search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மாரட்போன்"

    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    • ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய P1 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ரியல்மி P1 மற்றும் ரியல்மி P1 ப்ரோ என இரு மாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளது. புதிய ரியல்மி P1 சீரிஸ் மாடல்களில் ஸ்பார்க்லிங் ஃபீனிக்ஸ் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் பேஸ் வேரியண்டில் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர், P1 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன. இத்துடன் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    இரு ஸ்மார்ட்போன்களுடன் ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி மேட் 2 வைபை மற்றும் ரியல்மி பட்ஸ் T110 மாடல்களையும் அறிமுகம் செய்தது.

     


    ரியல்மி P1 அம்சங்கள்:

    ரியல்மி P1 5ஜி மாடலில் 6.67 இன்ச் Full HD+ 2400x1080 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. இதில் உள்ள ரெயின்வாட்டர் டச் அம்சம், ஸ்மார்ட்போன் மழையில் ஈரமானாலும் டச் ஸ்கிரீனை பயன்படுத்த வழி செய்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யு.ஐ. 5.0 ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் வழங்கப்படும் என்று ரியல்மி தெரிவித்துள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரியல்மி P1 5ஜி மாடலில் 45 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி உள்ளது. இத்துடன் IP54 தர வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

     


    ரியல்மி P1 ப்ரோ 5ஜி மாடலில் ஒ.எஸ்., பேட்டரி, சார்ஜிங், செல்ஃபி கேமரா உள்ளிட்டவை P1 5ஜி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர ரியல்மி P1 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 6.7 இன்ச் Full HD+ கர்வ்டு OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    ரியல்மி P1 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பீகாக் கிரீன் மற்றும் ஃபீனிக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.

    ரியல்மி P1 ப்ரோ 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேரட் புளூ, ஃபீனிக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.

    • வெளியீட்டு தேதி அந்நிறுவனத்தின் அர்ஜென்டினா வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • சாம்சங் நிறுவனம் அடுத்த வாரம் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக கேலக்ஸி S23 FE இருக்கிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஸ்மார்ட்போனாக இருக்கும் நிலையில், இதன் வெளியீடு சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய கேலக்ஸி S23 FE மாடலின் வெளியீட்டு தேதி அந்நிறுவனத்தின் அர்ஜென்டினா வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    சில நாட்களுக்கு முன்பு தான் கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனிற்கான டீசரை சாம்சங் இந்தியா வெளியிட்டு இருந்தது. டீசரில் அக்டோபர் வெளியீடு மட்டும் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், சரியான வெளியீட்டு தேதி தொடர்ந்து ரகசியமாக உள்ளது. அந்த வகையில் தான் சாம்சங் அர்ஜென்டினா வலைதளத்தில் கேலக்ஸி S23 FE வெளியீட்டு தேதி லீக் ஆகி உள்ளது.

    அதன்படி கேலக்ஸி S23 FE மற்றும் கேலக்ஸி பட்ஸ் FE, கேலக்ஸி டேப் S9 FE போன்ற சாதனங்கள் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரியவந்துள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் அடுத்த வாரம் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும்.

    புதிய கேலக்ஸி சாதனங்கள் வெளியீடு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது லீக் ஆகி இருக்கும் தேதி சர்வதேச வெளியீட்டை உணர்த்தும் என்றே தெரிகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி S23 FE மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 அல்லது எக்சைனோஸ் 2200 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 50MP பிரைமரி கேமரா, 10MP செல்ஃபி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • ரியல்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • ரியல்மியின் புது டேப்லெட் பற்றிய விவரங்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

    இந்திய சந்தையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட், ரியல்மி மினி மற்றும் ரியல்மி பேட் X மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட் ஸ்லிம் மாடலை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கும் புது டேப்லெட் மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. புதிய ரியல்மி பேட் ஸ்லிம் மாடல் விரைவில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி இருக்கும் மற்றொரு ஸ்கிரீன்ஷாட்டில் ரியல்மி பேட் ஸ்லிம் மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் லிஸ்டிங் செய்யப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ரியல்மி பேட் ஸ்லிம் மாடலில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, வைபை, 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டி, கோல்டு மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இவைதவிர ரியல்மி பேட் ஸ்லிம் மாடலின் இதர அம்சங்கள் ரியல்மி பேட் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.

    ரியல்மி பேட் மாடலில் 10.4 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 2000x1200 பிக்சல், 8MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 7100 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது. ரியல்மி பேட் மாடல் இரண்டு எல்டிஇ மாடல்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ரியல்மி பேட் ஸ்லிம் மாடல் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக ரியல்மி 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகமாகும் என ரியல்மி ஏற்கனவே அறிவித்து விட்டது. எனினும், ரியல்மி பேட் ஸ்லிம் வெளியீடு பற்றி ரியல்மி இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.

    ×