என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    வோடபோன் ஐடியா நிறுவனம் ரீசார்ஜ் சலுகை கட்டணத்தை உயர்த்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வோடபோன் ஐடியா நிறுவனம் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகை கட்டணங்களை மீண்டும் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், இழப்பை ஈடு செய்ய விலை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்திய டெலிகாம் சந்தையில் ரீசார்ஜ் கட்டணங்கள் விலை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக வோடபோன் ஐடியா தனது விலையை உயர்த்தலாம் என தெரிகிறது.

    இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களின் பிரீபெயிட் ரீசார்ஜ் கட்டணங்களை கடந்த ஆண்டு 20 சதவீதம் வரை அதிகரித்தன.

    இம்முறை வோடபோன் ஐடியா நிறுவனம் தனது நிதி நிலைமையை சரி செய்யும் நோக்கில் விலை உயர்வை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வோடபோன் ஐடியா தனது போஸ்ட்பெயிட் சலுகை கட்டணத்தை உயர்த்தியது. இவை ஏர்டெல் நிறுவன சலுகைகளை விட 7 சதவீதம் அதிகம் ஆகும்.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.4 மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஒருவழியாக நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி வந்தது குறிப்பிடத்தக்கது. 

    புதிய நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் பன்ச் ஹோல் ஸ்கிரீன், 16 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் பின்புறம் கைரேகை சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     நோக்கியா 5.4

    நோக்கியா 5.4 சிறப்பம்சங்கள்

    - 6.39 இன்ச் 720x1520 பிக்சல் HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - ஆண்ட்ராய்டு 10 
    - 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 5 எம்பி வைடு ஆங்கில் கேமரா
    - 2 எம்பி டெப்த் சென்சார் 
    - 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
    - 16 எம்பி செல்பி கேமரா
    - பின்புறம் கைரேகை சென்சார் 
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
    - யுஎஸ்பி டைப் சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் போலார் நைட் மற்றும் டஸ்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 229 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடனான கூட்டணி அதற்கு உதவியாக இருக்கும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.

    ஜியோ பிளாட்பார்ம்ஸ் உடனான கூட்டணி மூலம் இந்தியாவில் இயங்கி வரும் பல லட்சம் சிறு வியாபாரங்களுக்கு உதவியாக இருக்க முடியும் என பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த தகவலை மார்க் ஜூக்கர்பர்க், பேஸ்புக் பியூவல் பார் இந்தியா 2020 நிகழ்வில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானியுடனான உரையாடலின் போது தெரிவித்தார். 

     ரிலையன்ஸ் ஜியோ

    சிறு வியாபாரங்களுக்கு உதவி செய்வதே பேஸ்புக்கில் எங்களின் நோக்கம். இதற்கு இந்தியாவை தவிர சிறந்த இடம் இருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் சுமார் 6 கோடிக்கும் அதிகமான சிறு வியாபாரங்கள் நடைபெற்று வருகின்றன. வேலைவாய்ப்புக்காக பல லட்சம் பேர் இவற்றை நம்பி இருக்கின்றனர்.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பேஸ்புக் நிறுவனம் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-இல் 9.99 சதவீத பங்குகளை வாங்க ரூ. 43,574 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. 

    பல்வேறு புதிய அம்சங்களுடன் ஐஒஎஸ் 14.3 அப்டேட் வெளியிடப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 14.3 அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது. இந்தியா உள்பட உலகம் முழுக்க ஐபோன்களுக்கு இந்த அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது. 

    புது அப்டேட் ஆப்பிள் பிட்னஸ் பிளஸ் மற்றும் ஏர்பாட்ஸ் மேக்ஸ் வசதியை வழங்குகிறது. இத்துடன் ஐபோன் 12 ப்ரோ மாடலில் ஆப்பிள் ப்ரோ-ரா தரத்தில் புகைப்படங்களை எடுக்கும் வசதி மற்றும் ஆப் ஸ்டோர் பாதுகாப்பு விவரங்களை வழங்கி இருக்கிறது.

     வாட்ச்ஒஎஸ் 7.2

    புது அம்சங்கள் மட்டுமின்றி ஐபோனில் ஒஎஸ் தரப்பில் இருந்து வந்த பிழைகள் சரிசெய்யப்பட்டு இருக்கின்றன. ஐஒஎஸ் மட்டுமின்றி வாட்ச் ஒஎஸ் 7.2 அப்டேட்டும் வெளியிடப்பட்டு உள்ளது. ஐஒஎஸ் 14.3 மற்றும் வாட்ச்ஒஎஸ் 7.2 அப்டேட் மூலம் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் கார்டியோ பிட்னஸ் விவரங்களை பெற முடியும்.



    ஐஒஎஸ் 14.3 மற்றும் வாட்ச்ஒஎஸ் 7.2 மூலம் ஆப்பிள் வாட்ச் பயனர்கள் தங்களின் உடலில் கார்டியோ பிட்னஸ் அளவு குறைந்தால் உடனடியாக அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் நீண்ட காலத்திற்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.

    புதிய ஐஒஎஸ் 14.3 அப்டேட் பெற பயனர்கள் முதலில் சீரான வைபை இணைப்பில் இணைந்து கொள்ள வேண்டும். பின் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- சாப்ட்வேர் அப்டேட் போன்ற ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். பின் ஐஒஎஸ் 14.3 ஆப்ஷனை தேர்வு செய்து டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாட் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    புது ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9இ போன்ற மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடலில் வித்தியாசமான கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இதில் மூன்று கேமரா சென்சார்களும், பிளாஷ் யூனிட் கேமரா மாட்யூலினுள் வழங்கப்படுகிறது.

     ஒன்பிளஸ் 8டி

    இத்துடன் புது ஸ்மார்ட்போனில் வித்தியாசமான ஒன்பிளஸ் லோகோ காணப்படுகிறது. இது ப்ரோடோடைப் யூனிட் என்பதால் இந்த லோகோ வழங்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தோற்றத்தில் ஸ்மார்ட்போனின் முன்புறம் ஒன்பிளஸ் 8டி போன்றே காட்சியளிக்கிறது.

    புது ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஸ்ரீஷ் ரேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஹெச்டிஆர் வசதி, 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய எக்ஸ்1 சீரிஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை 32 இன்ச் ஹெச்டி மற்றும் 43 இன்ச் புல் ஹெச்டி வேரியண்ட்களில் கிடைக்கின்றன. 

    புதிய டிவி மாடல்கள் மெல்லிய பெசல்கள், இன்பினிக்ஸ் எபிக் 2.0 பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு கொண்டுள்ளன. இரு தொழில்நுட்பங்களும் டிவி பார்க்கும் போது தலைசிறந்த அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் ஹெச்டிஆர் 10 வசதி, அதிகளவு நிறங்கள், 400 நிட்ஸ் பிரைட்னஸ், காட்சிகளை அதிக துல்லியமாக காண்பிக்கும் திறன் கொண்டிருக்கின்றன. 

    இதில் வழங்கப்பட்டு இருக்கும் எல்இடி பேனல் ஹார்டுவேரில் புளு லைட் ரிடக்ஷன் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இன்பின்க்ஸ் நிறுவனத்தின் ஐ-கேர் தொழில்நுட்பத்தை டியுவி ரெயின்லாந்து சோதனை செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கி இருக்கிறது. 

     இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி

    இத்துடன் குவாட்கோர் மீடியாடெக் 6683 பிராசஸர், மாலி 470 MP3 GPU, 1 ஜிபி DDR4 ரேம், 8 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0
    ஒஎஸ், பில்ட் இன் குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார் போன்ற செயலிகளுக்கான வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 43 இன்ச் மாடலில் 3 x ஹெச்டிஎம்ஐ, ஏவி, யுஎஸ்பி 2.0 x 2, ஈத்தர்நெட், ஆப்டிக்கல் அவுட்புட், மினி, ஏவி, 32 இன்ச் மாடலில் 2 x ஹெச்டிஎம்ஐ, ஏவி, யுஎஸ்பி 2.0 x 2, ஈத்தர்நெட், ஆப்டிக்கல் அவுட்புட், மினி ஏவி வழங்கப்பட்டு இருக்கின்றன. 

    இன்பினிக்ஸ் 32எக்ஸ்1 32 இன்ச் ஹெச்டி டிவி விலை ரூ. 11,999 என்றும் இன்பின்க்ஸ் 43எக்ஸ்1 43 இன்ச் புல் ஹெச்டி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி துவங்குகிறது.
    ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    புது சலுகையின் படி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1250 வரை சேமிக்க முடியும். இந்த சலுகை சியோமி நிறுவன வலைதளத்தில் மட்டும் வழங்கப்படுகிறது. 

    ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,999 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 6 ஜி.பி. / 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89
    - 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன்
    - ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அரோரா புளூ, ஷேம்பெயின் கோல்டு, கிளேசியர் வைட் மற்றும் இன்டர்ஸ்டெல்லார் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்திய சந்தையில் நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இந்தியாவில் நோக்கியா பிராண்டின் முதல் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய லேப்டாப் 14 இன்ச் புல் ஹெச்டி ஸ்கிரீன், டால்பி விஷன், அல்ட்ரா வைடு பிக்சர் தரம், இன்டெல் ஐ5 10 ஆம் தலைமுறை குவாட்கோர் பிராசஸர், 8 ஜிபி ரேம், 512 ஜிபி NVMe SSD வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஹெட்போன்களுக்கு டால்பி அட்மோஸ் வசதி, விண்டோஸ் 10, ஹெச்டி ஐஆர் வெப்கேமரா, விண்டோஸ் ஹெலோ பேஸ் அன்லாக், பேக்லிட் கீபோர்டு, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரைட்னஸ், பிரெசிஷன் டச்பேட் மற்றும் பல்வேறு ஜெஸ்ட்யூர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

     நோக்கியா பியூர்புக் எக்ஸ்14

    நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 சிறப்பம்சங்கள்

    - 14 இன்ச் 1920x1080 பிக்சல் FHD எல்இடி பேக்லிட் IPS டிஸ்ப்ளே, டால்பி விஷன்
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ5-10210U பிராசஸர்
    - இன்டெல் UHD கிராபிக்ஸ் 620
    - 8 ஜிபி DDR4 2666MHz ரேம்
    - 512 ஜிபி NVMe எஸ்எஸ்டி மெமரி
    - ஹெச்டி ஐஆர் வெப்கேமரா
    - பில்ட்-இன் டூயல் மைக்ரோபோன்
    - பேக்லிட் கீபோர்டு
    - விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்
    - வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி 3.1 x2 / யுஎஸ்பி 2.0 x 1 / யுஎஸ்பி டைப் சி 3.1 x1
    - HDMI x 1, RJ45 x 1, ஆடியோ அவுட் x 1, மைக் இன் x 1
    - டூயல் ஸ்பீக்கர்கள், ரியல்டெக் ஹெச்டி ஆடியோ, டால்பி அட்மோஸ்
    - 46.7Wh பேட்டரி
    - 65 வாட் சார்ஜிங் 

    நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப் மேட் பிளாக் பினிஷ் கொண்டிருக்கிறது. இதன் முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. 

    குறு வீடியோ செயலியான டப்ஸ்மாஷ்ஐ ரெடிட் விலைக்கு வாங்கி இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆன்லைன் தளமான ரெடிட் வீடியோ பகிரும் செயலியான டப்ஸ்மாஷை விலைக்கு வாங்கி இருக்கிறது. வீடியோ தளத்தை ரெடிட் எவ்வளவு தொகைக்கு வாங்கி இருக்கிறது என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.  

    ஒப்பந்தத்தின் பிறகும் டப்ஸ்மாஷ் தனது பிளாட்பார்ம் மற்றும் பிராண்டிங்கில் மாற்றம் செய்யாது. ரெடிட் நிறுவனம் டப்ஸ்மாஷ் குழுவை ஒருங்கிணைத்து தற்போதுள்ள டப்ஸ்மாஷ் அனுபவத்தை மாற்றும் பணிகளில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.

     டப்ஸ்மாஷ்

    ரெடிட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி டப்ஸ்மாஷ் இணை நிறுவனர்களுடன் ஒட்டுமொத்த குழுவும் ரெடிட் உடன் இணைகிறது. டப்ஸ்மாஷ் வித்தியாசமான வீடியோ டூல்கள் ரெடிட் தளத்தில் ஒருங்கிணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் ரெடிட் பயனர்கள் தங்களின் கற்பனையை புதுவிதங்களில் வெளிப்படுத்த முடியும். டப்ஸ்மாஷ் தளத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 100 கோடி வியூக்களை பெற்று வருகிறது.

    ரியல்மி பிராண்டின் புதிய வாட்ச் எஸ் சீரிஸ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் வாட்ச் எஸ் மற்றும் வாட்ச் எஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை இந்திய சந்தையில் டிசம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு ரியல்மி சமூக வலைதள பக்கங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய வாட்ச் மாடல்களுடன் ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரியல்மி பிராண்டு இந்த ஆண்டு பல்வேறு ஐஒடி சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. தற்சமயம் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் ரியல்மி கவனம் செலுத்துகிறது.

     ரியல்மி வாட்ச் எஸ்

    முன்னதாக ரியல்மி வாட்ச் எஸ் சீரிஸ் பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அம்சங்களை பொருத்துவரை இது அமேஸ்பிட் வெர்ஜ் லைட் மற்றும் இதர வாட்ச் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. ரியல்மி வாட்ச் எஸ் மாடலில் 1.3 இன்ச் வட்ட வடிவ டிஸ்ப்ளே, 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.

    மேலும் இந்த வாட்ச் ஆட்டோ-பிரைட்னஸ் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பெரும்பாலான குறைந்தவிலை ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் வழங்கப்படாத அம்சம் ஆகும். இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் 10.5 இன்ச் ஐபேட் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 10.5 இன்ச் ஐபேட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஐபேட் தோற்றத்தில் 8 ஆம் தலைமுறை ஐபேட் போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஐபேட் மாடலில் 4 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் அளவில் மெல்லியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் ஹோம் பட்டன், டச் ஐடி சென்சார் மற்றும் லைட்னிங் கனெக்டர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபேட் 64 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கும் என தெரிகிறது.

     ஐபேட்

    விலையை பொருத்தவரை புதிய ஐபேட் மாடல் 299 டாலர்கள் முதல் துவங்கலாம் என தெரிகிறது. இதுதவிர எம்எம்வேவ் சப்போர்ட் கொண்ட உயர் ரக ஐபேட் ப்ரோ மாடல்களை 5ஜி கனெக்டிவிட்டியுடன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக எம்எம்வேவ் மாட்யூல்களை உற்பத்தி செய்வதாக தகவல் வெளியாகி இருப்பதால், புதிய ஐபேட்களிலும் இவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் அசத்தலான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான காப்புரிமையை பெற்று இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி போன்றே காட்சியளிக்கும் புதிய ஸ்மார்ட்பஓனிற்கானகாப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அளவில் பெரியதாகவும், பெரிய கவர் டிஸ்ப்ளே, அதிக கேமராக்கள் மற்றும் சிறப்பான ஹின்ஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த விண்ணப்பத்தை சாம்சங் நிறுவனம் ஜூன் 2020 வாக்கில் சமர்பித்து இருக்கிறது. இது மடிக்கக்கூடிய எலெக்டிரானிக் சாதனம் எனும் பெயரில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு டிசம்பர் 10 ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஹின்ஜ் பிளெக்ஸ் மோட் வசதி மட்டுமின்றி ஜீரோ-கேப் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புகைப்படங்களை மூன்று பிரைமரி கேமரா மாட்யூல், எல்இடி பிளாஷ் வழங்கப்படுகிறது. மேலும் உள்புற டிஸ்ப்ளே பன்ச் ஹோல் வழங்கப்படாது என கூறப்படுகிறது.

    முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் கவர் ஸ்கிரீன், 7.6 இன்ச் ஸ்கிரீனுடன் அறிமுகம் செய்தது. இது சாம்சங் நிறுவனத்தின் மூன்றாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும்.
    ×