என் மலர்

  பைக்

  பி.எம்.டபிள்.யூ, M 1000 RR ஸ்பெஷல் எடிஷன்
  X
  பி.எம்.டபிள்.யூ, M 1000 RR ஸ்பெஷல் எடிஷன்

  பி.எம்.டபிள்யூ. 1000சிசி பைக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M 1000 RR மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் M காம்படிஷன் பேக்கேஜ் கொண்டிருக்கிறது.


  பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் M 1000 RR ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இந்த மாடல் பி.எம்.டபிள்யூ. M சீரிசின் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. M 1000 RR அல்லது M RR என அழைக்கப்படும் மோட்டார்சைக்கிள் பி.எம்.டபிள்யூ. S 1000 RR மாடலில் இருந்து ஏராளமான மெக்கானிக்கல் மற்றும் காஸ்மெடிக் மாற்றங்களை பெறும் முதல் பி.எம்.டபிள்யூ. M சீரிஸ் மாடல் ஆகும்.

  புதிய M 1000 RR 50 Years M என அழைக்கப்படும் ஆனிவர்சரி எடிஷன் மாடலில் பி.எம்.டபிள்யூ. அதிக மாற்றங்களை மேற்கொள்ளவில்லை. புதிய ஆனிவர்சரி ஸ்பெஷல் எடிஷன் மாடலில் முற்றிலும் புது நிறம் மற்றும் ஆப்ஷனல் M காம்படீஷன் பேக்கேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய M 1000 RR ஆனிவர்சரி எடிஷன் மாடல் சௌ பௌலோ எல்லோ நிறத்தில் கிடைக்கிறது. 

   பி.எம்.டபிள்.யூ, M 1000 RR ஸ்பெஷல் எடிஷன்

  இதனுடன் ஆப்ஷனாக வழங்கப்படும் M காம்படிஷன் பேக்கேஜ் - பல்வேறு கார்பன் பைபர் ஸ்டைலிங் எலிமண்ட்கள், M ஜி.பி.எஸ். லேப் டைமர் ட்ரிகர் சாப்ட்வேர், ரியர் சீட் கவர் மற்றும் பாசஞ்சர் கிட், அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் ஸ்விங் ஆர்ம், லோ ப்ரிக்‌ஷன் M எண்டியூரன்ஸ் செயின், பில்லெட் அலுமினியம் என்ஜின் ப்ரோடெக்டர்கள் மற்றும் போல்டிங் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர்கள் போன்ற அம்சங்களை வழங்குகிறது.

  புதிய ஸ்பெஷல் எடிஷன் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் 999சிசி, லிக்விட் கூல்டு, 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 209 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

  இந்தியாவில் கிடைக்கும் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக பி.எம்.டபிள்யூ. M 1000 RR இருந்து வருகிறது. இதன் விலை எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் ரூ. 42 லட்சம் ஆகும். இத்துடன் M காம்படிஷன் பேக்கேஜ் விலை மட்டும் ரூ. 3 லட்சம் ஆகும்.  
  Next Story
  ×