் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு உள்ளது. 

  புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டாலும், தற்போது விற்பனையாகி வரும் மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் புது பெயர் - மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

   மஹிந்திரா ஸ்கார்பியோ N

  மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் முன்புறம் செங்குத்தான கிரில், புது எலிமண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் புதிய மஹிந்திரா லோகோ மற்றும் சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பாக் லேம்ப்கள் காணப்படுகின்றன.

  காரின் பின்புறம் ரி-டிசைன் செய்யப்பட்ட டெயில்கேட், பின்புறம் கீழ் பகுதியில் கிடைமட்டமான ப்ரோபைல் கொண்டிருக்கிறது. இத்துடன் இருபுறங்களிலும் பம்ப்பர் மற்றும் க்ரோம் ஸ்ட்ரிப் ப்ரிட்ஜிங் உள்ளது. இந்த மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட  இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். 
  Next Story
  ×