என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்

X
மோட்டோரோலா ஸ்மாரட்போன்
60 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்
By
மாலை மலர்1 Feb 2022 11:47 AM GMT (Updated: 1 Feb 2022 11:47 AM GMT)

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மாரட்போனினை இந்த மாதத்திலேயே இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் டிசைன் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அதில் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எட்ஜ் எக்ஸ் 30 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது உண்மையாகும் பட்சத்தில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும்.

இதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 மாடலை விட சற்று வித்தியாசமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் பி.ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஹெச்.டி.ஆர். 10 பிளஸ் வசதி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சமாக 12 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என தெரிகிறது.
புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. பிரைமரி கேமரா, 50 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார், 60 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ மாடலில் 5000எம்.ஏ.ஹெச். பேட்டரி, 68 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Next Story
×