என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ரெட்மியின் நோட் 11 செல்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்த நிலையில், அதன் விலை 13,499 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    ரெட்மி செல்போன் நிறுவனம் தற்போது ரெட்மி நோட் சீரிஸ் செல்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செல்போனில் விலை 13,499 ரூபாயக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    6.43 இன்ஞ் டிஸ்பிளேயுடன், முழு ஹெச்டி பிளஸ் அமோலெட் (Full HD+ AMOLED screen) ஸ்கிரீன் கொண்டது.  இந்த பட்ஜெட் விலையில் 90Hz refresh rate, DCI-P3 color gamut வசதி உள்ளது.

    13 எம்.பி. செல்பி கேமரா வசதி கொண்டுள்ளது. 6 ஜி.பி. ரேம் உடன் 2 ஜி.பி. பூஸ்டர் ஆப்சனும் கொண்டுள்ளது. Snapdragon 680 SoC பிராசசர் கொண்டது.

    பின்பக்கம் 50 எம்.பி. மெயின் கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா-வைடு, 2 எம்.பி. டெப்த் மற்றும் 2எம்.பி. மேக்ரோ என நான்கு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

    MIUI 13 உடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். மற்றும்  5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்டுள்ளத. ஒரு மணி நேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏறும் வகையில் 33வாட் சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 170 கிராம் எடைகொண்டது. வெளியில் செல்லும்போது எளிதாக எடுத்துச் செல்லலாம்.
    இந்தியாவில் மூன்று ஆப்பிள் ஐபோன்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், அதன் விலை விவரம் வெளியாகியுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் புதுவகை ஐபோன்-ஐ அறிமுகப்படுத்தும். அந்த வகையில் டெஸ்டிங்கிற்காக இந்தியாவுக்கு மூன்று போன்களை இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    A2595, A2783, A2784 ஆகிய போன்களை டெஸ்டிங் நோக்கத்திற்கான அனுப்பியுள்ளது. தற்போது அதன் விலை வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த செல்போன்களுக்கு 300 அமெரிக்க டாலர் விலை நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பண மதிப்பில் இன்றைய மதிப்பிற்கு 22,410 ரூபாயும். ஆனால், இதனுடன் இறக்குமதி வரி சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.

    இதனால் மேலும், 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அதனுடன் ஜி.எஸ்.டி. வரி சேரும்போது 32 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மூன்று போன்களுடன் இரண்டு புதிய ஐபேடு-களையும் இறக்குமதி செய்துள்ளது. A2588, A2589 ஆகிய இரண்டு ஐபேடுகளும் 500 டாலர் முதல் 700 டாலர் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    4.7 இன்ச் டிஸ்பிளே, டச் ஐடி சென்சார் கொண்ட SE வடிவமைப்பில் SE 3 இருப்பதாக வெளியாக வதந்திகள் அடிப்படையில் நம்பப்படுகிறது.
    பேஸ்புக்கின் தினசரி பயனர்கள் குறைவதற்கு டிக்டாக் நிறுவனத்தின் வளர்ச்சியும் ஒரு காரணம் என கூறப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை 18 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கூறியதாவது:-

    பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு டிக்டாக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுடனான போட்டியே காரணம். மேலும் விளம்பரதாரர்களும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்காக செலவிடும் தொகையை குறைத்துள்ளனர்.

    நியூயார்க் பங்குச்சந்தையில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மெட்டா மட்டும் இல்லாமல் ட்விட்டர், ஸ்னாப்சேட், பின்ட்ரஸ்ட் போன்ற சமூக வலைதளங்களின் பங்கு மதிப்பும் குறைந்துள்ளது. இதற்கு காரணம், இளைய தலைமுறையை சேர்ந்த பயனர்கள் போட்டியாளர்களின் தளங்களை பயன்படுத்துவதே ஆகும்.

    மார்க் ஜுக்கர்பெர்க்

    மேலும் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஓஎஸ்சில் அமல்படுத்தியுள்ள தனிநபர் உரிமைகளின் மாற்றம், விளம்பர நிறுவனங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள பயன்பாட்டாளர்களை அளவிடுவதை கடினமாக்கியுள்ளது. இதுவே 1000 கோடி டாலர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது மார்க் ஜுக்கர்பெர்க் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருவதால் மெட்டா நிறுவனம் பிற சமூக வலைதளங்களுடனான போட்டியை குறைத்துள்ளது. மேலும் டிக்டாக் நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் அதிவேகமாக வளர்ந்து வருவதும் பேஸ்புக்கின் பயனர்கள் குறைவதற்கு காரணம்.

    இவ்வாறு மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்8 மாடலின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் எஸ்8 மாடல் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதன்  வடிவமைப்பு, அம்சங்கள் பற்றிய விவரங்கள் அதிகளவில் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதன் விலை விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது. 

    அதன்படி கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா டாப் எண்ட் மாடல் விலை 1699 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,43,712 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதில் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம். இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., குவால்காம் ஸ்னாப்ராகன் 8 ஜென் 1 பிராசஸர், 11,200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 14.6 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என தெரிகிறது. 

     சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7

    கேலக்ஸி டேப் எஸ்8 பிளஸ் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை 999 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 84,501 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இதில் 12.4 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 10.090 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. 

    சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 பேஸ் வேரிண்ட் மாடலில் 11 இன்ச் டி.எப்.டி. ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இதன் விலை 970 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 82,048 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மாரட்போனினை இந்த மாதத்திலேயே இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் டிசைன் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    அதில் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எட்ஜ் எக்ஸ் 30 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது உண்மையாகும் பட்சத்தில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும். 

     மோட்டோரோலா ஸ்மாரட்போன்

    இதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 மாடலை விட சற்று வித்தியாசமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அம்சங்களை பொருத்தவரை  மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் பி.ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஹெச்.டி.ஆர். 10 பிளஸ் வசதி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சமாக 12 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என தெரிகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. பிரைமரி கேமரா, 50 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார், 60 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ மாடலில்  5000எம்.ஏ.ஹெச்.  பேட்டரி, 68 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
    ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஐமேக் ப்ரோ டிசைன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் தனது கணினி மாடல்கள் ஒவ்வொன்றையும் மெல்ல அப்டேட் செய்து வருகிறது. அப்டேட் செய்யப்படும் மாடல்களில் ஆப்பிள் சிலிகான் பிராசஸர்கள் முதன்மை அம்சமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஐமேக் ப்ரோ வெளியீடு இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும்  புதிய விவரங்களின் படி புதிய ஐமேக் ப்ரோ வடிவமைப்பு மாற்றப்பட்டு மேம்பட்டு சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறார். மேலும் 27 இன்ச் ஐமேக் ப்ரோ மாடலின் டிசைன் பார்க்க எம்1 சிப்செட் கொண்டிருக்கும் 24 இன்ச் ஐமேக் மாடலை போன்றே காட்சியளிக்கும் என அவவர் தெரிவித்தார். 

     ஆப்பிள் ஐமேக்

    புதிய மேம்பட்ட ஐமேக் ப்ரோ மாடலில் மினி எல்.இ.டி. பேக்லைட்டிங் மர்றும் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐமேக் ப்ரோ ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்களை கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதே பிராசஸரகள் 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிதாக ஐமேக் ப்ரோ வெளியிடுவது பற்றி வழக்கம் போல் ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய சாதனங்கள் இந்த ஆண்டு துவக்கத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இவை ஸ்ப்ரிங் நிகழ்வில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஆப்பிள் ஐமேக் ப்ரோ மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் ப்ரோ 2, எம்2 சிப்செட், புதிய மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி  உள்ளது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தனது 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ரியல்மி ஈடுபட்டு வருகிறது. 

    புது ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு நடைபெறும் என அறிவித்துள்ள போதும், ஸ்மார்ட்போன்கள் பற்றி ரியல்மி இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. ரியல்மி 9 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

    ரியல்மி 9  சீரிசில் முதற்கட்டமாக இரண்டு மாடல்கள் மட்டும் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவை ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஆகும். இதுகுறித்து சந்தை வல்லுனர்கள் வெளியிட்டுள்ள தகவல்களில் ரியல்மி மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் பிப்ரவரி 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

     ரியல்மி ஸ்மார்ட்போன்

    இந்தியாவில் ரியல்மி 9 ப்ரோ சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 15 ஆயிரத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதுவரை வெளியான தகவல்களின் படி ரியல்மி 9 ப்ரோ மாடலில் 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 128GB மெமரி, புகைப்படங்களை எடுக்க- 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ கேமரா என மூன்று லென்ஸ்களும், முன்புறம் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலில் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் 920 5ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சக்தியூட்டப்படுகிறது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய இன் நோட் 2 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ்  1080x2400 பிக்சல் அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 4GB ரேம், 64GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., கனெக்டிவிட்டிக்கு 4ஜி எல்.டி.இ., வை-பை, ப்ளூடூத்  5, யு.எஸ்.பி. டைப் சி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2

    இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் பிளாக மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்தியாவில் புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 விலை ரூ. 13,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜனவரி 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 12,490 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

    சியோமியின் ரெட்மி பிராண்டு விரைவில் ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் மிட்-ரேன்ஜ் பிரிவில் உருவாகி வருகிறது. இவற்றில்  50 எம்.பி. பிரைமரி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமரா லென்ஸ்கள் வழங்கப்பட இருக்கின்றன.

    இத்துடன் புது ரெட்மி ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் பிராசஸர் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ரெடட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

     ரெட்மி ஸ்மார்ட்போன்

    இதுகுறித்து சியோமியு.ஐ. வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன் மாடல்களை சியோமி விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 12 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 14 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  

    ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி மாடல்களில் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன் மாடல்கள்  பற்றி சியோமி  சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இரு மாடல்களும் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரெட்மி 9ஏ மற்றும் ரெட்மி 9சி மாடல்களின் மேம்பட்ட வேரியண்ட்கள் ஆகும்.  
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதற்கான முதற்கட்ட பணிகளை நிறைவு செய்துள்ளது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க ஆயிரம் முன்னணி நகரங்களில் 5ஜி சேவை வழங்குவதற்கான ஆயத்த பணிகளை நிறைவு செய்து விட்டது. சமீபத்தில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்த ஆண்டிற்குள் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் சேவை வெளியிடப்படும் என அறிவித்து இருந்தது.

    அதன்படி, இந்தியாவில் 5ஜி சேவை வெளியிடும் நிறுவனங்களில் ஜியோ ஆதிக்கம் செலுத்தும் என துவக்கம் முதலே தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் ரிலையன்ஸ் ஜியோவும் அவ்வப்போது 5ஜி வெளியீடு பற்றிய தகவல்களை அறிவித்து வந்தது. ஹீட்  மேப்ஸ், 3டி மேப்ஸ் மற்றும் ரே டிரேசிங் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 5ஜி சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.

     ரிலையன்ஸ் ஜியோ

    இதுகுறித்து தகவல் தெரிவித்து இருக்கும்  ஜியோ ஃபிளாட்பார்ம்ஸ், ":நாடு முழுக்க ஆயிரம் நகரங்களில் 5ஜி சேவை வழங்குவதற்கான ஆயத்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஜியோ மருத்துவம் மற்றும் தொழில்துறை ஆட்டோமேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் 5ஜி பயன்பாட்டை சோதனை செய்து வருகிறது," என தெரிவித்துள்ளது. 

    இந்தியாவில் முதற்கட்டமாக 13 முக்கிய நகரங்களில் மட்டுமே 5ஜி சேவை வெளியிடப்படும் என டிராய் ஏற்கனவே அறிவித்து விட்டது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது நெட்வொர்க்கில் 5ஜி சேவையை பல கட்டங்களில் வெளியிட இருக்கிறது. பிரீபெயிட் ரீசார்ஜ் அனுபவத்தை  மேம்படுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாட்ஸ்அப் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
    சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கும் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

    சாம்சங் நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுபற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியான நிலையில், புது ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

    அதன்படி கேலக்ஸி எஸ்22 மாடலின் விலை 849 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,801 துவங்குகிறது. கேலக்ஸி எஸ்22 பிளஸ் விலை 1049 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 88,716 என்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா விலை 1249 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,05,630 என துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் சாம்சங் தனது கேலக்ஸி எஸ்22  சீரிஸ் மாடல்களில் சிலவற்றை 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரியுடன் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதேபோன்று 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. மெமரி ஆப்ஷனும் சில சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

    2022 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்த நிகழ்வு சரியாக இரவு 8.30 மணிக்கு துவங்குகிறது. முந்தைய ஆண்டுகளை போன்றே இம்முறையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு வலைதளங்களில் நேரலை செய்யப்படுகிறது. 

    ஸ்மார்ட்போன்  சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், கேலக்ஸி எஸ்22 சீரிஸ் அம்சங்கள், விலை மற்றும் இதர தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். இதே நிகழ்வில் சாம்சங் தனது கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ் மாடல்களையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெனோ 7 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதுபற்றிய அறிவிப்பு ஒப்போ இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. புதிய ரெனோ 7 சீரிசில் ரெனோ 7 5ஜி, ரெனோ 7 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 7 எஸ்.இ. 5ஜி போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன.

    வெளியீட்டு தேதி மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், புது ஸ்மார்ட்போன்களின் விலை, வேரியண்ட் மற்றும் விற்பனை பற்றிய தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே ஒப்போ ரெனோ 7 5ஜி, ரெனோ 7 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 7 எஸ்.இ. 5ஜி மாடல்களின் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

     ஒப்போ டீசர்

    அதன்படி இவற்றின் விலை முறையே ரூ. 28 ஆயிரத்தில் துவங்கி ரூ. 31 ஆயிரமும், ரெனோ 7 ப்ரோ 5ஜி மாடல் விலை ரூ. 41 ஆயிரத்தில் துவங்கி ரூ. 43 ஆயிரமும், ரெனோ 7 எஸ்.இ. 5ஜி விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி ரூ. 45 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

    அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ரெனோ 7 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், ரெனோ 7 ப்ரோ 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 மேக்ஸ் பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் இதே பிராசஸரே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×