என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சாம்சங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கேலக்ஸி சாதனங்களில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த புது செயலியை வெளியிட்டு உள்ளது.

    சாம்சங் நிறுவனம் கேம்டிரைவர் எனும் புது செயலியை வெளியிட்டு இருக்கிறது. இது தேர்வு செய்யப்பட்ட கேலக்ஸி சாதனங்களில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    சாம்சங் கேம்டெவ் திட்டத்தின் கீழ் இந்த செயலி அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் சாம்சங் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த அறிவித்து இருக்கும் செயலி, மொபைலில் கேமிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களை கவரும்.

     சாம்சங் கேம்டிரைவர்

    தற்சமயம் கேலக்ஸி எஸ்20 அல்லது நோட் 20 சாதனங்களை பயன்படுத்துவோர் கூகுள் பிளே அல்லது சாம்சங் கேலக்ஸி ஸ்டோரில் இருந்து கேம்டிரைவர் செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த செயலி கூகுள், ஏஆர்எம் மற்று்ம குவால்காம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    தற்சமயம் கால் ஆப் டியூட்டி மொபைல் மற்றும் போர்ட்நைட் போன்ற கேம்களை புதிய கேம்டிரைவர் செயலி சப்போர்ட் செய்கிறது. இந்த செயலி கிராபிக்ஸ் திறனை மொபைலில் மேம்படுத்தி வழங்குவதால், மொபைல் கேமர்களுக்கு இது சிறப்பான அனுபவத்தை வழங்கும்.
    இந்தியாவில் அமேஸ்பிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹூவாமி நிறுவனம் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்து விட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. முன்பதிவு அமேஸ்பிட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் டிசம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    அமேஸ்பிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை முன்பதிவு செய்வோருக்கு கூடுதலாக மாற்றிக் கொள்ளக்கூடிய ஸ்டிராப் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்போர்ட்ஸ் எடிஷன் மற்றும் அலுமினியம் அலாய் கேஸ் மற்றும் சிலிகான் ஸ்டிராப் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    இதன் சிலிகான் ஸ்டிராப் வெர்ஷன் விலை ரூ. 12,999 என்றும் கிளாசிக் எடிஷன் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் மற்றும் லெதர் ஸ்டிராப் கொண்ட வெர்ஷன் விலை ரூ. 13,499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

     அமேஸ்பிட் ஜிடிஆர் 2

    அமேஸ்பிட் ஜிடிஆர் 2 சிறப்பம்சங்கள்

    - 1.39 இன்ச் 454x454 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
    - ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சப்போர்ட் 
    - 12 ஸ்போர்ட் மோட்கள்
    - ஆக்டிவிட்டி டிராக்கிங்
    - பயோ டிராக்கர், 2 பிபிஜி டேட்டா சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM / 50 மீட்டர்கள்)
    - ப்ளூடூத் 5 LE, வைபை (2.4GHz), GPS+GLONASS
    - 3 ஜிபி மெமரி
    - மைக்ரோபோன் 
    - 471 எம்ஏஹெச் பேட்டரி
    அமேசான் வலைதளத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.


    அமேசான் ஆன்லைன் தளத்தில் ஆப்பிள் டேஸ் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் 7 மற்றும் இதர ஆப்பிள் சாதனங்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    அமேசானின் ஆப்பிள் டேஸ் சிறப்பு விற்பனை டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையின் போது ஐபோன் 11 மாடல் ரூ. 51,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

     ஐபோன் 11

    மேலும் இதுவரை இல்லாத வகையில் ஐபோன் 7 மாடல் ரூ. 23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் மட்டுமின்றி ஐபேட் மினி வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் சேமிப்பு மற்றும் ரூ. 3 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. 

    இதேபோன்று மேக்புக் ப்ரோ மாடலுக்கும் ரூ. 6 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுவும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. 

    சியோமி நிறுவனம் ரோலபில் ஸ்மார்ட்போன் உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    சியோமி நிறுவனம் ரோலபில் ஸ்மா்ட்போனிற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. இந்த விண்ணப்பம் அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு சமர்பிக்கப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் இருந்து டிஸ்ப்ளேவை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டது ஆகும்.

    இந்த காப்புரிமை 'Terminal with flexible screen' எனும் தலைப்பில் சமர்பிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அனுமதி 2020, அக்டோபர் 29 ஆம் தேதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது சர்வதேச காப்புரிமை அலுவலக தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    காப்புரிமை விவரங்களின் படி இந்த சாதனம் ரோலபில் பிளெக்சிபில் டிஸ்ப்ளே, பின்புறம் இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் ரோலபில் ஸ்கிரீனை அகல வாக்கில் 200 சதவீதம் வரை நீட்டிக்க முடியும்.
     
    முன்னதாக முன்புறம் சுழலும் வகையில் குவாட் கேமரா சென்சார் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சியோமி பெற்று இருந்தது. இதுதவிர உள்புறமாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சீனாவில் பெற்று இருக்கிறது.

    வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 948 விலையில் புதிதாக பேமிலி போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.


    வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 948 விலையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த பேமிலி போஸ்ட்பெயிட் சலுகையானது ஏற்கனவே அந்நிறுவனம் வழங்கி வரும் ரூ. 699 சலுகையின் வேறுப்பட்ட சலுகை ஆகும். புதிய ரூ. 948 சலுகையினை இருவர் பயன்படுத்த முடியும். 

    அதன்படி பிரைமரி பயனருக்கு அன்லிமிட்டெட் டேட்டாவும், இரண்டாவது இணைப்பிற்கு 30 ஜிபி அதிவேக டேட்டாவும் வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், 30 ஜிபி டேட்டா ரோல் ஒவர் வசதி வழங்கப்படுகிறது. மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி சேவை வழங்கப்படுகிறது.

    மேலும் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 சேவைக்கான சந்தா பிரைமரி இணைப்புக்கு மட்டும் வழங்கப்படுகிறது. தற்சமயம் வி ரூ. 948 சலுகை உத்திர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளிலும் இந்த சலுகை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக வி என்ட்ரி லெவல் போஸ்ட்பெயிட் சலுகை கட்டணங்கள் இம்மாத துவக்கத்தில் உயர்த்தப்பட்டன. அனைத்து சலுகைகளும் முந்தைய விலையில் இருந்து ரூ. 50 வரை உயர்த்தப்பட்டன. 

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இம்முறை இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பிரவுசர் பென்ச்மார்க் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போதைய தகவல்களின் படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-A526B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ52 ஜி என்றே அழைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருந்தது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 6 ஜிபி ரேம், பன்ச் ஹோல் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்புறம் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.  
    சாம்சங் நிறுவனம் 110 இன்ச் அளவில் மைக்ரோ-எல்இடி டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் 110 இன்ச் மைக்ரோ-எல்இடி டிவியை அறிமுகம் செய்து உள்ளது. தற்சமயம் இந்த பிரமாண்ட டிவி மாடல் கொரிய சந்தையில் பிரீ-சேல் செய்யப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு வாக்கில் இந்த டிவி சர்வதேச சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.

    முன்னதாக 2018 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சாம்சங் நிறுவனம் 146 இன்ச் அளவில் தி வால் எனும் டிவியை அறிமுகம் செய்து இருந்தது. எனினும், இது மாட்யூலர் வடிவில் பிரத்யேகமாக இன்ஸ்டால் செய்யக்கூடிய ஒன்றாக இருந்தது. புதிய 110 இன்ச் மாடல் வழக்கமான டிவி போன்று எளிதில் இன்ஸ்டால் செய்ய முடியும்.

    புதிய 110 இன்ச் மைக்ரோஎல்இடி டிவியில் மைக்ரோமீட்டர் அளவு கொண்ட எல்இடி லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள மைக்ரோ-எல்இடி-க்கள் தரமான பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இது நீண்டகாலம் உழைக்கும் என சாம்சங் தெரிவித்து உள்ளது.

    மேலும் இந்த டிவி 4K HDR தரவுகளை இயக்கும் வசதி கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளேவில் இருந்து பிளாக் மேட்ரிக்ஸ் மற்றும் பெசல்கள் கழற்றப்பட்டுவிட்டதாக சாம்சங் தெரிவித்து உள்ளது. இதில் உள்ள மல்டி-வியூ அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் 55 இன்ச் அளவில் நான்கு வெவ்வேறு தரவுகளை பார்க்க முடியும்.

    இந்த டிவி 5.1 சேனல் சவுண்ட் வசதி கொண்டிருக்கிறது. 110 இன்ச் மைக்ரோ-எல்.இ.டி. டிவி மாடல் விலை 156,400 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1.15 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    உலகில் முதல்முறையாக பிஎஸ்என்எல் வழங்கும் அசத்தல் சேவை பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பிஎஸ்என்எல் மற்றும் ஸ்கைலோடெக் இந்தியா நிறுவனங்கள் இணைந்து உலகில் முதல்முறையாக செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவையை இந்தியாவில் வழங்குகிறது. 

    இந்த சேவையின் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பம் கொண்டு இந்திய கடல் பகுதிகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி மற்றும் குஜராத் முதல் வட கிழக்கு இந்திய எல்லைகளுக்குள் சீரான இணைய வசதி வழங்கப்பட இருக்கிறது.

     பிஎஸ்என்எல்

    தற்சமயம் இந்த சேவை கனவரக வாகனங்கள், வணிக வாகனங்கள், ரெயில்வே மற்றும் மீன்படி படகுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய தொழில்நுட்பம் செல்லுலார் கிரேடு ஹார்டுவேர் கொண்டு தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள இருக்கிறது.

    புதிய தொழில்நுட்பத்தை கொண்டு அதிக தரமான சேவையினை மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்க முடியும் என ஸ்கைலோடெக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் இந்தியா முழுக்க இணைய சேவையை அனைவருக்கும் வழங்க முடியும்.
    சியோமி நிறுவனத்தின் எம்ஐ வாட்ச் லைட் ஸ்மார்ட்வாட்ச் சர்வதேச சந்தையில் சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    சியோமி நிறுவனம் சர்வதேச சந்தையில் புதிய எம்ஐ வாட்ச் லைட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எம்ஐ வாட்ச் லைட் மாடல் அந்நிறுவனத்தின் சர்வதேச வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சர்வதேச சியோமி வலைதளத்தில் எம்ஐ வாட்ச் லைட் சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பை விளக்கும் புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கின்றன. எனினும், இதன் விலை மற்றும் விற்பனை பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.

     எம்ஐ வாட்ச் லைட்

    புதிய எம்ஐ வாட்ச் லைட் மாடலில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி வாட்ச் மாடலில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சதுரங்க வடிவம், 1.4 இன்ச் கலர் டிஸ்ப்ளே, வலதுபுறத்தில் பவர் பட்டன், 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

    இத்துடன் 11 ஸ்போர்ட்ஸ் மோட்கள், 9 நாட்கள் பேட்டரி பேக்கப், அதிகபட்சம் 120 வாட்ச் பேஸ்களுக்கான சப்போர்ட், எமோஜி சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் உள்ள பிபிஜி சென்சார் பயனரின் இதய துடிப்பு விவரங்களை தொடர்ந்து டிராக் செய்யும். 

    எம்ஐ வாட்ச் லைட் மாடலில் 230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மியூசிக் கண்ட்ரோல் வசதி, ஐடில் அலெர்ட்கள், கால், ஆப்ஸ் மற்றும் நோட்டிபிகேஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    பேஸ்புக் மீது அமெரிக்காவில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட விவகாரத்தில் அந்நிறுவன அதிகாரி பதில் அளித்து இருக்கிறார்.


    உலகின் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் மீது அமெரிக்காவில் 45 மாகாணங்களில் அரசு வக்கீல்கள் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க அரசு எடுத்துள்ள மிக முக்கியமான சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

    தனது போட்டி நிறுவனங்களை வாங்குவதற்கும், போட்டிகளை தடுப்பதற்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றை சொந்தமாக வாங்கி நிர்வகித்து வரும் இந்த நிறுவனத்தை உடைப்பது குறித்து பரிசீலினை செய்ய அதிகாரிகள் கோர்ட்டுகளை கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுபற்றி பேஸ்புக் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் புகார்களை ஆய்வு செய்கிறோம். இதுபற்றி விரைவில் விரிவாக சொல்வோம். பெடரல் வர்த்தக ஆணையம் (எப்டிசி) எங்கள் கையகப்படுத்துதல்களை அனுமதித்துள்ளது” என கூறியது.

    பேஸ்புக், பேஸ்புக் மெசேஞ்சர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானவை, அவற்றை மாதம்தோறும் 100 கோடி பேருக்கு மேல் உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் வெளியிடப்படுகிறது.

    சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு இரண்டு சாப்ட்வேர் அப்டேட் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் பெரும்பாலான ரெட்மி மற்றும் எம்ஐ சாதனங்களுக்கு எம்ஐயுஐ 12 அப்டேட் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன.

    தற்சமயம் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்க துவங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பை சியோமி நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருக்கிறது.

     ரெட்மி டீசர்

    ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் கொரோனாவைரஸ் ஊரடங்கு அறிவிக்கும் முன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இது தற்சமயம் வரை முதன்மையான நோட் சீரிஸ் மாடலாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எம்ஐயுஐ 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியிடப்பட்டது. 

    ரெட்மி நோட் 9 ப்ரோ தவிர எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போனிற்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இது சியோமியின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 44,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சியோமி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு ரெட்மி இந்தியா சமூக வலைதள கணக்கில் பதிவிடப்பட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் பவர் பேக்டு மாடலாக இருக்கும் என சியோமி குறிப்பிட்டுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

     ரெட்மி 9 பவர்

    ரெட்மி இந்தியா பதிவுகளின் படி ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக வலைப்பக்கம் அமேசான் தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஹைரெஸ் ஆடியோ மற்றும் நான்குவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ×