என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அப்டேட் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. ஆண்ட்ராய்டு சாதனங்களிடையே சாட் டிரான்ஸ்பர் செய்வது மிக எளிமையான விஷயமாக இருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனிற்கு சாட் டிரான்ஸ்பர் செய்வது சிக்கலான காரியம் ஆகும். இந்த நிலையை விரைவில் மாற்றும் வகையில் வாட்ஸ்அப் புது அம்சத்தை உருவாக்கி வருகிறது.
சமீபத்தில் புது ஐபோன் வாங்கியவர்கள் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து சாட் டிரான்ஸ்பர் செய்வது எளிமையாக்கும் புது அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது. இதற்கான விவரங்கள் வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 22.2.74 வெர்ஷனில் இடம்பெற்று இருக்கிறது. புதிய பீட்டா வெர்ஷனில் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து சாட்களை இம்போர்ட் செய்வதற்கான வசதி வழங்குவது பற்றிய குறியீடு இடம்பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்து பீட்டா பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்க மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வாட்ஸ்அப் 2.21.20.11 பீட்டா வெர்ஷன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிடப்பட்டது. இதில் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து ஐ.ஒ.எஸ்.-க்கு சாட் ஹிஸ்ட்ரியை இம்போர்ட் செய்வதற்கான வசதி வழங்குவது பற்றிய குறியீடு இடம்பெற்று இருந்தது.
இதுவரை சாட் டிரான்ஸ்பர் செய்ய ஆண்ட்ராய்டு போன்களை புதிய ஐ.ஒ.எஸ். சாதனத்துடன் யு.எஸ்.பி. டைப் சி-டு-லைட்னிங் கேபிள் மூலம் இணைக்க வேண்டும். இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் 'மூவ் டு ஐ.ஒ.எஸ்.' செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
கோவின் தளத்தில் இனி ஒற்றை நம்பர் பதிவு செய்து ஆறு பயனர்களை இணைக்கும் வசதி வழங்கப்படுகிறது.
இந்தியா முழுக்க கொரோனா தொற்றின் மூன்றாவது அலை கோரத்தாண்டம் ஆடி வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை சீரற்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு முழுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு கோவின் இணையதளம் மூலம் முன்பதிவு மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் பெயர், தொலைபேசி மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவை கோவின் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கோவின் தளத்தில் மத்திய அரசு புது மாற்றங்களை மேற்கொண்டு இருக்கிறது.
தடுப்பூசி செலுத்திய பின் அதற்கான சான்றிதழ் சம்பந்தப்பட்ட நபருக்கு தொலைபேசி எண்றிற்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதை வைத்து சான்றிதழை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதில் ஒரு மொபைல் எண்ணை பயன்படுத்தி நான்கு நபர்களுக்கு முன்பதிவு செய்யும் வகையில் கோவின் தளம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
தற்போதைய மாற்றங்களின் படி கோவின் வலைதளத்தில் ஒரு மொபைல் எண் கொண்டு ஆறு பேருக்கு முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய இன் நோட் 2 ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது இன் நோட் 2 ஸ்மார்ட்போனினை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய இன் நோட் 2 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இந்த நிலையில், புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய இன் நோட் 2 ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் அமோலெட் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 16 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது லென்ஸ், இரட்டை 2 எம்.பி. லென்ஸ் வழங்கப்படுகிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.
முந்தைய ஸ்மார்ட்போன் போன்றே புதிய இன் நோட் 2 மாடலிலும் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கிட்டத்தட்ட ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவம் வழங்கும் என தெரிகிறது. இந்த மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 மாடல்களுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவை துவங்கிவிட்டது. இன்னும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படாத நிலையில், முதற்கட்டமாக முன்பதிவுகள் மட்டும் துவங்கி இருக்கிறது.
கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல்களை சாம்சங், விரைவில் நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் மட்டுமின்றி கேலக்ஸி டேப் எஸ்8 மாடல்களின் முன்பதிவை சாம்சங் துவங்கி இருக்கிறது.

முன்னதாக கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மற்றும் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களுக்கும் வெளியீட்டிற்கு முன்பே சாம்சங் முன்பதிவுகளை துவங்கி இருந்தது. அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால், இந்த முன்பதிவுகளுக்கு சாம்சங் எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை. மேலும் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள சலுகை வழங்குவதாகவும் சாம்சங் அறிவித்து இருக்கிறது.
இதை கொண்டு பயனர்கள் சாம்சங் வலைதளத்தில் மற்ற சாதனங்களை வாங்க முடியும். இந்த ஆண்டிற்கான கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வுக்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த நிகழ்வு பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 அல்லது எக்சைனோஸ் 2200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவன டி.வி. மாடல்களில் எல்.ஜி. டிஸ்ப்ளே நிறுவனத்தின் ஒ.எல்.இ.டி. பேனல்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் டி.வி. மாடல்களில் எல்.ஜி. டிஸ்ப்ளே நிறுவனத்தின் ஒ.எல்.இ.டி. பேனல்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்.ஜி. எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் எல்.ஜி. டிஸ்ப்ளே சமீபத்தில் உருவாக்கும் சாதனங்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சி.இ.எஸ். 2022 நிகழ்வில் எல்.ஜி. டிஸ்ப்ளே புதுமை நிறைந்த அடுத்த தலைமுறை கியூ-எல்.இ.டி. மற்றும் ஒ.எல்.இ.டி. பேனல்களை அறிமுகம் செய்தது. எல்.ஜி. டிஸ்ப்ளே உருவாக்கிய டபிள்யூ-ஒ.எல்.இ.டி. பேனல்கள் கொண்ட சாம்சங் டி.வி. மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கென சாம்சங் நிறுவனம் எல்.ஜி. டிஸ்ப்ளேவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. மேலும் 2022 சி.இ.எஸ். நிகழ்வில் எல்.ஜி. டிஸ்ப்ளேவிடம் இருந்து ஒ.எல்.இ.டி. பேனல்களை வாங்குவது பற்றி சாம்சங் தலைமை செயல் அதிகாரி ஜாங் ஹீ வெளிப்படையாக தகவல் தெரிவித்து இருந்தார்.
ஒப்போ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒப்போ பேட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த டேப்லெட் மாடல் 2022 முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதன் சரியான வெளியீட்டு தேதி இன்னமும் மர்மமாகவே உள்ளது. தற்போது இந்த மாடலின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
அதன்படி புதிய ஒப்போ பேட் மாடல் OPD2101 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது சிங்கில் கோர் சோதனையில் 4582 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 12,259 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஒப்போ பேட் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அட்ரினோ 650 ஜி.பி.யு. மற்றும் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.

இந்த டேப்லெட் மாடல் முதலில் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். உடன் அறிமுகமாகி பின் கலர் ஓ.எஸ். 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 11 இன்ச் எல்.சி.டி. பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ பேட் மாடல் 8080 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சக்தியூட்டப்படுகிறது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் கேன்சலிங் இயர்பட்ஸ் மாடலை பிரீமியம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
சோனி நிறுவனம் டபிள்யூ.எப். 1000 எக்ஸ்.எம்.4 ட்ரூ வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலிங் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த இயர்பட் இண்டகிரேடெட் பிராசஸர் வி1 மற்றும் நாய்ஸ் ஐசோலேஷன் இயர்பட் டிப் மற்றும் ஸ்டேபில் ஃபிட் கொண்டிருக்கிறது. இது முந்தைய மாடலை விட 10 சதவீதம் அளவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயர்பட் ஹை-ரெசல்யூஷன் ஆடியோ வயர்லெஸ் வசதி கொண்டிருக்கிறது. இதில் உள்ள 6 எம்.எம். டிரைவர்கள் டைனமிக் சவுண்ட் வெளிப்படுத்துகிறது. மேலும் இண்டகிரேடெட் பிராசஸர் வி1 ஆடியோ தரத்தை மேம்படுத்தி, டிஸ்டார்ஷனை குறைத்து, எல்.டி.ஏ.சி. கோடெக் பிராசஸிங்-ஐ செயல்படுத்துகிறது.

இதன் மைக்ரோபோன்கள் மிக துல்லியமாக ஆடியோ பிக்கப் செய்கின்றன. இவற்றை கொண்டு ஹேண்ட்ஸ்-ஃபிரீ அழைப்புகளிலும் தெளிவாக பேச முடியும். இதில் உள்ள நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் மறுமுனையில் பேசுபவர் கூறுவதை எவ்வித இரைச்சலும் இன்றி கேட்க வழி செய்கிறது. இதில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 8 மணி நேர பேக்கப் வழங்குகிறது.
நாய்ஸ் கேன்சலிங் பயன்படுத்தாத போது இந்த பேட்டரி 13 மணி நேர பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் சேர்த்தால் இந்த இயர்பட் பேட்டரி 39 மணி நேரம் பயன்படுத்தலாம். மேலும் கியூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்குகிறது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டு 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 60 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.
புதிய சோனி டபிள்யூ.எப். 1000 எக்ஸ்.எம்.4 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,990 ஆகும். விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் ஜனவரி 16 ஆம் தேதி துவங்குகிறது.
டெஃபி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவை சேர்ந்த ஆடியோ சாதனங்கள் உற்பத்தியாளரான டெஃபி தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. டெஃபி ஸ்பேஸ் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.69 இன்ச் 240x280 பிக்சல் ஃபுல் டச் ஃபிளாட் எல்.சி.டி. சதுரங்க வடிவிலான டயல் கொண்டிருக்கிறது. இது நூற்றுக்கும் அதிக வாட்ச் ஃபேஸ்களை சப்போர்ட் செய்கிறது.
மேலும் இதில் பல்வேறு ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள், கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ், 24x7 இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஒ.2 மாணிட்டரிங், ஐ.பி. 68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கால், டெக்ஸ்ட் மற்றும் சமூக வலைதளங்களுக்கான நோட்டிபிகேஷன்களை வழங்குகிறது.

இத்துடன் கைடெட் பிரீத்திங், மியூசிக் கண்ட்ரோல் மற்றும் கேமரா கண்ட்ரோல் வசதி உள்ளது. இதன் பேட்டரி பேக்கப் பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய டெஃபி ஸ்பேஸ் ஸ்மார்ட்வாட்ச் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.
ஒற்றை நிறத்தில் கிடைத்தாலும் பிளாக் அல்லது புளூ, ஸ்கின்-சேஃப் சிலிகான் ஸ்டிராப்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 9ஆர்.டி. ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் 9ஆர்.டி. மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.64 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் புளூயிட் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 16 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 9ஆர்.டி. அம்சங்கள்
- 6.62 இன்ச் 1080x2400 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் புளூயிட் அமோலெட் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
- அட்ரினோ 660 ஜி.பி.யு.
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 11
- டூயல் சிம்
- 50 எம்.பி. பிரைமரி கேமரா
- 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்.பி. மேக்ரோ கேமரா
- 16 எம்.பி. செல்பி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 65 வாட் வார்ப் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போன் நானோ சில்வர் மற்றும் ஹேக்கர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. + 128 ஜி.பி. விலை ரூ. 42,999 என்றும் 12 ஜி.பி + 256 ஜி.பி. விலை ரூ. 46,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜனவரி 17 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை அமேசான், ஒன்பிளஸ் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.
ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ரெட்மி பிராண்டு தனது புதிய நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உணர்த்தும் வகையில் ரெட்மி டீசர் வெளியிட்டுள்ளது.
டீசரின்படி புதிய ஸ்மார்ட்போன் நான்கு கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. இதில் ஒரு 108 எம்.பி. கேமராவும் இடம்பெற்று இருக்கிறது. டீசரில் புதிய ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் ஃபிரேம் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் அமோலெட் ஸ்கிரீன் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

முந்தைய தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போனில் சாம்சங் ஹெச்.எம்.2 சென்சார், 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. ஆம்னிவிஷன் மேக்ரோ கேமரா, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், மீடியாடெக் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது.
சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் எப்.சி.சி. வலைதளத்தில் லீக் ஆனது. அதில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. + 64 ஜி.பி., 6 ஜி.பி. + 128 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு குறைந்த விலையில் புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் பட்ஜெட் விலை பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 184 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 347 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த சலுகைகளில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், இலவச எஸ்.எம்.எஸ்., அதிவேக டேட்டா போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன. 'ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்' பிரிவில் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பலன்களை பொருத்தவரை பி.எஸ்.என்.எல். ரூ. 184 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் அரினா மொபைல் கேமிங் சேவை வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதே பலன்கள் வழங்கும் ரூ. 185 மற்றும் ரூ. 186 சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ரூ. 185 சலுகையில் கூடுதலாக லிஸ்டன் பாட்கேஸ்ட், ரூ. 186 சலுகையில் பார்டி கேம்ஸ், பி.எஸ்.என்.எல். டியூன்ஸ் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 347 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இத்துடன் அரினா மொபைல் கேமிங் சேவை வழங்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய ரியல்மி 9ஐ இந்தியாவில் ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் கொண்டிருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் வியட்நாம் மற்றும் தாய்லாந்து சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 9ஐ மாடலில் 6.6 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் வேரியபில் ரிப்ரெஷ் ரேட், 16 எம்.பி. செல்பி கேமரா, அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. போர்டிரெயிட் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் புளு குவாட்ஸ் மற்றும் பிளாக் குவாட்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.






