என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இந்த போன்களின் அறிமுக நிகழ்ச்சி ரியல்மி யூடியூப் சேனலில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி நிறுவனம் ரியல்மி ப்ரோ 5ஜி, ரியல்மி ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. 

    இந்த போன்களில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    இந்த போன்களில்  MediaTek Dimensity 920 SoC பிராசஸர், Arm Mali-G68 ஜிபியூ வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரியல்மி 9 ப்ரோ+ போனில் 50 மெகாபிக்சல் Sony IMX766 பிரைமரி சென்சார் ஓ.ஐ.எஸ் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்களால் நகரும் பொருட்களை துல்லியமாக படம் பிடிக்க முடியும். 

    மேலும் இந்த இரு போன்களும் சன்ரைஸ் ப்ளூ மற்றும் பெயரிடப்படாத கிரீன் ஆகிய வண்ணங்களில் வர இருப்பதாக கூறப்படுகிறது. ரியல்மி 9 ப்ரோ+ போன் இதய துடிப்பை அளவிடும் சென்சாருடன் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.


    ரியல்மி 9 ப்ரோ சீரிஸ்

    விலையை பொறுத்தவரை ரியல்மி 9 ப்ரோவின் விலை ரூ.18,999-ல் இருந்தும், ரியல்மி 9 ப்ரோ+ விலை ரூ.24,999-ல் இருந்தும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த போன்களின் அறிமுக நிகழ்ச்சி ரியல்மி யூடியூப் சேனலில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தயாரிப்பு நிலையில் இருக்கும் இந்த அம்சங்கள் விரைவில் பீட்டா பயனர்களுக்கும், பிறகு பொது பயன்பாட்டுக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. பயனர்கள் எளிய வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது. 

    முதலில் குறுஞ்செய்தி வசதியுடன் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் பின்னாளில் வாய்ஸ் மெசேஜ், ஆடியோ கால்கள், வீடியோ கால்கள், ஸ்டேட்டஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் மேலும் சில அம்சங்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, வாட்ஸ்அப்பில் குரூப் காலில் நாம் பேசும்போது, எதிரே யார் பேசுகின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்கான வேவ்ஃபார்ம் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான முயற்சியில் வாட்ஸ் ஆப் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஸ்மார்ட்போன் தவிர கணினியில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும் பயனர்களுக்கும் வாய்ஸ் கால் செய்யும் வசதி விரைவில் தரப்படவுள்ளது.

    வாட்ஸ்அப் குரூப் கால்

    இதுமட்டும் இல்லாமல் வாட்ஸ்அப்பில் கவர் போட்டோ வைக்கும் வசதியும் விரைவில் வரவுள்ளது. தற்போது வாட்ஸ்அப் பிஸ்னஸ் பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி தரப்பட்டுள்ள நிலையில், சாதாரண பயனர்களுக்கும் இந்த வசதி தரப்படவுள்ளது.

    வாட்ஸ்அப்பில் தற்போது உள்ள குரூப் சேவை போல கம்யூனிட்டி சேவையும் தொடங்கப்படவுள்ளது. இந்த கம்யூனிட்டி சேவையில் பல வாட்ஸ்அப் குரூப்களை அட்மினின் அனுமதியுடன் ஒன்றாக இணைக்க முடியும்.

    இது மட்டுமல்லாமல், வாட்ஸ்அப்பில் தடை செய்யப்படும் அக்கவுண்ட்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் பயனாளர்களுக்கு, பதில் அளிப்பதற்கான அம்சம் ஒன்றையும் வாட்ஸ் அப் நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. 

    தற்போது தயாரிப்பு நிலையில் இருக்கும் இந்த அம்சங்கள் விரைவில் பீட்டா பயனர்களுக்கும், பிறகு பொது பயன்பாட்டுக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஜியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம், பட்ஜெட் விலையில் பல அம்சங்கள் கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
    இந்தியாவில் ஜியோமி நிறுவனம் பெரும் மதிப்பை பெற்றுள்ளது. இந்திய சந்தைக்கு ஏற்றவாறு குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதன் மூலம் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் பல அம்சங்கள் கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

    இந்த ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனில், 6.43" அங்குல முழு அளவு எச்டி+ AMOLED திரையுடன், 90Hz ரெப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 180Hz ஹெர்ட்ஸ் வரை டச் சாம்பிளிங், 409 ppi திரை அடர்த்தி, 2400*1080 பிக்சல்களை கொண்டுள்ளது. 

    இதில் வழங்கப்பட்டுள்ள 1000nits பீக் பிரைட்னஸ் மூலம் வீடியோக்களை துல்லியமாக காணமுடியும். இந்த விலை மதிப்பில் சிறந்த டிஸ்ப்ளே தரும் ஸ்மார்ட்போன் இதுவே ஆகும்.

    ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ஆக்டாகோர் சிப்செட் உதவியுடன் இயங்குகிறது. இதன்மூலம் அதிவேகமான செயல்பாடு, பல செயலிகளை பயன்படுத்தும்போது குறைந்த மின்செலவு ஆகியவற்றை உறுதி செய்கிறது. 

    இதில் கிராபிக்ஸ் எஞ்சினாக அட்ரினோ 610 செயல்படுகிறது. மேலும் இதில் 4ஜிபி, 6ஜிபி LPDDR4X ரேம் 3 வேரியண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன.  64ஜிபி, 128ஜிபி என ஸ்டோரேஜ் வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன. UFS2.2 மெமெரியுடன் 1TB வரை எஸ்டி கார்டு பயன்படுத்தும் வசதியும் இதில் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான புதிய MIUI 13 ஸ்கின் மூலம் இயங்குகிறது.

    ரெட்மி நோட் 11

    கேமராவை பொறுத்தவரை இந்த போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. f/1.8 அப்பெர்ச்சரில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை இதில் உள்ளன. மேலும் செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 13 மெகாபிக்சல் கேமரா அமோலெட் டிஸ்ப்ளேயின் பஞ்ச் ஹோலில் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்தபோனில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. யூஎஸ்பி டைப் சி 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட சார்ஜர் தரப்பட்டுள்ளது.

    இரட்டை 4ஜி சிம்,  ஜிபிஎஸ், வைஃபை, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், ப்ளூடூத் 5.1 ஆகிய அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றுள்ளன. 

    இந்த போன் ஸ்டார்டஸ்ட் வைட், ஹொரிசான் ப்ளூ, ஸ்பேஸ் ப்ளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. 

    இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.13,499ஆகவும், 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரியின் விலை ரூ.14,499 ஆகவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரியின் விலை ரூ.15,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    இந்த போனின் குறைகள் என்று பார்த்தால், 5ஜி சேவை வழங்கப்படாதது தான். இந்தியாவில் இந்த நிதியாண்டில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் அனைவரும் 5ஜி சேவை தரும் ஸ்மார்ட்போன்களையே எதிர்பார்க்கின்றனர். மேல்கூறிய அம்சங்களில் 5ஜி அம்சம் வழங்கப்படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
    ஜியோவின் 5ஜி பரிசோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா முழுவதும் 2022-2023 நிதியாண்டில் 5ஜி சேவை தொடங்கப்படும் என பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து பெரும் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே மொபைல் நிறுவனங்கள் 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தொடங்கிவிட்டன.

    இந்நிலையில் தற்போது 5ஜி சோதனைக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஓப்போ நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஜியோ நிறுவனம் 5ஜி பரிசோதனையை டெல்லி, புனே, மும்பை, குஜராத் ஆகிய மாநிலங்களில் நிகழ்த்தியது. இதை தொடர்ந்து அதிவேக மற்றும் குறைந்த வேக 5ஜி சேவை சோதனையை ஓப்போ நிறுவனத்தின் ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்போன்களில் ஜியோ பரிசோதித்தது. 

    ஒப்போ ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்

    இந்த சோதனை வெற்றி பெற்றிருப்பதாக ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஓப்போ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஜியோவின் 5ஜி சேவையை சோதனை செய்ததில் இடையூரே இல்லாமல் 4கே வீடியோக்களை பார்க்க முடிந்தது. அதேபோல அப்லோட் மற்றும் டவுன்லோட்கள் அதிவேகத்தில் இருக்கின்றன. இந்த சோதனை வெற்றி அடைந்ததுள்ளது. அதிகாரப்பூர்வமாக 5ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கு முன் மேலும் சோதனைகள் நடத்தப்படும்.

    இவ்வாறு ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.
    விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இருந்து விண்டோஸ் 11-க்கு மாற நினைப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஹெச்பி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
    இந்தியாவில் பெரும்பாலான கணினிகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளமே பயன்பட்டு வருகிறது. அதிலும் விண்டோஸ் 10 தற்போது பிரபலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 11 இயங்குதளம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானவுடன் பலரும் அதற்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் விண்டோஸ் 11 இயங்குதளத்திற்கு மாறும் ஹெச்பி லேப்டாப் பயன்பாட்டாளர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஹெச்பி லேப்டாப்பில் விண்டோஸ் 10-ல் இருந்து விண்டோஸ் 11-க்கு மாறுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விண்டோஸ் 11-ன் போலி இன்ஸ்டாலர் இணையத்தில் உலவி வருகிறது. 

    அதனை பயன்படுத்தி விண்டோஸ் 11-னை இன்ஸ்டால் செய்பவர்களின் லேப்டாப்களை ரெட்லைன் என்ற மேல்வேர் தாக்குகிறது. இதன்மூலம் பயன்பாட்டாளர்களின் பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் திருடப்படுகின்றன.

    விண்டோஸ் 11 இயங்குதளம்

    மைக்ரோசாப்ட் போன்ற போலி டொமைன்கள் மூலம் இந்த மேல்வேர் பரப்பப்படுகிறது. இந்த போலி தளம் பார்ப்பதற்கு  விண்டோஸ் 11 இணையதளம் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் விண்டோஸ் 11 டவுன்லோட் செய்ய நினைக்கும் பயனாளர்கள் டொமைன் பெயரை சரிபார்ப்பது அவசியம்.

    இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய அம்சம் ‘பிரைவேட் ஸ்டோரி லைக்ஸ்’ என அழைக்கப்படுகிறது.
    இணையவாசிகள் தங்களது புகைப்படங்களை பகிரும் பிரபல சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. அதில் ஸ்டோரிஸ், ரீல்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

    இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை லைக் செய்யும் புதிய அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    இதன்மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இனி தாங்கள் பின் தொடர்பவர்களின் இன்ஸ்டா ஸ்டோரிகளை லைக் செய்ய முடியும். முன்னதாக பயனர்கள் ஸ்டோரிக்களை ஷேர் செய்யவும், கமெண்ட் மூலம் ரிப்ளை செய்யும் அம்சங்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் தற்போது ஸ்டோரிகளை லைக் செய்யும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    இன்ஸ்டாகிராம் நிறுவன தலைவர் ஆடம் மொசெரி

    இந்த புதிய அம்சம் ‘பிரைவேட் ஸ்டோரி லைக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. 

    இந்த முறையில் ஸ்டோரிகளை லைக் செய்யும் போது பயனருக்கு டைரெக்ட் மெசேஜ் நோட்டிபிகேஷன் செல்லாது. அதே போன்று இந்த அம்சத்தில் எத்தனை பேர் லைக் செய்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையும் காட்டாது. 

    இதுகுறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைவர் ஆடம் மொசெரி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்தார்.

    இந்த திட்டம் தற்போது நாடு முழுவதும் 1700 பின்கோடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களும் அடங்கும்.
    பிளிப்கார்ட் நிறுவனம் புதிய 'செல்பேக்' (Sell back) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய  ஸ்மார்ட்போன்களை பிளிப்கார்ட் தளத்தில் நல்ல விலைக்கு விற்க முடியும். முக்கியமாக, பிளிப்கார்ட் தளத்தில் இருந்து வாங்காத போன்களைக் கூட செல்பேக் திட்டத்தின் கீழ் நல்ல விலைக்கு விற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் விற்கப்பட்ட பழைய போனின் மதிப்புக்கு நிகரான கேஷ் பேக் தொகை வழங்கப்படும். இந்த திட்டம் தற்போது நாடு முழுவதும் 1700 பின்கோடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களும் அடங்கும். 

    இந்த திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன்களை விற்பதற்கு புதிய ஆப்ஷன் பிளிப்கார்ட் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஸ்போனை விற்க விரும்பும் வாடிக்கையாளரிடம் 3 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு பின் பிளிப்கார்ட் பணியாளர்கள் 48 மணி நேரத்தில் நேரில் வந்து போனை பெற்றுக்கொள்வர். 

    பின் வாடிக்கையாளரின் போன் பரிசோதனை செய்யப்பட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படும். அதன்பிறகு மின்னனு கூப்பனின் கேஷ்பேக் தொகை வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.

    பிளிப்கார்ட் செல்பேக் திட்டம்

    சமீபத்தில் பழைய மின்னணு பொருட்களை வாங்கி விற்கும் யாந்த்ரா தளத்தை பிளிப்கார்ட் நிறுவனம் வாங்கியது. இதை தொடர்ந்து இந்த செல்பேக் திட்டத்தை பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது.

    பழைய மொபைல்களுக்கு வாடிக்கையாளர் எதிர்பார்ப்பதை விட நல்ல விலை கிடைக்கும் என்றும், இதில் கிடைக்கும் கேஷ் கூப்பனைக் கொண்டு பிளிப்கார்ட்டில் பொருள்கள் வாங்கும் போது கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ஐ.டி.சி வெளியிட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 12.5 கோடி பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் இருப்பதாகவும், அவற்றில் 2 கோடி மொபைல்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

    இதனால் நாட்டில் அதிகரிக்கும் மின்னணுக் கழிவுகளை குறைப்பதற்கு பிளிப்கார்ட் நிறுவனத்தின் செல்பேக் திட்டம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    போக்கோ நிறுவனம் தனது போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. 

    இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இதுதவிர ரெட்மி நோட் 11 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். 

    போக்கோ எம்4 ப்ரோ 5ஜி  ஆண்ட்ராய்டு 11-னை அடிப்படையாக கொண்ட MIUI 12.5-ல் இயங்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ டாட் டிஸ்ப்ளேவுடன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்ப்ளேயில் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட், DCI-P3 வைட் கலர் காமுட் அடங்கியுள்ளது.

    இத்துடன் இந்த போனில் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 810 எஸ்.ஓ.சி மற்றும் 8 ஜி.பி LPDDR4X ரேம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    கேமராவை பொறுத்தவரை f/1.8 லென்சுடன் 50 எம்.பி பிரைமரி சென்சார் கொண்ட டூயல் கேமரா, 8 எம்.பி அல்ட்ரா ஒய்ட் கேமரா, f/2.45 லென்ஸ் கொண்ட 16 எம்.பி செல்ஃபி கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன.

    போக்கோ எம்4 ப்ரோ

    போக்கோ எம்4 ப்ரோ 5ஜியில் 128 ஜிபி யூ.எப்.எஸ் 2.2 ஸ்டோரேஜுடன் 1 டி.பி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் தரப்பட்டுள்ளது. இந்த போனில் 5ஜி, 4ஜி LTE, Wi-fi, ப்ளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐ.ஆர், டைப் சி யூ.எஸ்.பி, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜேக், பக்கவாட்டில் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் ஆகியவையும் அடங்கியுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 33 வாட் ப்ரோ பாஸ்ட் சார்ஜிங் வசதியையும், 5000 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

    விலையை பொறுத்தவரை 4 ஜி.பி+64 ஜி.பி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.14,999-ஆகவும், 6 ஜிபி+128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999-ஆகவும், 8 ஜி.பி+128 ஜி.பி வேரியண்டின் விலை ரூ.18,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி கூல் ப்ளூ, போக்கோ யெல்லோ, பவர் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்த போன் பிப்ரவரி 22-ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஷேர் சாட்டின் மோஜ் பிளபாட்பாரத்துடன் டக்காடக் இணைக்கப்பட்டுள்ளதால், வீடியோ உருவாக்குபவர்களின் எண்ணிக்கை 10 கோடியாக உயருகிறது.
    பெரியவர்கள் முதல் சிறியவர்களை வரை குட்டி குட்டி வீடியோக்கள் மூலம் அடிமைப்படுத்தி வைத்திருந்தது டிக்டாக் செயலி. பயனர்கள் தங்களது வீடியோக்களை இதில் பதிவு செய்யலாம். அது கோடான கோடி ‘டிக்டாக்’ பயனர்களுக்கு சென்றடையும். செல்போனில் ‘டிக்டாக்’ ஒரு புரட்சியே செய்தது எனலாம்.

    ஆனால், டிக்டாக் செயலியை பயனர்கள் தவறாக கையாளத் தொடங்கினர். முகம் சுழிக்கும் வகையிலான வீடியோக்களை பதிவிட்டனர். இதனால் குடும்ப வன்முறை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ‘டிக்டாக்’ சந்தித்தது. பின்னர் சீன செயலியான டிக்டாக் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது.

    ‘டிக்டாக்’ தடையை பயன்படுத்தி எம்.எக்ஸ். டக்காடாக் என்ற செயலியையும, ஷேர்சாட் செயலி மோஜ் என்ற குட்டி வீடியோ பதிவு செய்யும் பிளாட்பாரத்தையும் கடந்த 2020 ஜூலை மாதம் தொடங்கியது.

    இதில் மோஜ் பிளாட்பார்ம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனது. இந்தநிலையில் பிரபலமான மோஜ் உடன் டக்காடாக் இணைக்கப்பட்டுள்ளது. இதை ஷேர்சாட் கட்டுப்படுத்தும் இரண்டு செயலியின் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் வீடியோ உருவாக்குபவர்களின் எண்ணிக்கை  100 மில்லியன், மாதந்தோறும் செயல்பாட்டில் இருக்கும் பயனர்களின் எண்ணிக்கை 30 மில்லியன் அளவில் இருக்கும் என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளது. மாதந்தோறும் சுமார் 250 பில்லியன் முறை வீடியோக்கள் பார்க்கப்படுகிறது.

    தொழில் நுட்ப கோளாறால் ஏர்டெல் நெட்வொர்க் முடங்கியதால், பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
    இந்தியாவில் ஏர்டெல் நெட்வொர்க் முதன்மையான நெட்வொர்க்கில் ஒன்றாக இருந்து வருகிறது. கோடிக்கணக்கானோர் பிராட் பேண்ட், செல்போன் மூலம் இணைய தள வசதி பெற்று வருகிறார்கள். தற்போது பெரும்பாலானோர் வீட்டில் இருந்து வேலை செய்து வருவதால் நெட்வொர்க் இன்றியமையாததாக உள்ளது.

    இந்தநிலையில் இந்தியா முழுவதும் இன்று காலை 11 மணியளவில் ஏர்டெல் நெட்வொர்க் முற்றிலும் டவுன் ஆனது. தொழில்நுட்ப காரணத்தால் பயனாளர்கள் நெட்வொர்க் வசதியை பெற முடியாமல் தவித்தனர்.

    இதனால் மற்ற சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதன்பின் ஏர்டெல் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறை சரி செய்தது.
    அசுஸ் செல்போன் நிறுவனம் இரண்டு மாடல்களை வருகிற 15-ந்தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
    இந்தியாவில் கடந்த சில நாட்களாக செல்போன் நிறுவனங்கள் புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அசுஸ் நிறுவனம் இரண்டு ரோக் மாடல் போன்களை வருகிற 15-ந்தேதி ரிலீஸ் செய்கிறது.

    அசுஸ் ரோக் போன் 5S, 5S புரோ ஆகிய மாடல்களை வெளியிடுவதை உறுதி செய்துள்ளது. இரண்டு போன்களும் 6.78 இன்ஞ் நீளம் கொண்ட, ஃபுல் ஹெச்.டி.பிளஸ், அமோல்டு ஹெச்.டி.ஆர்., 144 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே (சாம்சங்ஸ் E4 போன்று) கொண்டதாகும்.

    18 ஜி.பி. வரை ரேம் கொண்ட நிலையில், 512 ஜி.பி. வரை ஸ்டோரேஜ் வசதி கொண்டது. பிராசஸ்சர் Snapdragon 888 Plus SoC கொண்டது.

    இதில் 5S புரோ ரோக் விசன் கலருடன், பிமோல்டு டிஸ்பிளே கொண்டது. 16 ஜி.பி. ரேம் கொண்ட 256 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்டதாகவும், 18 ஜி.பி. ரேம் கொண்ட ரேம், 512 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஓ.எஸ். ரோக் யூ.ஐ. உடன்  ஆண்ட்ராய்டு 11 கொண்டது. இரண்டு சிம் (நானோ) வசதி கொண்டது. 64 எம்.பி. ரியர் கேமரா, 13 எம்.பி. அல்டாரா வைடு கேமரா, அதுமட்டுல்லாமல் 2 எம்.பி. மேக்ரோ சென்சார் கேமரா கொண்டுள்ளது. 64 எம்.பி. ரியல் கேமராவில் 8K வீடியோ எடுக்கலாம்.

     6000 mAh/5800 mAh வசதியுடன், 65வாட்ஸ் ஹைபர்சார்ஜ் வேக சார்ஜ் வசதி கொண்டது. முன்பக்கம் 24 எம்.பி. கேமரா வசதி கொண்டது.
    அதிக வரிவிதிப்பு காரணமாக 2021-2022-ம் நிதியாண்டில் 3-ம் காலாண்டில் ஏர்டெல் நிகர லாபத்தில் 2.8 சதவீதம் சரிந்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் தொலைபேசி துறையில் 5ஜி சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    இதுதொடர்பாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குத்துறை ஆணையம் 5ஜி சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

    இதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் மே அல்லது ஜூன் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுவதையொட்டி செல்போன் கட்டணம் மேலும் உயருகிறது.

    இது குறித்து ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறியதாவது:-

    செல்போன் துறையில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் இந்த ஆண்டு செல்போன் கட்டணம் மேலும் உயரும். 3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும்.

    ஒரு சந்தாதாரருக்கு தற்போது ரூ.163 என்று இருக்கும் கட்டணம் ரூ.200 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

    தற்போது நாட்டில் 3 முதல் 4 சதவீத ஸ்மார்ட்போன்கள் மட்டுமே 5ஜி தொழில்நுட்பம் கொண்டதாக உள்ளது. இது வருகிற மார்ச் மாதத்திற்குள் 10 முதல் 12 சதவீதமாக உயரும். 2023-2024-ம் ஆண்டுகளில் பெரும்பாலானோர் 5ஜி சேவையை பயன்படுத்த தொடங்கிவிடுவார்கள்.

    அதிக வரிவிதிப்பு காரணமாக 2021-2022-ம் நிதியாண்டில் 3-ம் காலாண்டில் ஏர்டெல் நிகர லாபத்தில் 2.8 சதவீதம் சரிந்துள்ளது. டீசல் விலை அதிகரித்து வருவதாலும் திறன் மேம்பாடு காரணமாகவும் செலவுகள் அதிகரித்து வருகிறது.

    எரிசக்தி செலவினங்களை குறைத்தல், செல்போன் டவர் வாடகைகளை மறுபரிசீலனை செய்தல் மூலம் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×