என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ரெட்மி நோட் 11
பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 11
ரெட்மியின் நோட் 11 செல்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்த நிலையில், அதன் விலை 13,499 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி செல்போன் நிறுவனம் தற்போது ரெட்மி நோட் சீரிஸ் செல்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செல்போனில் விலை 13,499 ரூபாயக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6.43 இன்ஞ் டிஸ்பிளேயுடன், முழு ஹெச்டி பிளஸ் அமோலெட் (Full HD+ AMOLED screen) ஸ்கிரீன் கொண்டது. இந்த பட்ஜெட் விலையில் 90Hz refresh rate, DCI-P3 color gamut வசதி உள்ளது.
13 எம்.பி. செல்பி கேமரா வசதி கொண்டுள்ளது. 6 ஜி.பி. ரேம் உடன் 2 ஜி.பி. பூஸ்டர் ஆப்சனும் கொண்டுள்ளது. Snapdragon 680 SoC பிராசசர் கொண்டது.
பின்பக்கம் 50 எம்.பி. மெயின் கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா-வைடு, 2 எம்.பி. டெப்த் மற்றும் 2எம்.பி. மேக்ரோ என நான்கு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.
MIUI 13 உடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். மற்றும் 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்டுள்ளத. ஒரு மணி நேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏறும் வகையில் 33வாட் சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 170 கிராம் எடைகொண்டது. வெளியில் செல்லும்போது எளிதாக எடுத்துச் செல்லலாம்.
Next Story






