என் மலர்

  ஆட்டோ டிப்ஸ்

  ஒலா S1 ப்ரோ
  X
  ஒலா S1 ப்ரோ

  24 மணி நேரத்தில் உடனடி டெலிவரி - ஓலா எலெக்ட்ரிக் அதிரடி..!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர்களை டெலிவரி பெறும் வீடியோக்களை ஓலா எலெக்டரிக் வெளியிட்டு இருக்கிறது.
     

  ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான் விற்பனையை சமீபத்தில் துவங்கியது. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் முழு தொகையை செலுத்தி 24 மணி நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டு வருவதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

  ஸ்கூட்டர்கள் அதிவேகமாக டெலிவரி செய்யப்பட்டு வருவதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவன குழுவினருக்கு ஓலா எலெக்ட்ரிக் சி.இ.ஒ.  பாவிஷ் அகர்வால் பாராட்டு தெரிவித்து உள்ளார். வாடிக்கையாளர்கள் புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரைந்து டெலிவரி எடுத்துக் கொள்ளும் வீடியோவை ஓலா எலெக்டரிக் நிறுவனம் தனது ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டு இருக்கிறது. 

  “ஸ்கூட்டர் வாங்கிய 24 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. ஓலா எலெக்ட்ரிக் குழுவின் சிறப்பான பணி இது. பல்வேறு எலெக்ட்ரிக் வாகன பிராண்டுகள் தங்களின் வாகனங்களை டெலிவரி செய்ய காத்திருப்பு காலத்தை அறிவித்து உள்ளன. இதோடு வாகனத்தை பதிவு செய்யவும் அதிக நேரம் ஆகிறது. எதிர்காலம் இங்கே இருக்கிறது, இதன் அங்கமாக இருங்கள்!,” என பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

  Next Story
  ×