என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சென்ஹெய்சர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹெட்போன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
     
    ஜெர்மன் நாட்டு ஆடியோ சாதனங்கள் உற்பத்தியாளரான சென்ஹெய்சர் இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் கேன்சலிங் ப்ளூடூத் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்தது. ஹெச்.டி. 450 எஸ்.இ. என அழைக்கப்படும் புது ஹெட்போன் விலை ரூ. 14,990 ஆகும்.

    இந்த ஹெட்போன் தனித்துவம் மிக்க வயர்லெஸ் ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள பிரீமியம் அம்சங்கள் இசை பிரியர்களுக்கு அலாதியான அனுபவத்தை வழங்கும். ஓவர்-தி-இயர் ரக சென்ஹெய்சர் ஹெச்.டி. 450 எஸ்.இ. ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, ஏ.ஏ.சி. ஆப்ட் எக்ஸ், ஆப்ட் எக்ஸ் லோ லேடென்சி, ஹெச்.எஸ்.பி., ஹெச்.எப்.பி., ஏ.வி.ஆர்.சி.பி. மற்றும் ஏ2டி.பி. கோடெக் கொண்டிருக்கிறது. 

     சென்ஹெய்சர் ஹெட்போன்

    பயனர்கள் இந்த ஹெட்போன் அம்சங்களை பிரத்யேக சென்ஹெய்சர் ஸ்மார்ட் கண்ட்ரோல் ஆப் மூலம் இயக்க முடியும். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. செயலி பேட்டரி ஸ்டேட்டஸ், குவிக் ஸ்டார்ட் கைடு, ஃபர்ம்வேர் அப்டேட் என பல்வேறு விவரங்களை காண்பிக்கிறது.

    ஏ.என்.சி. இயக்கப்பட்ட நிலையில் சென்ஹெய்சர் ஹெச்.டி. 450எஸ்.இ. முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இந்த ஹெட்போனை யு.எஸ்.பி. டைப் சி போர்ட் கொண்டு சார்ஜ் முழுமையாக செய்ய 2 மணி நேரம் ஆகிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஜனவரி 16 ஆம் தேதி துவங்குகிறது.

    டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    டெக்னோ நிறுவனம் இந்தியாவில் பாப் 5 எல்.டி.இ. ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 2ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ், 5 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் ஹை ஓ.எஸ். 7.6 கொண்டிருக்கிறது. ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் டெக்னோ பாப் 5 எல்.டி.இ. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    டெக்னோ பாப் 5 எல்.டி.இ.

    டெக்னோ பாப் 5 எல்.டி.இ. அம்சங்கள்

    - 6.52 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர் 
    - 2 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
    - ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் ஹை ஓ.எஸ். 7.6
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா
    - ஏ.ஐ. கேமரா
    - 5 எம்.பி. செல்பி கேமரா
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ 
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

    டெக்னோ பாப் 5 எல்.டி.இ. ஸ்மார்ட்போன் ஐஸ் புளூ, டீப்சீ லஸ்டர் மற்றும் டர்குயிஸ் சியான் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ஜனவரி 16 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 6,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி டேப் ஏ8 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 10.5 இன்ச் டி.எப்.டி. ஸ்கிரீன், யுனிசாக் டி618 பிராசஸர், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8

    சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 அம்சங்கள்

    - 10.5 இன்ச் 2000x1200 பிக்சல் டி.எப்.டி. டிஸ்ப்ளே 
    - யுனிசாக் டி618 பிராசஸர்
    - மாலி ஜி52 எம்.பி.2 ஜி.பி.யு.
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா 
    - 5 எம்.பி. செல்பி கேமரா 
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
    - 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5
    - 7,040 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் கிரே, சில்வர் மற்றும் பின்க் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17,999 என துவங்குகிறது. இதன் விற்பனை ஜனவரி 17 ஆம் தேதி துவங்குகிறது.
    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு டெவலப்பர்களுக்கு 60 பில்லியன் டாலர்களை கொடுத்ததாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் 2021 ஆண்டு டெவலப்பர்களுக்கு 60 பில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 4,43,300 கோடி கொடுத்ததாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றி ஆப்பிள் வெளியிட்ட தகவல்களில், அந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டெவலப்பர்களுக்கு எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் இதுவரை இல்லாத அளவு அதிக தொகையை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் செலவிட்டுள்ளனர் என ஆப்பிள் அறிவித்து இருக்கிறது. எனினும், சரியான தொகை பற்றிய விவரங்களை ஆப்பிள் வெளியிடவில்லை.

     ஆப் ஸ்டோர்

    2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஆப் ஸ்டோரில் இருந்து டெவலப்பர்களுக்கு 260 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 19,21,486 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஆப் ஸ்டோரில் அதிக டவுன்லோட்களை பெற்ற ஆப் பட்டியலை ஆப்பிள் வெளியிட்டுள்ளது.

    ஆப்பிள் வெளியிட்டுள்ள தகவல்கள் பெரும் தொகையாக தெரிந்தாலும், இதன் மூலம் எத்தனை டெவலப்பர்கள் பயன்பெற்றனர் என்ற விவரங்களை அறிந்து கொள்ள இயலாது. ஆப் ஸ்டோரில் ஏராளமான போலி செயலிகள் இடம்பெற்று இருப்பதாக டெவலப்பர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    விவோ நிறுவனம் விவோ வை33டி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.58 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 50 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா, 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    8 எம்.எம். அளவில் மிகமெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கும் விவோ வை33டி பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

     விவோ வை33டி

    விவோ வை33டி அம்சங்கள்

    - 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் 
    - அட்ரினோ 610 ஜி.பி.யு. 
    - 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - ஆண்ட்ராய்டு 11 
    - 50 எம்.பி. பிரைமரி கேமரா
    - 2 எம்.பி. டெப்த் கேமரா
    - 2 எம்.பி. மேக்ரோ கேமரா
    - 16 எம்.பி. செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் 
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விவோ வை33டி ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் மிட்-டே டிரீம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் முன்னணி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, 32 எம்.பி. செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 50 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று கேமராக்களிலும் 10-பிட் கலர் வசதி கொண்ட முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இது ஆகும். 

     ஒன்பிளஸ் 10 ப்ரோ

    ஒன்பிளஸ் 10 ப்ரோ அம்சங்கள்

    - 6.7 இன்ச் 3216x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் 
    - 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர் ஓ.எஸ். 12
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா
    - 50 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
    - 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா 
    - 32 எம்.பி. செல்பி கேமரா
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
    - யு.எஸ்.பி. டைப் சி போர்ட் 
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 6
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வொல்கேனிக் பிளாக் மற்றும் எமரால்டு பாரஸ்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 4699 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 54,501 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 5299 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 61,445 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கூகுள் ஜிமெயில் செயலி ஆண்ட்ராய்டு டவுன்லோட்களில் புது மைல்கல் எட்டி சாதனை படைத்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆண்ட்ராய்டு தளத்தில் ஜிமெயில் செயலி ஆயிரம் கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது. டவுன்லோட்களில் இத்தகைய மைல்கல் எட்டிய நான்காவது செயலியாக ஜிமெயில் இருக்கிறது. முன்னதாக கூகுள் பிளே ஸ்டோர், யூடியூப் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற செயலிகள் ஆயிரம் கோடி டவுன்லோட்களை கடந்தது. 

    ஏப்ரல் 2004 வாக்கில் அறிமுகமான ஜிமெயில் செயலி இன்றும் உலகின் பிரபல மின்னஞ்சல் செயலிகளில் ஒன்றாக இருக்கிறது. ஜிமெயில் செயலியில் அவ்வப்போது பல்வேறு புது அம்சங்கள் அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அப்டேட் ஜிமெயில் செயலியில் அண்டூ அம்சம் வழங்கியது. இதை கொண்டு அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெற முடியும்.

     ஜிமெயில்

    அனுப்பிய மின்னஞ்சல்களை 5 நொடிகள், 10 நொடிகள், 20 நொடிகள் அல்லது 30 நொடிகளில் திரும்ப பெற முடியும். ஜிமெயிலில் அண்டூ அம்சம் ஜிமெயில் வெப் மற்றும் மொபைல் செயலியில் வழங்கப்படுகிறது. 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த தேதியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 பிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புதிய எஸ்22 சீரிஸ் பற்றி சாம்சங் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய சாம்சங் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    அதன்படி பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் தனது கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழ்கள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு பிப்ரவரி 9 ஆம் தேதியும், விற்பனை பிப்ரவரி 24 தேதி துவங்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு சாம்சங் - கேலக்ஸி எஸ்22, எஸ்22 பிளஸ் மற்றும் எஸ்22 அல்ட்ரா என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. மூன்று மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் / எக்சைனோஸ் 2200 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. 

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்22 மாடலில் 6.06 இன்ச் டிஸ்ப்ளே, எஸ்22 பிளஸ் மற்றும் அல்ட்ரா மாடல்களில் முறையே 6.55  இன்ச் மற்றும் 6.81 இன்ச் டிஸ்ப்ளே, எஸ்22 அல்ட்ரா மாடலில் எஸ் பென் ஸ்டைலஸ் வசதி வழங்கப்பட இருக்கிறது. புதிய பிளாக்‌ஷிப் மாடல்களில் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருக்கிறது.

    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டபிள்யூ.எப். சி500 இயர்பட்ஸ்-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    சோனி இந்தியா நிறுவனம் டபிள்யூ.எப். சி500 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் தனித்துவம் மிக்க சவுகரிய அனுபவம் வழங்கும் நோக்கில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை, ஏராளமான கஸ்டமைசேஷன் வசதியுடன் வழங்குகிறது. இத்துடன் நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை இந்த இயர்பட்ஸ் கொண்டிருக்கிறது. 

    சோனி டபிள்யூ.எப். சி500

    சோனி டபிள்யூ.எப். சி500 அம்சங்கள்

    - 5.8 எம்.எம். டிரைவர் யூனிட்
    - ஃபாஸ்ட் பேர்
    - ஸ்விஃப்ட் பேர்
    - ப்ளூடூத் 5
    - டபிள்யூ.எப். சி500 பட்டன் மூலம் ஸ்மார்ட்போன் வாய்ஸ் அசிஸ்டண்ட் இயக்கலாம்
    - அதிக தரமுள்ள பில்ட்-இன் மைக்ரோபோன்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - ஒரு இயர்பட் மட்டும் பயன்படுத்தும் வசதி
    - 10 மணி நேர பேக்கப், சார்ஜிங் கேஸ் சேர்த்தால் மொத்தம் 20 மணி நேர பேக்கப்

    புதிய சோனி டபிள்யூ.எப். சி500 பிளாக், வைட், ஆரஞ்சு மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் முன்னணி மின்சாதன விற்பனை மையங்கள் மற்றும் வலைதளங்களில் ஜனவரி 16 ஆம் தேதி  விற்பனைக்கு வருகிறது.

    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனினை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்தது. இதில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 13 5ஜி பேண்ட்களுக்கான சப்போர்ட், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். போன்ற அம்சங்கள் உள்ளது.

    இதன் பின்புறம் கைரேகை சென்சார், 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் டர்போசார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

     மோட்டோ ஜி71 5ஜி

    மோட்டோ ஜி71 5ஜி அம்சங்கள்

    - 6.43 இன்ச் 1080x2400 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் 
    - அட்ரினோ 619எல் ஜி.பி.யு.
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - ஆண்ட்ராய்டு 11
    - 50 எம்.பி. பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா 
    - 2 எம்.பி. மேக்ரோ கேமரா
    - 16 எம்.பி. செல்பி கேமரா 
    - பின்புறம் கைரேகை சென்சார் 
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் 
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் டர்போ சார்ஜிங் 

    இந்தியாவில் மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் நெப்டியூன் கிரீன் மற்றும் ஆர்க்டிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18,999 ஆகும். விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜனவரி 19 ஆம் தேதி துவங்குகிறது.
    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    சியோமி நிறுவனம் இந்தியாவில் சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஜனவரி 19 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் சியோமி 11ஐ வெளியீட்டின் நிறைவில் இடம்பெற்று இருந்தது. தற்போது இதன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     சியோமி 11டி ப்ரோ

    சியோமி ஹைப்பர்போன் எனும் தலைப்பில் இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் சியோமி 11டி ப்ரோ மாடல் சியோமி 11டி மாடலுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருந்தது. தற்போது நான்கு மாத இடைவெளிக்கு பின் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது. 

    அம்சங்களை பொருத்தவரை சியோமி 11டி ப்ரோ மாடலில் 6.6 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் 10-பிட் அமோலெட் டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் விக்டஸ், டால்பி விஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2999 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை 20 சதவீதம் ஜியோமார்ட் மகா கேஷ்பேக் சலுகையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சலுகையை ஜியோ மார்ட் வலைதளத்தில் இருந்து ரிசார்ஜ் செய்யும் கேஷ்பேக் கிடைக்கும்.

    புதிய ரூ. 2999 சலுகையில் தினமும் 2.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர 365 நாள் வேலிடிட்டி வழங்கும் இதர சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருகிறது. எனினும், இவற்றின் விலை வித்தியாசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

    கோப்புப்படம்

    ஜியோ ரூ. 3110 சலுகையில் ஒருவருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, ஒரு வருடத்திற்கு 740 ஜி.பி. அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 2999 சலுகையில் வருடத்திற்கு 912 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. புதிய ரூ. 2999 சலுகை மட்டுமின்றி ஜியோ ரூ. 299, ரூ. 666 மற்றும் ரூ. 719 விலை சலுகைகள் 20 சதவீதம் கேஷ்பேக் வழங்குகின்றன. 
    ×